ரண்டாண்டுகள் இடைவெளிக் குப்பின் தனது 11-ஆவது படத்தை இயக்குகிறார் சேரன். "திருமணம்- சில நிபந்தனைகளுடன்' என்ற அந்தப் படத்தில் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி கதாநாயகனாகவும் காவ்யா சுரேஷ் என்ற புதுமுகம் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். மற்ற கேரக்டர்களில் சுகன்யா, மனோ பாலா, ஜெயப்பிரகாஷ், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

cheran

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார் விஜய் சேதுபதி. ""இரண்டு ஆண்டு இடைவெளி என்னைப் பக்குவப்படுத்தியுள்ளது. அந்தப் பக்குவம் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு என்னை தெம்பாக வைத்திருக்கும். விஜய் சேதுபதியை வைத்து விரைவில் படம் பண்ணு வேன்'' என நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் பேசினார் சேரன்.

விழாவுக்கு முன்பாக தனது பிறந்தநாளை, தாய்- தந்தை, மகளு டன் கொண்டாடினார் சேரன்.