Advertisment

நான் அப்படிப்பட்டவளா? -சீறும் சின்ன நடிகை!

/idhalgal/cinikkuttu/am-i-such-great-little-actress

"சின்ன நடிகையால் சீரழியும் டைரக்டர்கள்!' என்ற தலைப்பில் 2019 அக். 22 தேதியிட்ட "சினிக்கூத்து' இதழில் அட்டைப்படச் செய்தி வெளியிட்டிருந் தோம். அந்த செய்தியில் சம்பந்தப்பட்ட சின்ன நடிகையான சரண்யா, நம்மைத் தொடர்புகொண்டு, ""சார் "சினிக்கூத்து' இதழில் என்னைப் பற்றி வந்துள்ள செய்திக்கு விளக்கம் சொல்ல விரும்பு றேன். இப்ப நான் தீபாளிக்காக எங்க ஊருக்கு வந்திருக்கேன். சென்னை வந்ததும் உங்களை நேரில் சந்தித்து என் தரப்பு விளக்கத்தைச் சொல்றேன்'' என படபடப்பாகப் பேசினார்.

Adver

அவர் சொன்னதுபோலவே கடந்த வாரம் நம்மை நேரில் சந்தித்தார். "" "சினிக் கூத்து' இதழில் வெளியான செய்திக்கு என்ன விளக்கம் சொல்லப் போறீங்க...?'' என நாம் கேட்டதும், ""சார் முதலில் என்னைப் பத்தி சொல்லிடுறேன். அப் புறமா அந்த நியூஸுக்கு விளக்கம் சொல்றேன். திருச்சி- மணப்பாறை பை-பாஸ் சாலையில் இருக்கும் கே.கள்ளிக்குடிதான் என்னோட சொந்த ஊர். பி.எஸ்.சி. மைக்ரோ பயாலஜி முடிச்சிட்டு, எம்.எஸ்.சி.யும் படிக்க ஆரம் பிச்சேன். அந்த நேரத்துல எங்க அப்பா ரவிச்சந்திரன் ஒரு ஆக்சிடெண்ட்ல சிக்கி, ஏகப்பட்ட மருத்துவச் செலவு. பலரிடம் கடன் வாங்கிப் படிச்சு முடிச் சுட்டு வேலை தேடி சென்னைக்கு வந்தேன்.

மெடிக்கல் ரெப்பா சில மாதங் கள்... ஒரு எம்.என்.சி. கம்பெனில குவாலிட்டி கன்ட்ரோலரா சில மாதங்கள்னு பொழப்பு ஓடுச்சு.

அதற்கப்புறம் "தீரன் டி.வி.'-யில ஆங்கரிங்கா ஒர்க் பண்ணினேன்.

அங்க வேலை பார்க்கும்போது எடிட்டர் பாலாஜி சார் என்னை வச்சு ஷார்ட் ஃபிலிம் எடுத்தார். 50-க்கும் மேற்பட்ட ஷார்ட் ஃபிலிம்களில் நடிச்ச அனுபவத்தை வச்சுத்தான் சினிமாவுக்கு டிரை பண்ணினேன்.

Advertisment

ss

"காதலும் கடந்து போகும்' தான் என்னோட முதல் படம்.

அதன்பின் "ஆறாது சினம்', "றெக்கை', "வடசென்னை', "ராட்சன்', "மேயாத மான்', "தர்மபிரபு' போன்ற படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடிச்சு ஓரளவு முகம் தெரிந்த நடிகையானேன். இப்போது "சீறு', "சங்கத் தலைவன்', "வெள்ளை யானை', வசந்த பாலன் சாரின் "ஜெயில்' போன்ற படங்களில் நடிச்சுக்கிட்டிருக்கேன்'' என சொல்லிக் கொண்டே வந்தவரிடம், ""சரிங்க. பெரிய டைரக்டர்களுடன் உங்களை இணைத்து செய்திகள் வருதே'' என்றோம்.

""இதெல்லாம் தெரிஞ்சுதான் தைரியமான மனநிலையுடன் இருக்கி றேன். ஏன்னா நான் நேசிக்கும் துறை சினிமாதான். என்னை யார் யாருடன் இணைத்துப் பேசுகிறார்களோ, அவர் களும் அவர்கள் குடும்பமும் ரொம்பவே கஷ்டப்படும். எனக் குத் தெரிந்த சினிமா நண்பர்கள், நடிகர்கள், டைரக்டர்கள் எனக்கு உதவி செய்வது, என்னைப் பற்றிப் பேசுபவர் களுக்குப் புடிக்கல. அவர் களின் கண்களுக்கு அது உதவியாக தெரியாமல் வேறு ஏதோவாகத் தெரிகிறதுபோல. இதற்கு நான் பொறுப்பாக முடியாது'' என சீறினார் சரண்யா ரவிச்சந்திரன்.

-ஈ.பா. பரமேஷ்வரன்

cini261119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe