Advertisment

நடிகையின் கொலை மிரட்டல்? நடுங்கும் கோலிவுட்!

/idhalgal/cinikkuttu/actresss-murder-threat-shaky-kollywood

சினிமாவில் நடித்து பேர் வாங்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால், சர்ச்சைகளில் சிக்கி பேரும் பணமும் சம்பாதிக்கும் நடிகைகள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் மீரா மிதுன்!

Advertisment

meera

மாடலிங்தான் மீரா மிதுனுக்கு அடையாளம் என்றாலும், ஒன்றிரண்டு சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். மற்றபடி வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதுதான் இவரது பிரதான தொழில்.

"மிஸ் தமிழ்நாடு' அழகிப் போட்டியை நடத்துவதில் மீரா மிதுனுக்கும் ஜோ மைக்கேலுக்கும் பல மாதங்களாக கடும் பனிபோர் மட்டுமல்ல, வார்த்தைப் போரே நடந்துவந்திருக்கிறது. ""மீரா மிதுன் ஒரு ஃப்ராடு'' என்பார் ஜோ மைக்கேல். ""அவ(ன்)ர் தான் பக்கா ஃப்ராடு'' என போட்டுத் தாக்குவார் மீரா மிதுன். இந்த அக்கப் போர்களையெல்லாம் "நடிகைகளும் சில போலீசும்' என்ற தலைப்பில் 2019 ஜூன் 18 தேதியிட்ட "சி

சினிமாவில் நடித்து பேர் வாங்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள்.

ஆனால், சர்ச்சைகளில் சிக்கி பேரும் பணமும் சம்பாதிக்கும் நடிகைகள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் மீரா மிதுன்!

Advertisment

meera

மாடலிங்தான் மீரா மிதுனுக்கு அடையாளம் என்றாலும், ஒன்றிரண்டு சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். மற்றபடி வெளிநாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதுதான் இவரது பிரதான தொழில்.

"மிஸ் தமிழ்நாடு' அழகிப் போட்டியை நடத்துவதில் மீரா மிதுனுக்கும் ஜோ மைக்கேலுக்கும் பல மாதங்களாக கடும் பனிபோர் மட்டுமல்ல, வார்த்தைப் போரே நடந்துவந்திருக்கிறது. ""மீரா மிதுன் ஒரு ஃப்ராடு'' என்பார் ஜோ மைக்கேல். ""அவ(ன்)ர் தான் பக்கா ஃப்ராடு'' என போட்டுத் தாக்குவார் மீரா மிதுன். இந்த அக்கப் போர்களையெல்லாம் "நடிகைகளும் சில போலீசும்' என்ற தலைப்பில் 2019 ஜூன் 18 தேதியிட்ட "சினிக்கூத்து' இதழிலேயே எழுதியிருந்தோம்.

Advertisment

நமது "சினிக்கூத்து' செய்தி வெளியான மூன்று வாரங்களிலேயே "பிக்பாஸ்' வீட்டிற்குள் என்ட்ரியானார் மீரா மிதுன். அப்போதும் விடாத ஜோ மைக்கேல், சென்னை மாநகர கமிஷனரிடம் மீரா மிதுன்மீது பண மோசடி புகார் கொடுத்து, "பிக்பாஸ்' வீட்டிற்குள் போலீசாரையும் அனுப்பி, விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனிடம் நோட்டீஸ் கொடுக்க வைத்தார். போலீஸ் கேஸ் சமாச்சாரம் என்பதால், "பிக்பாஸ்' வீட்டைவிட்டு ஜூலை 28-ஆம் தேதி வெளியேற்றப்பட்டார்.

aa

ஜோ மைக்கேலின் இந்த அதிரடி ஆக்ஷனின் பின்னணியில் இருந்தவர் மாடலிங்கும், நடிகை யுமான சனம் ஷெட்டி. இந்த சனம் ஷெட்டி, "பிக்பாஸ்' வீட்டிற்குள் இப்போது வரை இருக்கும் தர்ஷனை அதிதீவிரமாக காதலிப்பவர். இந்த சங்கதிகளையும் "சூடு கிளப்பும் கவர்ச்சி சண்டை' என்ற தலைப்பில் 2019 ஆக. 13 தேதியிட்ட "சினிக்கூத்து' இதழில் எழுதியிருந்தோம்.

"பிக்பாஸ்' வீட்டைவிட்டு மீராமிதுன் வெளியேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த நிலையில் ஜோ மைக்கேலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மீரா மிதுன்மீது எழும்பூர் போலீஸ் எஃப்.ஐ.ஆர்.போட்டுள்ளது.

""என்ன பண்ணி வச்சிருக்கான் ஜோ மைக்கேல்? என்னைப் பத்தி தப்புத்தப்பா பேசிருக்கான்! அவனை ஆள வச்சி தூக்கு. அவ்வளவுதான். இதுக்குமேல என்னால முடியல. அவன் கை-கால ஒடச்சி ஆறு மாசம் ஆஸ்பிட்டலில் படுக்க வைக்கணும்...'' மீரா மிதுன் இப்படி ஆங்காரமாக பேசிய ஆடியோதான் வைரலாகி, மீரா மிதுனுக்கு பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி யுள்ளது.

மீரா மிதுன் இப்படி தைரியமாகப் பேசுவதற்கு காரணமே காங்கிரஸ் கட்சி யின் மகளிரணி தேசியப் பொதுச்செயலாளராக இருக்கும் அப்சரா ரெட்டி தான். இந்த அப்சரா ரெட்டி யும் ஜோ மைக்கேலும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றிய போது, இருவருக்கு மிடையே சண்டை ஏற்பட்டதால், இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார் ஜோ மைக்கேல்.

அந்த நிறுவனத் தின் வளர்ச்சியும் ஜோ மைக்கேலுக்கு கிடைக்கும் மரியாதையும் அப்சரா ரெட்டிக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது.

அந்த நிறுவனத்தை தனக் குச் சொந்தமாக்கும் முயற்சியில் இறங்கி, ஜோ மைக்கேலை தனது அரசியல் செல்வாக்கால் மிரட்டினார் அப்சார ரெட்டி. ஆனால் ஜோ மைக்கேலோ மசியவில்லை!

ddd

இதனால் மேலும் கடுப்பான அப்சரா, தனக்கும் தனது தாயாருக்கும் கொலை மிரட் டல் விடுத்ததாக சென்னை நீலாங்கரை போலீசில் கம்ப்ளெய்ன்ட் பண்ணினார்.

பொலிடிக்கல் பேக்ரவுண்ட் இருந்தா சும்மா இருக்குமா போலீஸ்? ஜோ மைக்கேலை புழல் ஜெயிலுக்கு அனுப்பியதோடு, ""தேவையில்லாம அடம் பிடிக்காத! அந்தம்மா சொன்னபடி கம்பெனியை எழுதிக் கொடுத்துரு'' என மிரட்டினார் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு. இதற்கும் அடிபணியாத ஜோ மைக்கேல், ஜாமினில் வெளிவந்தபிறகு மீரா மிதுனுடன் பழக ஆரம்பித்தார்.

மீரா மிதுனும் ஜோ மைக்கேலும் சேர்ந்து அழகிப் போட்டிகளை நடத்த ஆரம்பித் தார்கள். இந்த அழகிப் போட்டி நடத்தி அதன்மூலம் வரும் பணத்தை பங்கு பிரிப்பதில் ஜோ மைக்கேலுக்கும் மீரா மிதுனுக்குமிடையே மல்லுக்கட்டு நடந்தது. அதன்பின் மீரா மிதுன் தனியாகக் களம் இறங்கி, அழகிப் போட்டி நடத்த முயன்றபோது குறுக்கே புகுந்து தடுத்தார் ஜோ மைக்கேல்.

இப்போது மீரா மிதுன் மீது எஃப்.ஐ.ஆர். போடும் அளவுக்கு நிலவரம் கலவரமாகிவிட்டது. ஜோ மைக்கேலின் பின்னணியில் சனம் ஷெட்டி இருப்பதாகவும் ஒரு பேச்சு கோடம்பாக்கத்திலும், மாடலிங் உலகிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

எந்த நேரமும் மீரா மிதுன் கைது செய்யப்படலாம் அல்லது போலீசாரால் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, சிலபல டீலிங்குகள் முடிக்கப்படலாம் என்பதைப் பற்றித்தான் கோலிவுட்டில் இப்போது நடுக்கத்துடன் மற்ற நடிகைகள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

cini100919
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe