Advertisment

கோலிவுட்டில் ஆதித்யா சேனல் பிரபலங்கள்!

/idhalgal/cinikkuttu/aditya-channel-celebrities-kollywood

aaன் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் காமெடி சேனலான ஆதித்யா டி.வி.யை ரசிக்காதவர்கள் தமிழகத்தில் இல்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய ஃபார்மேட்டை மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுப்பதற்கு புதுப்புது காம்பெயரிங்குகளையும் களத்தில் இறக்குகிறது ஆதித்யா டி.வி. அப்படி லேட்டஸ்டாக ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருப்பவர் அகல்யா.

Advertisme

aaன் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் காமெடி சேனலான ஆதித்யா டி.வி.யை ரசிக்காதவர்கள் தமிழகத்தில் இல்லை. மூன்று மாதத்திற்கு ஒரு முறை தன்னுடைய ஃபார்மேட்டை மாற்றி ரசிகர்களைக் கவர்ந்திழுப்பதற்கு புதுப்புது காம்பெயரிங்குகளையும் களத்தில் இறக்குகிறது ஆதித்யா டி.வி. அப்படி லேட்டஸ்டாக ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருப்பவர் அகல்யா.

Advertisment

டவுட் செந்திலுடன் சேர்ந்து கலக்கும் ""மாமோய் நீ எங்க இருக்க'' என்ற நிகழ்ச்சிதான் அகல்யாவுக்கு ஹைலைட். இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ""நீங்க சொல்லுங்க டியூட்'' மூலமும் கலக்கிவருகிறார்.

Advertisment

அந்த அகல்யாதான் சமீபத்தில் முத்தையா டைரக்ஷனில், கௌதம் கார்த்திக் நடிப்பில் ரிலீசான "தேவராட்டம்' படத்தில் சூரிக்கு ஜோடி போட்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். இப்போது ஜோதிகா ஹீரோயினாக நடிக்கும் படம், சிவகார்த்திகேயனின் "ஹீரோ' மற்றும் சில படங்களில் கமிட்டாகி கோலிவுட்டில் செம பிஸி நடிகையாகிவிட்டார் அகல்யா.

இந்த அகல்யாவுக்கு சொந்த ஊர் மன்னார்குடி. "மாணவர் நகலகம்' அருணாசலத்தின் பேத்திதான் அகல்யா.

dd"அது இது எது' தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியின்மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, இன்று வெள்ளித்திரையின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் காமெடியன் கதிர்.

மிமிக்ரி ஆர்டிஸ்டாக வாழ்வைத் துவங்கி, சின்னத்திரையில் தனது நகைச்சுவையின் மூலம் மக்களை பல ஆண்டுகள் சிரிக்கவைத்து, அந்த அனுபவத்தில் தனது திறமை களையும் வளர்த்துக்கொண்டு, வெள்ளித்திரைக்கு தன்னை உயர்த்தி இருக்கிறார் ஆதித்யா டி.வி.யில் ஒளிபரப்பான "ஒரு ஜோக் சொல்லட்டுமா' மூலம் செம பாப்புலரான கதிர்.

"திமிரு பிடிச்சவன்', "தாதா 87', "ஜித்தன்' போன்ற திரைப்படங்களில் அவரது நடிப்பு நல்ல விமர்சனங் களை பெற்ற நிலையில், தற்போது விஜய் ஆண்டனியோடு "தமிழரசன்', சிவகார்த்திகேயனுடன் "ஹீரோ', யோகி பாபுவுடன் "ஜாம்பி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவருகிறார்.

cine040619
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe