சென்னை டூ சேலத்திற்கு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள பசுமை வழிச்சாலையைப் பின்னணியாகக் கொண்டு சந்தோஷ் கோபால் இயக்கும் படம் "பசுமை வழிச்சாலை.'

Advertisment

இந்தப் படத்துக்காக 15 நாட்களுக்கு மேலாக காஷ்மீரின் லே, லடாக், திபெத், பூடான், நேபாளம் உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் முடித்து திரும்பியிருக்கிறது குழு. இந்தப் படத்தில் நடிகர் கிஷோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நிருபமா தயாரிக்கிறார். பசுபதியும் உடன் நடிக்கிறார்.

Advertisment

negpal

இமயமலையை ஒட்டிய பகுதி களில் நடந்த சூட்டிங்கில் முழுக்க முழுக்க மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து நடித்தார் கிஷோர்.

சினிமா இண்டஸ்ட்ரியில் உடல் தகுதியைச் கச்சிதமாக மெய்ன்டைன் செய்யும் நடிகர்களில் கிஷோர் ஒருவர். நிஜவாழ்க்கையிலும் விவசாயத்தின்மீது மிகவும் ஈடுபாடு கொண்டவர். மைனஸ் நான்கு டிகிரி சென்டிகிரேடு குளிரில் அர்ப்பணிப்போடு நடித்தார் என்று பாராட்டுகிறது படக்குழு.

திபெத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற டாஷி லுன்போ அரண்மனையிலும் முதன்முறையாக ஷூட்டிங் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் இதுவரை காட்டப்படாத, பல முக்கியமான இடங்களை கேமராவில் கவ்விக்கொண்டு வந்திருக்கிறார்கள். குறிப்பாக கர்துங்கலா கணவாயைச் சொல்லலாம். இதுதான் உலகின் மிக உயரமான, வாகனம் செல்லக்கூடிய வசதியுள்ள கணவாய் என்கிறார்கள். லே, லடாக் பகுதியில் இந்திய ராணுவம் அமைத்துள்ள முகாம் அருகேயும் அனுமதிபெற்று வான்வழி சூட்டிங் நடத்தி யிருக்கிறார்களாம்.