ஜெயலலிதா வாழ்க்கையை ஆளாளுக்கு சினிமாவாகவும், வெப்சீரியலாகவும் எடுத்துவருகிறார்கள். புஷ்கர்- காயத்ரியிடம் உதவி இயக்குநராக இருந்த ஒரு பெண்மணியும் ஜெயலலிதா வாழ்க்கையைப் படமாக எடுத்தே தீருவேன் என களத்தில் குதித்துள் ளார். அந்த வரிசையில் ஏ.எல். விஜய்யும் "தலைவி' என்ற பெயரில் ஜெ.வின் வாழ்க்கைக்கதையில் கங்கனா ரணவத்தை ஜெயலலிதாவாக்கி ஷூட்டிங் நடத்திவரு கிறார். இதில் சசிக லாவாக ப்ரியா மணியும், எம்.ஜி.ஆராக நடிப் பதற்கு அரவிந்த் சாமியும் கமிட்ஆகியுள்ளனர்.

ww

இந்தப் படத்தின் விளம்பரம் வந்தபோதே ஜெயலலிதா அபிமானிகள் மட்டுமல்ல; சினிமா ரசிகர்களே சிரியோ சிரியென சிரித்தார்கள். ஏன்னா விளம்பரத்தில் இருந்த ஜெயலலிதா (அதாங்க கங்கனா) ஏதோ மெழுகு பொம்மையில ஜெ. படத்தை ஏனோதா னோவென வரைந்த ஸ்டிக்கரை ஒட்டுனமாதிரி இருந்துச்சு.

Advertisment

ஜெயலலிதா செத்ததும், என்னமோ அவர்மேல பாசமும் பற்றும் பெருகி ஓடுறமாதிரி, ஏடிஎம்கே. ஆபீஸ்ல, அலங்கோலமா ஒரு ஜெயலலிதா சிலையைக் கொண்டுவந்து வச்ச கூத்து நடந்துச்சே. அதவிட பெருங்கூத்துதான் ஏ.எல். விஜய்யின் "தலைவி' விளம்பரக் கூத்து.

""ஏ.எல். விஜய் எடுத்த எந்தப் படமா வது உருப் படியா இருந்துச் சா?இல்ல கலெக்ஷன்தான் பண்ணுச்சா? "மதராசப் பட்டணம்'னு ஒரு படம், அப்படியே "டைட்டானிக்' உல்டான்னு எல்லாருக்கும் தெரியும். அதுலகூட சுதந்திரப் போராட்ட வரலாற்றைக்கூட தப்பும் தவறுமாக சொல்லி கேவலப்படுத்துனாரு. இவரை நம்பி "தலைவி' படத்தை எடுக்கும் தயாரிப்பாளர்கள் விஷ்ணுவர்தன் இந்தூரியும், சைலேஷ் சிங்கும் என்ன பாடு படப்போகிறார்களோ'' என்கிறார் கோடம்பாக்கத்தின் முக்கியத் தயாரிப்பாளர் ஒருவர்.

qq

Advertisment

முன்னணி இயக்குநர் ஒருவ ரிடம் இணை இயக்குநராக இருக்கும் ஒருவர் நம்மிடம் பேசும்போது, ""வருடக் கணக்கில் படங்கள் எடுத்து இழுத்தடிக்கும் டைரக்டர் கௌதம் மேனன்கூட "குயின்' என்ற பெயரில் ஜெ. வாழ்க்கையை வெப் சீரிஸாக பக்காவாக எடுத்துவருகிறார்.

ஜெ. வேடத்திற்கு ரம்யா கிருஷ்ணன், செம மேட்சிங்காக இருக்கார். அதேபோல் சோபன் பாபுவுடன், ஜெயலலிதா கோயிங் ஸ்டெடி வாழ்க்கை நடத்திய கதையையும் சொல்லப்போறார் கௌதம் மேனன். இதெல் லாம் சுட்டுப் போட்டாலும் ஏ.எல். விஜய்க்கு வரவே வராது'' என்றார்.

அந்த ரெண்டுபேரும் சொல்றது சரிதான்னு நமக்கும் தோணுது.