Advertisment

நடிகைகளின் லேட்டஸ்ட் "சங்கதி'களும் "சங்கட'ங்களும்!

/idhalgal/cinikkuttu/actress-latest

டை என்ற அமலாபால்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசானபோதே சர்ச்சை யைக் கிளப்பியது. வெள்ளைத் துணியைக் கிழித்து சுற்றிக்கொண்டு, கிட்டத்தட்ட, அரை நிர்வாணக் கோலத்தில் அலறியபடி அமலாபால் கொடுத்திருந்த போஸ் படுதூக்கலாகவும் இருந்தது. இப்போது முழுப்படமும் முடிந்து சென்சாருக்குப் போனபோது, "படத்திற்கு "ட்ரிபிள் ஏ'வே தரலாம் போல,' என்று சென்சார் அதிகாரிகள் சொன்னதும் திகிலடித்துப் போய்விட்டது படக்குழு. ""கொஞ்சம் பார்த்து செய்ங்க, யு/ஏ சர்டிபிகேட்டாவது கொடுங்க'' என்று டைரக்டர் கெஞ்சியிருக்கிறார். ""முக்கால்வாசிப் படத்தை வெட்டி எறிஞ்சாக்கூட யு/ஏ கொடுக்க முடியாது. "ஏ' சர்டிபிகேட்தான் தரமுடியும். முடிஞ்சா படத்தை ரிலீஸ் பணிக்கங்க. இல்லேன்னா படத்தை எடுத்த நீங்களும், படத்துல நடிச்சவங்களும் வீட்டுக்குள்ளயே ரிலீஸ் பண்ணி போட்டுப் பார்த்துங்க'' என்று சூடாகிவிட்டார்களாம் சென்சார் அதிகாரிகள்.

Advertisment

ama

நயன்தார

நயன்தாரா பேயாக நடிச்ச "ஐரா'-வும் ஊத்திக்கிச்சு. மனுஷியாக நடிச்ச "மிஸ்டர் லோக்கல்' படமும் செம ஊத்தலாகிப் போச்சு. ஆனா லும் நயன்தாரா தனது கெத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை, சம்பளத்தையும் குறைக்க வில்லை. ""வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகும் "கொலையுதிர் காலம்' படமும், அதுக்கப்புறம் அட்லீ டைரக்ஷ னில் நடிக்கும் விஜய்யின் 63-ஆவது படமும், சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் "தர்பார்' படமும் ரிலீசாகட்டும், அதன்பின் என் லெவலே வேற. எல்லாரும் என்னைத் தேடிவரத்தான் போறாங்க'' என தனது நட்பு வட்டாரத்தில் தில்லாகப் பேசு கிறாராம் நயன். "மிஸ்டர் லோக்கல்' ஊத்தினாலும் அசராத டைரக்டர் ராஜேஷ்.எம்., நயன்தாராவுக்காக ஸ்பெஷல் கதை ஒன்றைத் தயார் பண்ணியுள்ளாராம். ""கண்டிப்பாக நயன் மேடம் ஓ.கே. சொல்லிருவாங்க'' என்ற நம்பிக்கை ராஜேஷுக்கு இருக்காம்.

தனுஷுடன் ஜோடிபோட்டு, இரண்டு மாதங்களுக்கு முன் னால் ரிலீசான "மாரி-2' மண்ணைக் கவ்வியதில் நொந்து போயிருந்தார் சாய்பல்லவி. ஆனாலும் சளைக்காத சாய்பல்லவி யோ, ""சூர்யாவுடன் ஜோடி போட்டி ருக்கும் "என்.ஜி.கே.' படம் வந்தா என் லெவலெ வேற'' என்று நம்பியிருந்தார். ஆனா "என்.ஜி.கே'வோ பப்படமாகிப் போனதும், தெலுங்குக் கரையோரமும், சொந்த ஊரான மலையாள பூமியிலும் கவனம் செலுத்த முடிவு பண்ணிட்டாராம் சாய்பல்லவி.

Advertisment

nayan

ஏ.ஆர். முருகதாஸ் டைரக்ஷனில் மகேஷ்பாபு நடித்த "ஸ்பைடர்' படம் தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் ரிலீசானது. படம் ஃப்ளாப் ஆனதால் ஏகப்பட்ட கோடிகள் அவுட்டாகி, நொந்து நொம்பலமாகிவிட்டார் படத்தின் தயாரிப்பாளர். அதைவிட நொந்துபோனவர், படத்தின் ஹீரோயின் ரகுல்ப்ரீத்சிங்தான். இந்திப் பட கால்ஷீட்டைக் கேன்சல் பண்ணிவிட்டு, "ஸ்பைடர்' படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் ரகுல். சரி, இது போனா போகட்டும், தமிழில் கார்த்தியுடன் நடிக்கும் "தேவ்' படம் தனக்கு கைகொடுக்கும் என்று ஆறுதல் பட்டுக்கொண்டார். ஆனால் "தேவ்' படம் ஊத்திய ஊத்தலில் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். ""சரி, இதுவும் போனா போகட்டும், கார்த்தியின் அண்ணன் சூர்யாவுடன் நடித் திருக்கும் "என்.ஜி.கே.' படம் வரட்டும், அதுக்கப்புறம் ஒரு கைபார்க்கிறேன். ஏன்னா டைரக்டர் செல்வராகவன் மாதிரி இந்தியாவுல ஒரு டைரக்டரைப் பார்க்கமுடியாது. அப்படி ஒரு டேலண்ட் பெர்சானலிட்டி. ஷூட்டிங் ஸ்பாட்ல அவரின் அர்ப்பணிப்பைப் பார்த்து மிரண்டு போய்ட்டேன். தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக "என்.ஜி.கே.' இருக்கும்'' என்று செமத்தியாக பில்ட்-அப் கொடுத்தார் ரகுல் ப்ரீத்சிங். ஆனால் இந்தப் படமோ அட்டர் ஃப்ளாப்பாகி ரகுல்ப்ரீத்சிங்கைக் கதறவிட்டு விட்டது. நமக்கு இந்திதான் சரிப்பட்டு வருமோ என இப்ப ஃபீல் பண்றாராம் ரகுல்ப்ரீத்சிங்.

sai

பிரபுதேவாவுடன் ஜோடிபோட்ட "தேவி' முதல் பாகமும் படுத்துச்சு. உதயநிதியுடன் ஜோடி போட்ட "கண்ணே கலைமானே'-வும் காலை வாரிருச்சு. இப்ப ரிலீசாகியிருக்கும் "தேவி-2'-வும் ஊத்தியதால் ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறார் தமன்னா. ""ஜி.வி. பிரகாஷை வைத்து ஏ.எல். விஜய் எடுத்த "வாட்ச்மேன்' படம் வந்ததும் தெரியல, போனதும் தெரியல. இப்ப ரிலீசாகியிருக்கும் "தேவி-2'-வும் கவுத்திருச்சு. டைரக்டர் விஜய்யிடம் சரக்கு காலியாகிருச்சு'' என தனது தோழிகளிடம் கேஷுவலாகப் பேசிக் கொண்டிருக்கும் போது சொல்லும் தமன்னா, கன்னட ஹீரோ யாஷ்ஷுடன் ஒரு படத்தில் ஜோடி போட பேசி வருகிறாராம்.

"அகம்பாவம்' படத்தின் இளம் ஹீரோயின் சமீரா சாயின் தாய் இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தை இந்து மதத்தைச் சேர்ந்தவர். அதனால் இரண்டு மதங்களின் பண்டிகையையும் சிறப்பாகக் கொண்டாடுவதோடு, அந்தப் பண்டிகை நாளில் தன்னால முடிந்த உதவிகளை விளம்பரமே இல்லாமல் ஏழைகளுக்கு வழங்குவராம் சமீரா சாய். இந்த ரம்ஜான் பண்டிகை நாளில் பத்து ஏழைகளுக்கு பிரியாணியும் துணிமணிகளும் கொடுத்து ஹேப்பியாகியிருக்கிறார் சமீரா சாய்.

cine180619
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe