அறிமுக ஹீரோ அப்பு கிருஷ்ணா, "முந்தல்' படத்திற்காக சத்தமில்லாமல் பல சாகசங்களைச் செய்த தோடு, தனது உயிரைப் பணயம் வைத்து பல ரிஸ்க்கான காட்சிகளில் நடித்திருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/directorjayandh.jpg)
பிரபல ஸ்டண்ட் இயக்குநர் ஜெயந்த் இயக்குநராக அறிமுகமாகும் படம் "முந்தல்.' 49 லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட் கோவில் ஒரு கதாபாத்திரம்போல முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மேலும், இதுவரை ரசிகர்கள் பாத்திராத பல இடங்களில் படப்பிடிப்பு நடத்திய இயக்குநர் ஜெயந்த், பல ரிஸ்க்குகளை எடுத்து .படத்தின் காட்சிகளைப் படமாக்கியுள்ளார்.
கம்போடியாவிலுள்ள சிவன் கோவில் பழமையான கிணறு ஒன்று இருக்கிறதாம். 150 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில், கொடிய விஷம் கொண்ட பாம்புகள் நூற்றுக்கணக்கில் இருப்பதால், அந்த கிணற்றில் இறங்க யாரையும் அனுமதிப்பதில்லை. இந்த விஷயத்தைய றிந்த இயக்குநர் அந்த கிணற்றில் இருக்கும் ஓலைச்சுவடியை ஹீரோ எடுப்பதுபோல காட்சி எடுக்கத் திட்டமிட்டபோது, அது ரொம்ப ஆபத்தான கிணறு, அதில் இறங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹீரோ அப்பு கிருஷ்ணாவை கிணற்றில் இறங்கச் சொல்லிலியிருக்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/appukrishna.jpg)
அவரும் இயக்குநர் சொன்னதை அப்படியே கேட்டு, விஷப் பாம்புகள் நிறைந்த கிணற்றில் இறங்கி நடித்திருக்கிறார்.
அதேபோல், அந்தமான் கடலிலில் 200 கிலோமீட்டர் வேகத்தில் படகில் பயணிக்கும்போது எதிர்பாராதவிதமாக ஹீரோ கடலிலில் விழுந்துவிட்டாராம். அதே போட்டில் இருந்த இயக்குநர் இதை கவனிக்காமல் சிறிது தூரம் போனவுடன்தான் கவனித்தாராம். உடனே படகைத் திருப்பி ஹீரோவிடம் வந்தபோது அவர் நீந்தியபடி இருந்தாராம். முதலைகள் கொண்ட அந்தமான் கடலிலில் ஹீரோ விழுந்ததை அறிந்த இயக்குநர் சிறிது நேரம் பதறிவிட்டாராம். இப்படி படப்பிடிப்பு முழுவதுமே அவ்வப்போது ஏதாவது ரிஸ்க்கை எடுத்தவாறு இருந்த ஹீரோ அப்பு கிருஷ்ணா, "முந்தல்' படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் ஜெயந்திடம் ஐந்து வருடங்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03/appukrishna.jpg)