Advertisment

ஹன்ஸிகாவை மிரட்டிய அஜால்-குஜால் ஆசாமி!

/idhalgal/cinikkuttu/ajal-gujal-azmi-who-threatened-hansika

றிமுக இயக்குனர் யு.ஆர் ஜமீல் டைரக்ஷனில் தனது 50-ஆவது படமான "மஹா' தயாராகப்போகும் மெகா சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்ஸிகா. "மஹா'-வுக்காகத் தயாரிப்பாளர் மதியழகன் பல கோடிகளை வாரியிறைக்க ரெடியாகிவிட்டார்.

Advertisment

jameelஇந்த நேரத்துலதான், நல்லவன் சம்பாதிக்கிறத நாற வாயன் கெடுத்தமாதிரி, மகேஷ் என்ற அக்கப் போர் பார்ட்டி, ஹன்ஸிகாவுக்கு கொலை மிரட்டல் விட்டுருக்கு. ஆரா (ஆன்ழ்ஹ ஈண்ய்ங்ம்ஹள்) சினிமாஸ் என்ற பேரில் சிலபல சினிமாக்களை விநியோகம் செய

றிமுக இயக்குனர் யு.ஆர் ஜமீல் டைரக்ஷனில் தனது 50-ஆவது படமான "மஹா' தயாராகப்போகும் மெகா சந்தோஷத்தில் இருக்கிறார் ஹன்ஸிகா. "மஹா'-வுக்காகத் தயாரிப்பாளர் மதியழகன் பல கோடிகளை வாரியிறைக்க ரெடியாகிவிட்டார்.

Advertisment

jameelஇந்த நேரத்துலதான், நல்லவன் சம்பாதிக்கிறத நாற வாயன் கெடுத்தமாதிரி, மகேஷ் என்ற அக்கப் போர் பார்ட்டி, ஹன்ஸிகாவுக்கு கொலை மிரட்டல் விட்டுருக்கு. ஆரா (ஆன்ழ்ஹ ஈண்ய்ங்ம்ஹள்) சினிமாஸ் என்ற பேரில் சிலபல சினிமாக்களை விநியோகம் செய்தார் மகேஷ். எத்தனை நாளைக்குத்தான் விநியோகம் பண்ணிக்கிட்டே இருக்குறது? "நாமளே' படம் தயாரிப்போம்னு களத்துல குதித்தார் மகேஷ்.

Advertisment

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷின் தந்தை, காங்கிரஸ் கட்சியில் இருப்பவர். கோடம்பாக்கத்திற்கு வந்த சில வருடங்களிலேயே கிடுகிடுவென வளர்ந்த மகேஷைப் பார்த்து, சீனியர் தயாரிப்பாளர் களே திகிலடித்துப் போயினர்.

பல ரூட்டுகளில் விசாரித்த பின் தான், மகேஷ் ஒரு ஏடாகூடப் பார்ட்டி, அஜால்குஜால் பேர்வழி என்று தயாரிப்பாளர்களுக்குத் தெரிந்தது. இருந்தாலும் மகேஷ் வீசிய பணக்கட்டுகளுக்கு பல தயாரிப்பாளர்கள் பல் இளித்தனர்.

சரி, இப்ப கரன்ட் மேட்டருக்கு வருவோம். முரளி மகன் அதர்வா- ஹன்ஸிகா ஜோடியில் "100' என்ற படத்தை ஆரம்பித்தார் மகேஷ். ஹன்ஸிகாவுக்கு 75 லட்சம் சம்பளம் பேசி 35 லட்சம் அட்வான்சும் கொடுத்துவிட்டு ஷூட்டிங்கை ஆரம்பித்தார் மகேஷ். முக்கால்வசி ஷூட்டிங் முடிந்த நிலையில் மீதி சம்பளத்தை ஹன்ஸிகா கேட்டபோது, 40 லட்சத்திற்கு 5 செக்குகளைக் கொடுத்திருக்கிறார் மகேஷ்.

hanshikahanshika

கடைசி மூன்று நாட்கள் ஷூட்டிங் இருந்த நிலையில் மகேஷ் கொடுத்த செக்குகளை ஹன்ஸிகா பேங்கில் போட்டபோது, ரிட்டர்ன் ஆகிவிட்டது. இதுபத்தி மகேஷிடம் கேட்டபோது, சரியான பதில் இல்லை. இதனால் டென்ஷனான ஹன்ஸிகா, நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டு, ஷூட்டிங்கிற்கு வர மறுத்துவிட்டார். ஏடாகூடமான எங்கிட்டயே சேட்டையா என கடுப்பான மகேஷ், ஃபுல்லா மப்பை ஏத்திக்கிட்டு, ஹன்ஸிகாவை செல்ஃபோனில் கான்டாக்ட் பண்ணி, ""ஒழுங்கு மரியாதையா ஷூட்டிங்கிற்கு வரலேன்னா, தமிழ் சினிமாவுல மட்டுமல்ல; எந்த மொழி சினிமாவுலயும் நடிக்க முடியாதபடி மூஞ்சில ஆசிட் அடிச்சிருவேன்'' என கொலை மிரட்டல் விட்டதும் நடுநடுங்கிப்போன ஹன்ஸிகா வின் தாயார் மோனா, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துவிட்டு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

ஏற்கெனவே விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் கள் சங்கம் ததிகினத்தோம் போட்டுக்கிட்டிருக்கு. இதுல ஹன்ஸிகாவுக்கு நியாயமாவது வெங்காயமாவது.

-பரமேஷ்

cine180918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe