/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/simran-trisha1.jpg)
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய ஆக்ஷன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தை இயக

இந்தப் படத்தை இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே "சதுரம் 2' என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜயராகவேந்திரா பேசுகையில், ""இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்ஷன் காட்சிகளும் நிறைந்த படமாக தயாராகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னை பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தப் படத்தில் நடிப்பதற்காக சிம்ரனுக்கும், திரிஷாவிற்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது'' என்றார்.
இதனிடையே ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜீவா, ஷாலினிபாண்டே நடிப்பில் உருவாகியிருக்கும் "கொரில்லா' என்ற காமெடி படம் கோடை விடுமுறையில் ரிலீசாகிறது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us