sobha

மிழ் நடிகைகளில் பலருடைய மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.

Advertisment

மிக இளம்வயதில் தேசிய விருதைப் பெற்ற நடிகை ஷோபாவின் மரணம்தான் தமிழ் ரசிகர்களை உலுக்கிய முதல் மரணம். ஷோபாவும் டைரக்டர் பாலுமகேந்திராவும் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில் 1980-ல் இந்த தற்கொலை நிகழ்ந்ததால் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாலுமகேந்திரா மீதுகூட ரசிகர்கள் கடும் ஆத்திரத்தில் இருந்தார்கள். ஆனால், அத்தோடு சரி. அது மறக்கடிக்கப்பட்டது.

Advertisment

silk

"முள்ளும் மலரும்' படத்தில் ரஜினியின் காதலிலியாக, நடிகை ஷோபாவின் தோழியாக நடித்திருந்த "படா பட்' ஜெயலட்சுமியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவர்தான். வாழ்க்கையில் விரக்தி அதிகமாகிவிட்டதால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதிவைத்துவிட்டு செத்துப்போனார். இவர், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்ஜிசி சுகுமாரை திருமணம் செய்ய நினைத்து அது முடியாமல் போனது.

தமிழ் சினிமாவை இவர் அளவுக்கு ஆட்டிப் படைத்தவர் வேறு யாரும் இல்லை என்கிற அளவுக்கு தனது கிறங்கடிக்கும் பார்வையில் சிக்க வைத்திருந்தவர் சிலுக்கு ஸ்மிதா. இவர் இல்லாத தமிழ்ப்படமே இல்லை actressஎன்ற நிலை இருந்தது. இவருடைய மேனேஜராக செயல்பட்ட தாடிக்காரர் ஒருவரின் கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை இருந்தார். ஆனால், அந்தத் தாடிக்காரரின் மகனுக்கு ஏற்பட்ட விபரீத ஆசையின் விளைவாகவே சிலுக்கு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. ஆனால், இன்றுவரை அவருடைய சாவின் மர்மம் அவிழ்க்கப் படவில்லை.

Advertisment

நடிகை பிரவீணா கர்ப்பமாக இருந்த நிலையில் திடீரென மரணம் அடைந்தார். இவருடைய மரணத்திலும் மர்மம் இருப்பதாக செய்திகள் பரவின. அப்போது முதல்வராக இருந்த எம்ஜி.ஆர் இவருடைய உடல் தகனம் செய்யப்படும்வரை சுடுகாட்டில் இருந்தார். நடிகையின் கணவருக்காகவே அவர் சுடுகாடு வரை வந்தார் என்று கூறப்பட்டது.

நடிகை சிம்ரனின் தங்கையான மோனல் நடிகர் விஜய்யுடன் "பத்ரி', குணாலுடன் "பார்வை ஒன்றே போதுமே' போன்ற படங்களில் நடித்தவர். இவர் 2002-ஆம் ஆண்டு சென்னையில் தான் தங்கியிருந்த வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நடன இயக்குநர் பிரசன்னா சுஜித்துடன் மோனல் கொண்ட காதலே இந்தத் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்டது.

"கடல் பூக்கள்', "தவசி' படங்களில் நாயகியாக நடித்த பிரதியுஷா தற்கொலை செய்துகொண்டார். காதலர் சித்தார்த் ரெட்டியுடன் காரில் அமர்ந்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து பிரதியுஷா இறந்துபோனார். ஆனால் அவரது காதலர் இந்த தற்கொலை முயற்சியில் பிழைத்துக்கொண்டார்.

தமிழ்ப்பட நடிகைகள் சாவில் மட்டுமல்ல; எல்லா மொழி ஹீரோயின் நடிகைகள் சாவும் சந்தேகத்திற்குரியதாகவே இருந்தது. இருக்கிறது, இருக்கப் போகிறது.

savithiri

டிகையர் திலகம் சாவித்திரியின் மரணம் எந்த ஒரு நடிகைக்கும் நேரக்கூடாத சோகம். புகழின் உச்சிக்கே சென்ற நடிகையர் திலகம் சினிமாவின் அத்தனை பரிமாணங்களையும் அறிந்தவர்.

நடிகர் ஜெமினியை காதலிலித்து திருமணம் செய்து, குழந்தைகளையும் பெற்றவர். ஆனால், எதிர்பார்த்தது கிடைக்காத விரக்தியில் போதைக்கு அடிமையாகி, பல ஆண்டுகள் கோமா நிலையிலேயே இருந்து நினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தார். தனது சாவை தானே தேடிக்கொண்டவர் சாவித்திரி.