தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா- அமலா தம்பதியரின் மகன் அகில் நடித்து, தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்று, 50 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்த "ஹலோ' படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகார்ஜூனாவே தயாரிக்கிறார்.

Advertisment

கதாநாயகியாக மலையாள மாஜி ஹீரோயின் லிசியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

Advertisment

akhil

மாதவன் நடித்த "யாவரும் நலம்', சூர்யா நடித்த "24' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம். கே. குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

"பாகுபலி' படத்திற்குபிறகு ரம்யாகிருஷ்ணா இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள் ளார். மற்றும் ஜெகபதி பாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - P.S.. வினோத், இசை- அனூப் ரூபன்ஸ், எடிட்டிங்- பிரவீன் புடி, மக்கள் தொடர்பு - மணவை புவன், படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறார் ஸ்ரீலஷ்மி ஜோதி கிரியேஷன்ஸ் A.N.பாலாஜி.

""நான் குழந்தையாக நடித்த "சுட்டிக் குழந்தை' படத்தை வெற்றிபெறச் செய்த தமிழக மக்கள்மீது எப்பொழுதும் எனக்கு மதிப்பு உண்டு. அதேபோல் என் அம்மா தமிழ்ம் படத்தில் அறிமுகமாகிதான் புகழ் அடைந்தார்.

"ஹலோ' படம் நான் கதாநாயகனாக நடித்துள்ள படம். இந்தப் படத்தையும் தமிழ் ரசிகர்கள் பெரும் வெற்றிபெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன். என் நன்றியை தமிழ் ரசிகர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்'' என்கிறார் அமலாவின் புதல்வர் அகில்.