Advertisment

சின்னத்திரை சங்கதிகள்! சீட்டிங் பார்ட்டியிடம் சிக்கிய நடிகை!

/idhalgal/cinikkuttu/actress-trapped-seating-party

விஜய் டி.வி.யில் மெகா ஹிட்டடித்த சீரியல் "சரவணன்- மீனாட்சி.' இந்த சீரியலில் சரவணனாக செந்திலும், மீனாட்சியாக கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜாவும் நடித்தார்கள். வெகுநாட்களாக இந்த சீரியல் ஒளிபரப்பானதால், நிஜவாழ்க்கையிலும் செந்திலும் ஸ்ரீஜாவும் ஜோடியானார்கள்.

Advertisment

ss

இந்த "சரவணன்- மீனாட்சி' சீரியலில் "மைனா' கேரக்டர் மூலம் பிரபலமானவர் நந்தினி. "பிரியமானவளே', "அரண்மனைக் கிளி', "டார்லிங் டார்லிங்' என பல சீரியல்களில் நந்தினிக்கு பேர் வாங்கிக் கொடுத்தது "சரவணன் -மீனாட்ச

விஜய் டி.வி.யில் மெகா ஹிட்டடித்த சீரியல் "சரவணன்- மீனாட்சி.' இந்த சீரியலில் சரவணனாக செந்திலும், மீனாட்சியாக கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜாவும் நடித்தார்கள். வெகுநாட்களாக இந்த சீரியல் ஒளிபரப்பானதால், நிஜவாழ்க்கையிலும் செந்திலும் ஸ்ரீஜாவும் ஜோடியானார்கள்.

Advertisment

ss

இந்த "சரவணன்- மீனாட்சி' சீரியலில் "மைனா' கேரக்டர் மூலம் பிரபலமானவர் நந்தினி. "பிரியமானவளே', "அரண்மனைக் கிளி', "டார்லிங் டார்லிங்' என பல சீரியல்களில் நந்தினிக்கு பேர் வாங்கிக் கொடுத்தது "சரவணன் -மீனாட்சி' "மைனா'தான்.

சீரியல்கள் மட்டுமல்லாது, டைரக்டர் பாண்டிராஜின் "வம்சம்', "கேடி பில்லா கில்லாடி ரங்கா', சமீபத்தில் ரிலீசான "நம்ம வீட்டுப் பிள்ளை' என சினிமாவிலும் நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறார் நந்தினி. சென்னை வளசரவாக்கத்தில் ஜிம் ஒன்றை நடத்திவரும் கார்த்திகேயனுக்கும் நந்தினிக்கும் காதலாகி 2017 ஏப்ரல் மாதம் கல்யாணத்தில் முடிந்தது.

Advertisment

mmகல்யாணமாகி ஒரு வருடம்கூட ஆகாத நிலையில் நந்தினிக்கும் கார்த்திகேயனுக்குமிடையே விரிசலானது. நந்தினியை சந்தேகப்பட ஆரம்பித்தார் கார்த்திகேயன். நந்தினிக்கும் கார்த்திகேயன்மீது சந்தேகம் வர ஆரம்பித்தது. கால்போன போக்கில் சுற்ற ஆரம்பித்த கார்த்திகேயன், திடீரென ஒருநாள் சென்னை லாட்ஜ் ஒன்றில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். தொடர்ச்சியான போலீஸ் விசாரணையால் நொந்து நொம்பலமாகி விட்டார் நந்தினி.

""கார்த்திகேயனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது, அவரைக் கல்யாணம் செய்தபிறகுதான் எனக்குத் தெரியும். அடிக்கடி கேர்ள் ஃப்ரண்டுகளுடன் துபாய்க்கு போய் விடுவார். அங்கே என்ன நடந்த துன்னு முறையா விசாரிச்சாத்தான் தெரியும். இதுபோக அமைச்சர்கள் பலரிடம் தனக்கு செல்வாக்கு இருப்பதாகச் சொல்லி, அரசு வேலை வாங்கித் தருகிறேன் என ஏகப்பட்ட பேரிடம் லட்சக்கணக்கில் சீட்டிங் போட்டுள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் நெருக்கடிக்குப் பயந்துதான் தற்கொலை செய்து கொண்டார்'' என அப்போதே மீடியாக்களிடம் பேட்டி கொடுத்து விட்டு, சில மாதங்கள் சீரியல்களில் நடிக்காமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார் நந்தினி.

mm

பெற்றோரின் வற்புறுத்தலால் மனதை சமாதானமாக்கிக்கொண்டு, ஒருவழியாக இரண்டாவது கல்யாணத்திற்கு சம்மதித்தார் நந்தினி. சமீபத்தில் சக நடிகரான யோகேஷை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நந்தினி, புதிய கணவருடன் ஜாலியாக அரட்டை அடிக்கும் சில ஃபோட்டோக்களையும் ஃபேஸ்புக்கில் போட்டார். இதைப் பார்த்த நெட்டிச சேட்டையர்கள், ""வருஷத்துக்கொரு மாப்பிள்ளையா?'' என நக்கல் பண்ணினார்கள்.

இதற்குப் பதிலடியாக ""என் வாழ்க்கை, என் முடிவு'' என போட்டுத் தாக்கினார் நந்தினி. விடுங்கப்பா நெட்டிசன்களா, நல்லபடியா வாழட்டும் நந்தினி. நடிகைன்னாலும் அவரும் மனுஷிதானே!

-ஈ.பா. பரமேஷ்வரன்

cini241219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe