னோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் படம் "மீண்டும் ஒரு மரியாதை'.

Advertisment

அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம்பெண்ணும் தத்தமது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிகொள் கிறார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக தமக்கே உரிய தனித்துவமான விதத்தில் படைத்திருக் கிறார் இயக்குநர் பாரதிராஜா.

Advertisment

bh

பாரதிராஜாவுக்கு இணையாக ராசி நட்சத்ரா இடம்பெற, முக்கிய வேடத்தில் மௌனிகா பாலுமஹேந்திரா மற்றும் ஜோ மல்லூரி நடிக்கிறார்கள். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, கேஎம்கே. பழனிவேல் படத்தொகுப்பு பொறுப்புகளைக் கவனிக்க, மதன் கார்கி வசனம் எழுதியிருக்கிறார்.

கலை- மோகனமகேந்திரன், நடனத்திற்கு கூல் ஜெயந்த், பிரசன்னா, ஷண்முக சுந்தர் ஆகியோர் பங்களிக்க, கம்பம் சங்கர் வடிவமைப்பு பணிகளைச் செய்திருக்கிறார்.

Advertisment

சபேஷ்- முரளி பின்னணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து, மதன் கார்கி, நா. முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் ஆகியோர் பாடல்களை எழுத, என்.ஆர். ரகுநந்தன் பாடல்களைப் படைத் திருக்கிறார்.

பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இதுபோக மேலும் இரண்டு படங்களை தயாரித்து, டைரக்ட் பண்ணுவதில் முனைப்புடன் இறங்கியுள்ளார் இயக்குநர் இமயம்.