நாம சும்மா இருந்தாலும் இந்த நடிகைகள் சும்மா இருக்கமாட்டார்கள்போல. நடிகைகள் சும்மா இருந்தாலும் அவர்கள் வாய் சும்மா இருக்காதுபோல. "சினிமாவில் பெட்ரூம் அட்ஜெஸ்மென்ட் இருக்கு, சினிமாவுக்கு வந்த புதுசுல எனக்கும் அந்த அனுபவம் இருந்துச்சு'ன்னு திருவாய் மலர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Advertisment

ishwarya

அனுபவம் இருந்துச்சோ இல்லையோ, "எனக்கு அப்படி ஒரு அனுபவம் இல்லே'ன்னு சொன்னவரு தமன்னா.

Advertisment

"தயாரிப்பாளர்களுடனும் ஹீரோக்களுடனும் படுக்கையைப் பகிர்ந்துகொள்வது என்பது கட்டாயமாகி விட்டது' என்றார் இந்தி பிரபலமான ராணி முகர்ஜி.

"மும்பையைச் சேர்ந்த நான் எட்டு வருஷமா தெலுங்கு ஃபீல்டுல இருக்கேன். இந்தியைவிட தெலுங்குதான் நல்லா பேசுவேன். பெட்ரூம் அட்ஜெஸ்ட்மென்ட் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா எனக்கு அந்தமாதிரி எதுவும் நிகழவில்லை. ஏன்னா என்னைச் சுத்தி நல்லவர்களைத்தான் வைத்திருக்கிறேன்.' இப்படி போட்டுத் தாக்கியிருப்பவர் ரகுல் பிரீத்சிங்.

Advertisment

raghulpreethisingh

""சினிமாவில் ஹீரோயின்களுக்கு செக்ஸ் டார்ச்சர் இருப்பது உண்மைதான். வாய்ப்பு கொடுப்பதற்காக பெட்டுக்கு அழைக்கிறார்கள். பெட்ரூம் சங்கதிகளை வெளியில் சொன்னால், சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்ற பயத்தினால் ரகசியம் காக்கிறார்கள். இது கோழைத்தனம் என்றாலும் அதுதான் உண்மை.

தென்னிந்திய சினிமாவின் இளம் ஹீரோயின் அவர்.

ஒருநாள் என்னிடம், "பெரிய தயாரிப்பாளர் ஒருவர், என்னை படுக்கைக்கு அழைக்கிறார், அவரை எப்படி சமாளிப்பது?'ன்னு என்னிடம் ஐடியா கேட்டார்.

ilayana

அவருடன் படுக்கையை பகிர்வதும் பகிராததும் உன் இஷ்டம். "போ'ன்னும் சொல்லமாட்டேன், "போகாதே'ன்னும் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டேன். ஏன்னா என்னோட முடிவை அந்த ஹீரோயின்மீது திணிக்க விரும்பல'' என பட்டவர்த்தனமாக பொளந்து கட்டியிருப்பவர் இலியானா.

tamana

ஊசி இடம் கொடுத்தாத்தானே நூலு நுழையும். நூலு விரும்புனாத்தானே ஊசிக்குள்ள நுழைய முடியும். காசு இருந்தாத் தானே தோசை வாங்க முடியும், தோசை சுட்டாத்தானே காசு பார்க்க முடியும். இதுக்கும் மேற்படி நடிகைகள் சொன்னதற்கும் என்னய்யா சம்பந்தம்னு கேக்குறீகளா? சம்பந்தம் இருக்கு மக்களே நிறைய இருக்கு. நடிகைகள் இப்படிப் பேசி, நமக்கெல்லாம் கிறுக்கு பிடிக்காத வரைக்கும்.

-பரமேஷ்