Advertisment
/idhalgal/cinikkuttu/adventure-travel

dddவிஜியாலயா பிலிம்ஸ் எஸ்.சந்திரன் வழங்கும், "கலக்கல் ஸ்டார்' பரமேஸ்வரர் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் "சாதனை பயணம்.' மாதேஷ்வரா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அழகு, சஞ்சு, ஹரிப்ரியா, பேபி தன்யா, வான்யா, கவிஞர் கருப்பு ராஜா, லிபாலி, முகேஷ், எஸ்.கே.எம். பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் எதாவது ஒரு சாதனையைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவது தான் இப்படத்தின் கரு. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு கலந்த

dddவிஜியாலயா பிலிம்ஸ் எஸ்.சந்திரன் வழங்கும், "கலக்கல் ஸ்டார்' பரமேஸ்வரர் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் "சாதனை பயணம்.' மாதேஷ்வரா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அழகு, சஞ்சு, ஹரிப்ரியா, பேபி தன்யா, வான்யா, கவிஞர் கருப்பு ராஜா, லிபாலி, முகேஷ், எஸ்.கே.எம். பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் எதாவது ஒரு சாதனையைச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துவது தான் இப்படத்தின் கரு. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு கலந்துகொண்டார்.

Advertisment

மயூரன்

PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் ஃ. அசோக்குமார், P. ராமன், ஏ. சந்திரசேகரன், M.P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் "மயூரன்.' வேல ராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ்), அமுதவாணன் (தாரை தப்பட்டை), அஸ்மிதா (மிஸ் பெமினா வின்னர்) மற்றும் பாலாஜி ராதா கிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள்.

aaa

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- நந்தன் சுப்பராயன் (இவர் இயக்குநர் பாலாவின் "நந்தா', "பிதாமகன்' போன்ற படங்களில் உதவி யாளராகப் பணியாற்றியவர்). கல்லூரி விடுதிதான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும் பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம்... ஒரு தேசம்... ""அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். மரம், செடி, ஒன்றுகூடி. ஒரே நிலத்தில் வாழ்ந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய்ப் பழகும் நட்பையும் உருவாக்குகிறது, எதிரான எண்ணம் கொண்டவர்களிடம் குரோதமும், பகையும் வளர்க்கிறது. என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம், எது தர்மம், அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம்தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய உணர்வுகளை அலங்காரம் இன்றி சொல்லியிருக்கும் படம்தான் "மயூரன்' '' என்கிறார் டைரக்டர் நந்தன் சுப்பராயன். ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரீலீசாகிறது "மயூரன்.'

"கழுகு-2'

aa2012-ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் "கழுகு.' ஏழு வருடங்களுக்குப்பிறகு தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் "கழுகு 2' படம் உருவாகியுள்ளது. மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது.

"கழுகு' படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்துகொள்பவர்களின் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, "கழுகு 2' படத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான சில நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

cine060819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe