Advertisment

நடிகைகளின் விருந்தும் கும்மாளமும்!

/idhalgal/cinikkuttu/actresss-party-and-glamor

மிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் (கமலைத் தவிர) ஹீரோயினாக நடித்தவர் திருப்பதியைச் சேர்ந்த லதா. அட ஆமாங்க, அந்த லதாவுக்குத்தான் ரோஜான்னு பேர் வச்சு "செம்பருத்தி' படத்துல அறிமுகப்படுத்துனார் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டரையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார் ரோஜா.

Advertisment

dd

தமிழ்நாட்டு அரசியல் சரிப்பட்டு வராது என நினைத்த ரோஜா ஆந்திர அரசியலில் குதித்தார். தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் சந்திரபாபு நாயுடு.

Advertisment

மிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் (கமலைத் தவிர) ஹீரோயினாக நடித்தவர் திருப்பதியைச் சேர்ந்த லதா. அட ஆமாங்க, அந்த லதாவுக்குத்தான் ரோஜான்னு பேர் வச்சு "செம்பருத்தி' படத்துல அறிமுகப்படுத்துனார் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி. தன்னை அறிமுகப்படுத்திய டைரக்டரையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார் ரோஜா.

Advertisment

dd

தமிழ்நாட்டு அரசியல் சரிப்பட்டு வராது என நினைத்த ரோஜா ஆந்திர அரசியலில் குதித்தார். தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார் சந்திரபாபு நாயுடு.

Advertisment

அமோக வெற்றி பெற்றார் ரோஜா. ஐந்து ஆண்டுக் காலம் எம்.எல்.ஏ.வாக இருந்த ரோஜா, முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட பிணக்கால் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்தார். கடந்த மூன்றாண்டுகளாக அந்தக் கட்சிக்காக கடுமையாக பிரச்சாரம் செய்த ரோஜா, நகரியில் தனது சொந்த செலவில் மலிவு விலை உணவகம் திறந்து மக்களிடம் நல்ல பேர் வாங்கினார்.

ரோஜாவுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கைப் பார்த்து, இப்போது நடந்து முடிந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியிலேயே போட்டியிட சீட் கொடுத்தார் ஜெகன்மோகன். மனைவி ரோஜா வின் தேர்தல் பணிக்காக இருபத்தைந் துக்கும் மேற்பட்ட உதவி இயக்குநர்களை களத்தில் இறக்கினார் கணவர் ஆர்.கே. செல்வமணி. பக்காவாக பிரச்சார ஸ்கெட்ச் போட்டு ரோஜாவை ஜெயிக்க வைத்தார் செல்வமணி.

mm

எப்படியும் தன்னை துணை முதல்வராகவோ, மந்திரியாகவோ நியமிப்பார் ஜெகன்மோகன் ரெட்டி என ரொம்பவே நம்பியிருந்தார் ரோஜா. ஆனால் ரெட்டியோ ரோஜாவை வாரியத் தலைவராக்கிவிட்டார். இரண்டரை ஆண்டுகள் கழித்து தன்னை மந்திரியாக்குவார் ரெட்டி என்ற நம்பிக்கையில் இருக்கி றார் ரோஜா.

மந்திரியாக முடியாத கவலையை எல்லாம் தூக்கி எறிந்துவிட்ட ரோஜா, தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு பக்கபலமாக இருந்து தனது வெற்றிக்குப் பாடுபட்ட உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் கைநிறைய கரன்சியும், வயிறு நிறைய விருந்தும் போட்டு குஷிப்படுத்தினாராம்.

ரோஜான்னாலே மென்மைதான்; அழகுதான்.

வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி செலுத்தும்விதமாக ரோஜா விருந்து கொடுத்தார் என்றால், இனிவருவதோ சில நடிகைகளின் கும்மாள விருந்து. விஜய் டி.வி.யில் "பிக்பாஸ்-3' ஆரம்பமாகிவிட்டது. வழக்கம்போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அதுக்கும் இந்த கும்மாள விருந்துக்கும் என்ன சம்பந்தம்னு கேட்குற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்கத்தான் செய்யுது.

அதாவது என்னன்னா "பிக்பாஸ்-2' மூலமாக நடிகைகள் மும்தாஜ், ஜனனி ஐயர், ரம்யா, மமதி ஆகியோர் நெருக்கமான தோழிகள் ஆனார்கள். இப்போது "பிக்பாஸ்-3' ஆரம்பித்திருப்பதால், "பிக்பாஸ்-2 'வை நினைத்து கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் தனியார் ரிசார்ட் ஒன்றில் சரக்குப் பார்ட்டி வைத்து செம கும்மாளம் போட்டிருக்கிறார்கள். இது போதாதென்று யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர் ஆகிய இருவர் மட்டுமே ஜாயிண்ட் பண்ணி சென்னையில் இருக்கும் ஃபைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் கேக் வெட்டுதல், சரக்கு ஊத்துதல், பெல்லி டான்ஸ் என தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

அவரு என்ன சாதா பாஸா... பிக் பாஸாச்சே!

-ஈ.பா .பரமேஷ் & அரவிந்த்

cine020719
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe