Advertisment

இதெல்லாம் ஹிட்டாடா... -அம்ரிஷை கலாய்த்த அம்மா ஜெயசித்ரா!

/idhalgal/cinikkuttu/all-hatita

amresh

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் தயாரிப்பில், ராகவா லாரன்சின் "மொட்ட சிவா கெட்ட சிவா' மூலம் மியூசிக் டைரக்டராக அறிமுக மானவர் அம்ரிஷ். அதன்பின் அரவிந்த் சாமியின் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்', சின்ன மச்சான், செவத்த மச்சான் பாட்டு செம ஹிட் அ

amresh

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரியின் தயாரிப்பில், ராகவா லாரன்சின் "மொட்ட சிவா கெட்ட சிவா' மூலம் மியூசிக் டைரக்டராக அறிமுக மானவர் அம்ரிஷ். அதன்பின் அரவிந்த் சாமியின் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்', சின்ன மச்சான், செவத்த மச்சான் பாட்டு செம ஹிட் அடித்த "சார்லி சாப்ளின்-2' என படிப்படியாக வளர்ந்துவரும் அம்ரிஷூக்கு இந்த வாரம் "பொட்டு', "சத்ரு' என டபுள் ஜாக்பாட் அடித் திருக்கிறது. இந்த ஜாக்பாட்டுகளுடன் வருகிற 28-ஆம் தேதி தந்தை யாகப்போகும் மகிழ்ச்சியில் நம்மிடம் மனம்விட்டுப் பேசினார் அம்ரிஷ்.

Advertisment

""மியூசிக் டைரக்டர்களெல்லாம் ஹீரோவா நடிக்கும்போது நீங்க ஏன் நடிக்கக் கூடாதுன்னு கேட்குறாங்க. என்னை அறிமுகப்படுத்திய சௌத்ரி சார்கூட "ஹீரோவா இல்லாட்டியும், வெயிட்டான கேரக்டர் ரோல்ல நீ நடிக்கலாமே'ன்னாரு. "வேணாம் சார். நான் இப்படியே இருந்துட்டுப் போறேன்'னு சொல்லிட்டேன்.

Advertisment

"சார்லி சாப்ளின் -2'-வில் வந்த ""சின்ன மச்சான் செவத்த மச்சான்'' பாட்டு பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆச்சு. அந்தப் பாட்டை எங்க அம்மாவிடம் போட்டுக் காட்டிய போது, "இந்தப் பாட்டெல்லாமாடா ஹிட் ஆச்சு? எங்க காலத்துல எப்படியாப்பட்ட பாட்டெல்லாம் ஹிட் ஆச்சு தெரியுமா"?'ன்னு சிரிச்சுக் கிட்டே சொன்னாங்க'' என செம கலகலப்பாகவே பேசினார் அம்ரிஷ்.

அம்ரிஷைக் கலாய்த்த அந்த அம்மா வேறு யாருமல்ல; அந்தக் காலத்து ஹிட் ஹீரோயினான ஜெயசித்ராதான்.

cine190319
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe