Advertisment

நடிகைகளும் சில போலீசும்!

/idhalgal/cinikkuttu/actresses-and-some-police

மிரா மிதுன். இவர் "எட்டு தோட்டாக்கள்', "தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களில் நடித்தவர். சென்னையைச் சேர்ந்த இவர், படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்குப் பின் மாடலிங் துறையில் நுழைந்து "மிஸ் சவுத் இந்தியா', (2016) "மிஸ் தமிழ்நாடு' உட்பட நான்கு அழகிப் பட்டங்களை வென்றவர். தற்போது "மிஸ் தமிழ்நாடு திவா' எனும் பெயரில் தமிழ்ப் பெண்களுக்கென பிரத்யேகமாக அழகிப் போட்டி நடத்த முற்பட்டார். ஆனால், அந்த போட்டி நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

actress

அதைப்பற்றி மீரா மிதுன் என்ன சொல்றாருன்னா...

""அழகிப் போட்டியை நடத்த அனைத்து வேலைகளையும் செய்த நிலையில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாள

மிரா மிதுன். இவர் "எட்டு தோட்டாக்கள்', "தானா சேர்ந்த கூட்டம்' போன்ற படங்களில் நடித்தவர். சென்னையைச் சேர்ந்த இவர், படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்குப் பின் மாடலிங் துறையில் நுழைந்து "மிஸ் சவுத் இந்தியா', (2016) "மிஸ் தமிழ்நாடு' உட்பட நான்கு அழகிப் பட்டங்களை வென்றவர். தற்போது "மிஸ் தமிழ்நாடு திவா' எனும் பெயரில் தமிழ்ப் பெண்களுக்கென பிரத்யேகமாக அழகிப் போட்டி நடத்த முற்பட்டார். ஆனால், அந்த போட்டி நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

actress

அதைப்பற்றி மீரா மிதுன் என்ன சொல்றாருன்னா...

""அழகிப் போட்டியை நடத்த அனைத்து வேலைகளையும் செய்த நிலையில், நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் போன் எடுக்கவில்லை.

அதனால் அவரை சந்திக்க நேரில் சென்றேன்.

நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று இரண்டு போலீஸ் அதிகாரிகளைக் கூட்டிவந்து என்னை பயமுறுத்தினார்.

Advertisment

நான் சட்டப்படி ஒரு டைட்டிலை பதிவு செய்துள்ளேன். என்னை முன்பு மிரட்டிய அஜித் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோருடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் இணைந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் க்ரீன்பார்க் நட்சத்திர ஹோட்டலில் வைத்து மிரட்டப்பட்டேன்.

நான் என்ன தவறு செய் தேன் என்று தெரியவில்லை. தொடர்ந்து மிரட்டப்பட் டுக் கொண்டிருக்கிறேன்.

actress

தமிழ்ப் பெண்களுக்காக ஒரு அழகிப் போட்டி நடத்த முயற்சித்தேன். அதை நடத்தவிடாமல் முறியடித் திருக்கிறார்கள். இரண்டு நாட்க ளாக இரவு பகலாக இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்கள் 11 பேரும், கடுமையான பயிற்சி எடுத்து, பெரும் கனவுடன் இருந்தார்கள். இந்த விழாவைக் கண்டிப்பாக மிகப்பெரிய விழாவாக நடத்துவேன். விரைவில் இதை நடத்திக் காட்டுவேன். சட்டப்பட்டி அனைத்தும் எனக்கு சாதகமாக இருந்தும், நான் தோற்கடிக்கப்பட்டிருக்கிறேன். தமிழ்ப் பெண்ணாக நான் ஓய்ந்து போகமாட்டேன். கண்டிப்பாக ஜெயித்துகாட்டுவேன்'' என்றார்.

பதினாலு அழகிகளும் தங்கள் கனவுகளையும், மீரா மிதுன் தங்களுக்கு தந்த ஆதரவையும் பற்றிப் பேசினார்கள். முழுக்க முழுக்க தமிழிலிலேயே அழகிகள் பேசியது ஆச்சர்யமாக இருந்தது.

இதுல இன்னொரு மேட்டர் என்னன்னா... போட்டியில் கலந்து கொள்ளும் இளம்பெண்களிடம் செம கலெக்ஷன் பண்ணிவிட்டதாக மீரா மிதுன்மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் மீரா மிதுனை மேன்மேலும் கடுப்பாக்கும் ஒரு காரியத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். "மிஸ் சௌத் இந்தியா' பட்டத்தை மீரா மிதுன் தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாகக் கூறி, 2016-ஆம் ஆண்டு தாங்கள் அவருக்கு வழங்கிய "மிஸ் சௌத் இந்தியா' பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் இந்தப் பட்டத்தை வேறு எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் அந்த அமைப்பு சொல்லியிருப் பதுடன், 2016-ஆம் வருடத்திற்கான "மிஸ் சௌத் இந்தியா' போட்டி யில் முதலிடம் பெற்ற மீரா மிதுனுக்கு அடுத்ததாக இரண் டாவது இடத்தைப் பிடித்த நடிகை ஷனம் ஷெட்டிக்குத் தான் "மிஸ் சௌத் இந்தியா' பட்டம் செல்லும் என்றிருக்கி றார்கள்.

actress

இதை போட்டி நடத்தும் அந்த அமைப்பும் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டி நடந்து, இரண்டு வருடங்கள் ஆன நிலை யில், அதில் இரண் டாம் பெற்ற ஒருவருக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடிவந்துள்ளது மாடலிங் உலகி லேயே ஆச்சர்யமான ஒன்றுதான்.

"கதம் கதம்', "சவாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷனம் ஷெட்டி. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து வருகிறார். தற்போது, இயக்குநர் மிஷ்கினிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய அர்ஜுன் கலைவன் இயக்கிவரும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார் ஷனம் ஷெட்டி. சட்டை கிழியாத அளவுக்கு அழகிகளின் சண்டை போய்க்கிட்டி ருக்கு.

-ஈ.பா. பரமேஷ்

cine180619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe