இன்று நாட்டில் பற்றி எரிகிற பிரச்சினையாக வடி வெடுத்து நிற்கிறது விவசாயிகள் சார்ந்த பிரச்சினை. இதை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்தான் "வாழ்க விவசாயி.' மேலோட்டமாக இல்லாமல் முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை அலசுகிற இந்தப் படத்தில் நாயகனாக நடித்தி ருக்கிறார் தேசிய விருது நடிகர் அப்புக் குட்டி. படம் பற்றிய அனுபவங்களைப் பெருமையுடன் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அப்புக்குட்டி...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vasantura.jpg)
.""எனக்கு "அழகர்சாமியின் குதிரை' படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித்தந்தது. அதற்குப் பிறகு நான் விரும்பிய ஒரு கதையாக "வாழ்க விவசாயி' கதை அமைந்திருக்கிறது. இயக்குநர் பி.எல். பொன்னிமோகன் சொன்ன கதை மட்டும் பிடித்திருந்தால் போதுமா? இதைத் தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே. அப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின்மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன்பணம் கொடுத்தார். படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார் .
படமெடுப்பது என்று முடிவானதும் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது. யார் கதாநாயகி? அவர் எப்படி இருப்பார்? என்பதுதான் அது. ஏனென்றால் என் உயரத்துக்கு அவரும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு.
நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. அவர் என்னை விட உயரமாக இருப்பாரே. என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை. ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது, பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது. அவர் உயரம் தெரியாதபடியும், நிறம் தெரியாதபடியும் மேக்கப்பில் நிறத் தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட் டார்கள் . வசுந்தரா ஒரு அர்ப்பணிப் புள்ள நடிகை. அவர் வழக்கமான கதா நாயகி கிடையாது! அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித்தரும். தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப் பணிப்பையும் காட்டியிருக்கிறார்.
"வாழ்க விவசாயி' படம் என்னை வாழவைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்'' என்கிறார் பெருமையாக.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-09/vasantura-t.jpg)