Advertisment

மாப்பிள்ளைக்கு "பேக்டைவ்' தெரியணும் அடாஷர்மாவின் ஆசை!

/idhalgal/cinikkuttu/adasarmas-wish-know-backdrive-groom

டான்ஸ், ஸ்டண்ட், கவர்ச்சி, நளினம் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக்கூடியவர் நடிகை அடா ஷர்மா. பெரிய பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடித்து பெயரெடுத்தவர். பாலிவுட்டில் வித்யுத் ஜம்வாலுடன் ஜோடி போட்ட "கமாண்டோ-3' ஹிட் அடித்த ஹேப்பியில இருக்கார் அடா ஷர்மா.

Advertisment

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகக் கலக்கியிருக்கிறார் அடா ஷர்மா. சண்டைக் காட்சிகளிலும் பின்னியெடுத்திருக்க

டான்ஸ், ஸ்டண்ட், கவர்ச்சி, நளினம் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக்கூடியவர் நடிகை அடா ஷர்மா. பெரிய பட வாய்ப்புகள் இல்லையென்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடித்து பெயரெடுத்தவர். பாலிவுட்டில் வித்யுத் ஜம்வாலுடன் ஜோடி போட்ட "கமாண்டோ-3' ஹிட் அடித்த ஹேப்பியில இருக்கார் அடா ஷர்மா.

Advertisment

முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாகக் கலக்கியிருக்கிறார் அடா ஷர்மா. சண்டைக் காட்சிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார்.

ss

"கமாண்டோ-3' படம், தற்காப்புக்கலைகள் குறித்தெல்லாம் மனம்திறக்கும் அடா, ""சிறுவயதில் இருந்தே டான்ஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக்கில் அதிக ஆர்வம் காட்டுவேன். இரண்டுமே கிட்டத்தட்ட ஒரேமாதிரியான விஷயங்கள்தான். டைமிங், கவனமாக இருப்பது, எல்லைகள், ஒழுக்கம் என்று எல்லாமே இரண்டிலுமே இருக்கும். எனக்கு கதக் நடனமும், களறிபயட்டு என்கிற தற்காப்புக் கலையையும் கற்றுத் தந்தது என் அம்மாதான். அவர்தான் என்னுடைய ரோல்- மாடல். கமாண்டோ படத்துக்காக நான் களறிபயட் டுக் கலையை இன்னும் அதிகமாகக் கற்றுக் கொண்டேன். தமிழ்நாட்டில் உதய மான சிலம்பாட்டமும் செய்ய வேண்டியிருந்தது. அதோடு, துப்பாக்கியை வைத்து பல ட்ரிக்ஸ் களைக் கற்றேன். அவ்வப்போது துப்பாக்கி சுடும் பயிற்சியும் ஒருவகையில், துப்பாக்கி சுடுவது தியானம் செய்வதற்கு சமமானது.

இந்தப் படத்தின் நாயகன் வித்யுத் தின் உடல்கட்டு மற்றும் அவரது தற்காப்புக்கலைகளைப் பார்த்து நான் நிறையவே வியந்திருக்கிறேன். குறிப்பாக, அவர் தனது உடலோடு மனதையும் ஒருமுகப்படுத்தி, பல விஷயங்களைச் செய்கிறார்.

பாட்டில்களை தரையில் அடுக்கி, அதில் தண்டால் எடுப்பார். சாதாரண நபர் அப்படிச் செய்தால், நிச்சயம் அது உடைந்து காயத்தை ஏற்படுத் தும். ஆனால், வித்யுத் தன் உடலை பட்டுப் போல மென்மை யாக்கி சுலபமாகச் செய்கிறார்.

அதற்கு நிறைய பயிற்சி வேண்டும்'' என்றார்.

""உங்களை ஒரு தொழிலதிப ரோடு வைத்து கிசுகிசுக்கிறார் களே. அது உண்மையான தகவல் தானா?'' என்ற கேள்விக்கு, ஆச்சர்யமாக முகத்தை வைத்தபடி பதில்சொல்லும் அடா, ""அப்படியா- யாரந்த தொழிலதிபர்? நான் ஒரு முரட்டு சிங்கிள். என் ரசிகர்கள்தான் எனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை யைப் பார்த்துத் தரவேண்டும். என்னை மணக்கப் போகிறவர் வட்டமாக தோசை சுட்டு, அதற்கு பக்காவான சுவை கொண்ட சட்னி செய்து தரக்கூடிய நபராக இருக்க வேண்டும். அவர் விலங்குகள் மீது அன்பு காட்டுபவராக இருக்கவேண்டும். பின்பக்க மாக டைவ் அடிப்பவராக இருக்கவேண்டும். எல்லா வற்றிற்கும் மேலாக மகிழ்ச்சியை விரும்புவராக இருக்கவேண்டும்'' என்று பெரிய லிஸ்டையே அடுக்கி விட்டார்.

-மூன்கிங்

cini241219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe