Advertisment

அதிரடி வில்லி சோனியா அகர்வால்

/idhalgal/cinikkuttu/action-willi-sonia-agarwal

ஸ்ரீஸ்ரீகணேஷா கிரியேஷன் பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் "உன்னால் என்னால்'.

Advertisment

ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குநர் ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா நடிக்கிறார்.

ஸ்ரீஸ்ரீகணேஷா கிரியேஷன் பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் "உன்னால் என்னால்'.

Advertisment

ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடமொன்றில் இயக்குநர் ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா ஆகியோர் நடிக்கிறார்கள். ராஜேஷ், ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர். சுந்தர்ராஜன், நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

sonia agarwalசோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படம் பற்றி இயக்குநர் ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா கூறியதாவது...

""பணம் என்பது இன்று எல்லாருக் கும் தேவையான ஒன்றுதான். தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்குவழிக்குத்தான் போக வேண்டும்.

Advertisment

மிகப்பெரிய பணக் காரர் ராஜேஷு. செகரட்ரியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷைக் கொலை செய்துவிட்டு அந்த சொத்துகள் அனைத்தையும் அபகரிக்கத் திட்டமிடுகிறார். அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ், ஜெயகிருஷ்ணா மூவரும்.

இவர்களை வைத்து ராஜேஷைக் கொலைசெய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றிபெற்றதா? இல்லையா என்பதுதான் கதை.

அமைதியான கடலுக்குள்தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அதுமாதிரி சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்'' என்றார்.

cine040918
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe