Advertisment

இந்த வயசுல இப்படியுமா?

/idhalgal/cinikkuttu/age

ஹாலிவுட்டில் நடிகை யாகவும் பாடகியாகவும் பட்டையக் கிளப்பியவர் ஜெனிபர் லோபஸ். இப்போது அவருக்கு வயது 50. பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைத்தாலும், இன்னும் பொன்போல ஜொலிலிக்கத்தான் செய்கிறார் ஜெனிபர் லோபஸ். எந்த மொழி, எந்த நாட்டு சினிமாவாக இருந்தாலும், இப்போதெல்லாம் வயதான நடிகைகள், மார்க்கெட் இழந்த நடிகைகள், தங்களது இருப்பை வெளிப்படுத்த நினைக்கும் நடிகைகள் "மீ டூ'-வில்

ஹாலிவுட்டில் நடிகை யாகவும் பாடகியாகவும் பட்டையக் கிளப்பியவர் ஜெனிபர் லோபஸ். இப்போது அவருக்கு வயது 50. பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைத்தாலும், இன்னும் பொன்போல ஜொலிலிக்கத்தான் செய்கிறார் ஜெனிபர் லோபஸ். எந்த மொழி, எந்த நாட்டு சினிமாவாக இருந்தாலும், இப்போதெல்லாம் வயதான நடிகைகள், மார்க்கெட் இழந்த நடிகைகள், தங்களது இருப்பை வெளிப்படுத்த நினைக்கும் நடிகைகள் "மீ டூ'-வில் போட்டுப் பொளக்கிறார்கள்.

Advertisment

ஆனால் ஜெனிபர் லோபஸோ இந்த வயதிலும் தனது உடற்கட்டை வெளிப்படுத்தும் வகையில் உடலிலின் ஒரு பகுதியை முழுமையாக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த போஸில் மயங்கிய ரசிகர்கள், 24 மணி நேரத்தில் அவருடைய இன்ஸ்டாகிராமில் 40 லட்சம் லைக்குகளும், 85 ஆயிரம் கமென்டுகளையும் குவித்துவிட்டார்களாம்.

Advertisment

jenifer

அதே ஃபோட்டோவை வைத்து மீம்ஸ்களையும் போட்டுத் தாக்கிவிட்டார்கள்.

""எனது அற்புதமான இந்த உடல் ஏராளமான, கடுமையான உழைப்பின் பலன். எனது உடல்மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறேன் என்பதற்கு இந்த ஃபோட்டோக்களே சாட்சி. நான் காபி, மது அருந்துவதில்லை. (ஆத்தாடி இது என்ன புதுசா இருக்கு!) நைட் பத்து மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன்'' என தனது பாடி ரகசியத்தைச் சொல்லியிருக்கிறார்.

மேலும், அவரே சொல்வது என்னன்னா...

""2002 முதல் 2004 வரை ஹாலிலிவுட் நடிகர் பென் அஃப்லெகுடன் வாழ்க்கை நடத்தினேன். இப்போது பேஸ்பால் விளையாட்டு சாமான்கள் விற்கும் அலெக்ஸ் ரோட்ரிக்சுடன் டேட்டிங்கில் இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியிலோ, இடத்திலோ நம்மைக் காட்டிலும் அழகானவர்கள் நிறைந்திருந்தால், அவர்கள் மத்தியில் நம்மை சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்'' என உண்மையும் தத்துவமும் பேசுகிறார் ஜெனிபர் லோபஸ்.

இப்பவும் பிஸியான நடிகை, பாடகி, தயாரிப்பாளர் என சகலகலாவல்லிலியாக ஜொலிலிக்கிறார் ஜெனிபர் லோபஸ். கடந்த ஒன்றரை ஆண்டில் இவர் பாடிய இசை ஆல்பங்களின் விற்பனை எண்ணிக்கை எட்டு கோடி. இவர் நடித்த ஹாலிலிவுட் படங்கள் 290 கோடி டாலர் வசூல் செய்துள்ளன.

"இந்த வயசுல இப்படியுமா...!' என இப்போதிருக்கும் ஹாலிலிவுட் ஹீரோயின் களையெல்லாம் வாய் பிளக்க வைத்திருக்கி றார் ஜெனிபர் லோபஸ்!

-007

cini011019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe