Advertisment
/idhalgal/cinikkuttu/akori

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் "அகோரி' என்கிற படம் உருவாகிவருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. Akoriமேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் டி.எ

சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் "அகோரி' என்கிற படம் உருவாகிவருகிறது. ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. Akoriமேனனுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் டி.எஸ். ராஜ்குமார் .

Advertisment

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை.

Advertisment

சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். இவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர். படத்தின் கதை, தன் தோற்றம் எல்லாம் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான ஹரித்துவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக கேரள காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகள் படமாகியுள்ளன.

தெலுங்கில் "சஹா' படத்தின்மூலம் புகழ்பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 அடியாகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்.

""இந்தப் பாத்திரமும் அதன் தோற்றமும் நடிப்பும் என் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்கும் என நம்புகிறேன்"" என்றார் ஷாயாஜி ஷிண்டே. ஆகஸ்ட் வெளியீடாக வருகிறது "அகோரி.'

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe