ஜூன் 22 சனிக்கிழமை இரவு... சென்னை கிண்டியை அடுத்த அம்பாள்நகரிலுள்ள ஹில்டன் நட்சத்திர ஓட்டல் பப்பில்... டி.ஜே மியூசிக்கில் வழக்கம்போல... விடியவிடிய... குடித்துவிட்டு இளசுகள் போதையில் கும்மாளம் போட்டுக்கொண்டிருந்தனர்.

Advertisment

grace

ஒரு பக்கம் நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸ்சும் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தார். அந்தசமயம் பூபேஷ் என்பவர் கருணாஸ் மனைவி அருகே டான்ஸ் போட்டுக் கொண்டிருந்தபோது கிரேஸ்க்கு இது பிடிக்கவில்லையென்று தன்னுடன் வந்தவர்களிடம் சொல்ல...

அவனைத் தள்ளிப்போய் ஆட்டம்போட சொன்னபோது ஏற்பட்ட மோதல் முற்றி அடிதடியாக மாறியது.

Advertisment

grace

அப்போது கிரேஸ்சுடன் வந்த சஞ்ஜெய் பூபேஷ்சுடன் மோதிக்கொள்ள மேலும் இருதரப்பு மோதல் முற்றிவிட்டது. நடிகர் கருணாஸ், நடிகர் விமல், பரோட்டா சூரி என மேலும் பலர் சேர பலமாகத் தாக்கி புபேஷின் சட்டையைக் கிழித்துத் தொங்க விட்டனர்.

எப்போதும் போல முடிவில் வந்த கிண்டி போலீசார் அடிவாங்கிய வரை மீட்டு, அவர்மீதே வழக்குபோட்டு அபராதமும் வசூல்செய்து விட்டனர். வழக்கமாக கருணாஸ் அண்டு கோதான் இரவு பப்புகளில் தகராறு செய்து அடிதடியில் முடியும். தற்போது அவர் மனைவி களத்தில் இறங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் புதிய பரபரப்பாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக அடையாறு காவல் துறை துணை ஆணையர் ஷசாங் ஷாயிடம் நாம் கேட்டபோது ""சம்பவம் உண்மைதான். அது அவர்களுக்குள் நடந்தது. பின்னர் அவர்களே சமாதானம் செய்து கொண்டனர்'' என்றார்.

போதைன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும் பாஸ்.

-அரவிந்த்