லாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி யிருக்கிறார்கள். அதைப்போன்ற ஒரு கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும், இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்றவகையில் "ஆலம்பனா' எனும் படம் தயாராகிறது.

Advertisment

vv

"விஸ்வாசம்' படத்தை வெளியிட்டு பெருவெற்றியைக் கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகி றார் பாரி. கே. விஜய். இவர் "முண்டாசுப்பட்டி', "இன்று நேற்று நாளை' படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றிவர். வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடி யாக பார்வதி நடிக்கிறார்.

Advertisment

இதுவரை வந்த வைபவ் படங்களிலே "ஆலம்பனா' தான் மிகப்பெரிய பட்ஜெட் டில் உருவாகிறது. முனிஸ் காந்த் முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்க, பல வருடங்களுக் குப்பிறகு, பட்டிமன்றங் களின் ஹீரோ திண்டுக்கல் ஐ. லியோனி இப்படத்தில் நடிக்கிறார். காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். முரளிசர்மா ஒரு கேரக்டரில் நடிக்க, "வேதாளம்' படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.

ஹிப்ஹாப் ஆதி இசை யமைக்கிறார். "நெடுநால்வாடை' வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்க, பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.

Advertisment