Advertisment

ஒரு நடிகையும் நாலுபேரும்! சந்தி சிரிக்கும் "அந்த' சண்டை!

/idhalgal/cinikkuttu/actress-and-four

"கள்ளக் காதலுடன் நடிகை ஓட்டம்! கணவன் நடிகர் கதறல்!' என்ற தலைப்பில் 2019 ஜன.29 தேதியிட்ட நமது "சினிக்கூத்து' இதழில் அட்டைப் படச் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த நடிகையின் கள்ளக் காதலும், கணவன் நடிகரின் கதறலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

Advertisment

"பட்டதாரி' படத்தில் ஹீரோவாக அறிமுகமான அபி சரவணனும், அதேபடத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதிதி மேனனும்தான் அந்தப் பிரச்சினைக்குரிய ஜோடி(??!!)கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அபி சரவணன் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி பரவியது.

actress

ஆனால், ""நான் கடத்தப்பட வில்லை; நண்பர்களுடன் பேசுவதற்காக பக்கத்துத் தெருவுக்குப் போயிருந் தேன். என்னோட செல்ஃபோனை வீட்டில் வச்சுட்டுப் போனதால எங்க அப்பா பயந்துட் டாரு'' என சமாளித்தார் சரவணன். என்றாலும் போலீசுக்கோ லைட்டா ஒரு டவுட்டு இருந்துக் கிட்டே இருந்துச்சு.

அந்த டவுட்டு இப்ப க்ளியர் ஆகிருச்சு.

Advertisment

அது எப்படின்னா, ஓடிப்போன தனது மனைவி அதிதி மேனன

"கள்ளக் காதலுடன் நடிகை ஓட்டம்! கணவன் நடிகர் கதறல்!' என்ற தலைப்பில் 2019 ஜன.29 தேதியிட்ட நமது "சினிக்கூத்து' இதழில் அட்டைப் படச் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த நடிகையின் கள்ளக் காதலும், கணவன் நடிகரின் கதறலும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

Advertisment

"பட்டதாரி' படத்தில் ஹீரோவாக அறிமுகமான அபி சரவணனும், அதேபடத்தில் ஹீரோயினாக அறிமுகமான அதிதி மேனனும்தான் அந்தப் பிரச்சினைக்குரிய ஜோடி(??!!)கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அபி சரவணன் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி பரவியது.

actress

ஆனால், ""நான் கடத்தப்பட வில்லை; நண்பர்களுடன் பேசுவதற்காக பக்கத்துத் தெருவுக்குப் போயிருந் தேன். என்னோட செல்ஃபோனை வீட்டில் வச்சுட்டுப் போனதால எங்க அப்பா பயந்துட் டாரு'' என சமாளித்தார் சரவணன். என்றாலும் போலீசுக்கோ லைட்டா ஒரு டவுட்டு இருந்துக் கிட்டே இருந்துச்சு.

அந்த டவுட்டு இப்ப க்ளியர் ஆகிருச்சு.

Advertisment

அது எப்படின்னா, ஓடிப்போன தனது மனைவி அதிதி மேனனைத் தன்னுடன் சேர்த்து வைக்கும்படி மதுரை கோர்ட்டில் வழக்குப் போட்டிருந் தார் சரவணன். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நேரத்தில்தான் "கடத்திவிட்டார்கள், கடத்தலை' என செய்தி பரவியது. இந்த நியூஸ் அடங்கிய நேரத்தில் தான், ""சரவணன் என்னைக் கல்யாணம் பண்ணியதாக காட்டும் சர்டிபிகேட் டூப்ளிகேட். எனக்கும் அவருக்கும் கல்யாணம் நடக்கவே இல்லை.

actress

"பட்டதாரி' படத்துல நடிச்ச ஹீரோயினையும் இதே மாதிரிதான் ஏமாத்துனாரு. அந்தப் பொண்ணுதான் இவரைப் பத்தி சொல்லிலி உஷாரா இருக்கும்படி அட்வைஸ் பண்ணுச்சு. இதைவிட முக்கியம், "கஜா' புயல் நிவாரண நிதின்னு சொல்லிலி ஏகப்பட்ட பேரிடம் வசூல் பண்ணி, கார், பங்களான்னு வாங்கிட்டாரு சரவணன். எனவே அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்''னு சரவெடி புகார்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத் தில் புகார் கொடுத்தார் அதிதி மேனன்.

""என்னதாங்க நடக்குது உங்களுக் குள்'' என்ற கேள்வி உடன் அபி சரவணனைச் சந்தித்தோம். ""கொடுமை சார். எல்லாமே கொடுமை சார். "நெடுநல்வாடை'-ங்கிற படத்துலதான் அதிதி மேனன் அறிமுகமாச்சு. பத்து நாள் ஷூட்டிங் முடிஞ்சதும், அந்தப் படத்தோட டைரக்டர் செல்வகண்ணன், தன்னை படுக்கக் கூப்பிட்டதா கூப்பாடு போட்டதும், ஆத்தாடி இந்தப் பொண் ணோட சங்காத்தமே வேணாம்னு அதிதியைத் தூக்கிட்டு, கேரளா வைச் சேர்ந்த இன்னொரு பொண்ணை ஹீரோயி னாக்கி, படத்தையும் எடுத்து முடிச்சாரு செல்வ கண்ணன்.

actress

இதெல்லாம் எனக்குத் தெரிஞ்சும், 2016-ல ஆசை ஆசையாய் கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பிச்சோம். சென்னை சாலிலிகிராமத்துல அவளோட பேர்ல வீடு வாங்கிக் கொடுத்தேன். நகைநட்டுன்னு அவ கேட்ட தெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். கேரளாவின் மூணாறுக்குப் பக்கத்துல அவளுக்குச் சொந்த ஊரு. சமூக சேவைகள் காரணமாவும், ஷூட்டிங் காரணமாவும் பெரும்பாலும் நான் வெளியூர் களுக்குப் போயிருவேன். கஜாபுயலின் போது அந்த ஏரியாக்களுக்குப் போய்ட்டா. சென்னை திரும்பி வந்தப்ப, வீட்ல ஒரு பொருள் இல்லாம துடைச்சு எடுத்துட்டு, வீட்டையும் பூட்டிட்டுப் போய்ட்டா. அப்புறம் விசாரிச்சப்பதான் அவளுக்கு கேரளாவுல ஒரு லவ்வர், இங்கே சுஜித்துன்னு ஒரு லவ்வர் இருக்குற சங்கதியே தெரிஞ்சது.

அந்த சுஜித்தான் இவள வளசரவாக்கம் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட் டுப் போயிருக்கான். எதுக்கு கூட்டிட்டுப் போயிருப்பான்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க. இந்த சுஜித் யாருன்னா, கோயமுத்தூர்ல ஏகப்பட்ட பள்ளிக்கூடங்களும், மில்லும் நடத்துற தொழிலதிபர் ஒருவரோட மகன். இந்த கேவலமெல்லாம் பத்தாதுனுன்னு, மூணாவதா ஒருத்தனை மடக்கிருக்கா. அவன் பேரு தர்ஷன் வெங்கட். "வில்லன்', "படையப்பா' படங்களின் கேமராமேனின் மகன்தான் இந்த தர்ஷன். இப்பக்கூட தலைவர் ரஜினியின் "பேட்ட' படத்தின் கேமராமேன் திருவிற்கு அஸிஸ்டெண்டா இருந்தான்'' என மூச்சுவிடாமல் பேசியவரை ஆசுவாசப்படுத்திவிட்டு, நமது கேள்வியைத் தொடர்ந்தோம்.

""டூப்ளிகேட் சர்டிபிகேட், "பட்டதாரி' படத்தின் ஹீரோயினை சீட்டிங் பண்ணியது, கஜா புயல் கலெக்ஷன்ல வீடு வாங்கியதுன்னு நீங்களும் லேசுப்பட்ட ஆளில்லைபோல'' என கொக்கியைப் போட்டோம்.

""அண்ணே, நான் கல்யாணம் பண்ணியது நிஜம். அதுக்கான ஒரிஜினல் சர்டிபிகேட் எங்கிட்ட இருக்கு. அந்த ஹீரோயின் விவகாரத்துல நான் ராமனுமில்லை;

actress

அதிதி மேனன் சீதையுமில்லை.

கஜா புயல் கலெக்ஷன்னு சொல்றது சுத்த ஹம்பக். இப்ப நான் இருக்குற என்னோட வீடு பேங்க்ல லோன் வாங்கி கட்டியது. இந்த வீட்டைத் தவிர சென்னையில் எனக்கு வேறு வீடு எதுவுமில்லை'' என்றார் உறுதியுடன்.

அபி சரவணனின் குற்றச் சாட்டுக்கு விளக்கம் பெற 9176467373 என்ற அதிதி மேனனின் செல்ஃபோன் நம்பருக்கு தொடர்ச்சியாக தொடர்பு கொண்டபோதும் "ஸ்விட்ச் ஆஃப்' என்ற மெட்டாலிக் வாய்ஸ் சொன்னது.

நாட்ல பெரிய பெரிய கட்சிகளெல்லாம் ஸ்மூத்தா கூட்டணி அமைக்குது.

ஆனா கூட்டாச் சேர்ந்து வாழ்ந்த இந்த ரெண்டுபேரும் மாறிமாறி காறித் துப்பி நாறடிச்சுக்கிட்டிருக்காங்க.

-ஈ.பா. பரமேஷ்வரன்

ஸ்டில்ஸ் & படங்கள் : எஸ்.பி.சுந்தர்

cine050319
இதையும் படியுங்கள்
Subscribe