Advertisment

அஜீத்தின் கருணை! நயன்தாராவின் கரிசனம்!

/idhalgal/cinikkuttu/ajiths-grace-nayantaras-concern

ல அஜீத்- சிவா காம்பினேஷனில் தயாராகும் "விசுவாசம்' முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்துவிட்டது. காவேரி மருத்துவனைக்குச் சென்று, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலிலினிடம் கலைஞரின் உடல்நலன் குறித்து விசாரித்த அஜீத், ராஜாஜி ஹாலுக்குச் சென்று கலைஞரின் உடலுக்கு இறுதி அஞ்சலிலியும் செலுத்தினார்.

Advertisment

சென்னையில் சில வாரங்கள் தங்கியிருந்த அஜீத், "விசுவாச'-த்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங

ல அஜீத்- சிவா காம்பினேஷனில் தயாராகும் "விசுவாசம்' முக்கால்வாசி ஷூட்டிங் முடிந்துவிட்டது. காவேரி மருத்துவனைக்குச் சென்று, தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலிலினிடம் கலைஞரின் உடல்நலன் குறித்து விசாரித்த அஜீத், ராஜாஜி ஹாலுக்குச் சென்று கலைஞரின் உடலுக்கு இறுதி அஞ்சலிலியும் செலுத்தினார்.

Advertisment

சென்னையில் சில வாரங்கள் தங்கியிருந்த அஜீத், "விசுவாச'-த்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கிற்காக மீண்டும் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவுக்குச் சென்றுள்ளார். "விசுவாசம்' படத்தில் அஜீத்தின் கேரக்டர் பெயர் தூக்கு துரை. தேனி மாவட்டம், கொடுவிலாரன் பட்டி என்ற கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவம்தான் படத்தின் கதையாம்.

Advertisment

ajith

"விசுவாச'-த்தில் அஜீத்தின் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா, நர்ஸ் கேரக்டரில் நடிக்கிறாராம். ஷூட்டிங்கின் போது, ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள், லைட்மேன்கள், கேமரா உதவியாளர்கள் ஆகியோரைத் தேடித் தேடிப்போய், ""எல்லாரும் சாப்பிட்டீங்களா? சாப்பாடு நல்லா இருக்கா'' என அன்போடு விசாரிப்பதோடு, நளபாக தொழிலாளர் களிடம் போய், ""அண்ணே என்னை மாதிரி ஆட்களைக் கவனிக்குறது முக்கியமில்ல; தொழிலாளர்களுக்கு வாய்க்கு ருசியாவும், வயிற்றுக்கு நிறைவாகவும் சாப்பாடு இருக்கணும்ணே.

அவர்கள் மனசு நிறைஞ்சாத்தான், எங்க வாழ்க்கை நிறைவா இருக்கும்'' என ரொம்பவே கரிசனத்தோடு பேசி அனைவரையும் மனமுருக வைக்கிறாராம் நயன்.

நயன் அப்படி என்றால், தல அஜீத்தோ தனி ஸ்டைலிலில் கலக்குகிறாராம். அஜீத்தின் வெறித்தனமான ரசிகர்கள் 30 பேர் சென்னையிலிருந்து கிளம்பி ஹைதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவுக்கு அஜீத்தைப் பார்க்கச் சென்றனராம். ரசிகர்கள் வந்திருக்கும் விஷயம் அஜீத்துக்கு தெரிந்ததும், ஹோட்டலிலில் இருந்து கிளம்பி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார். ரசிகர்களைப் பார்த்ததும் உணர்ச்சி வசப்பட்டவராக, ""என்னைத் தேடி இவ்வளவு தூரம் வரணுமா? உங்களோட அன்பு என்னைக்கும் எனக்குண்டு. எல்லாரும் சாப்பிட் டுட்டு சென்னைக்குப் புறப்படுங்க'' எனச் சொல்லிலி அனைவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து அனுப்பினாராம்.

""தல-ன்னா இவரு தாண்டா ஒரிஜினல் தல'' என மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தபடியே சென்னை திரும்பியிருக்கிறார்கள் அந்த ரசிகக் கண்மணிகள்.

cine280818
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe