"சுந்தரபாண்டியன்' எனும் மாபெரும் வெற்றிப் படத்தில் வில்லனாக அறிமுகமானார் சௌந்தரராஜா. தொடர்ந்து "வருத்தப்படாத வாலிபர் சங்கம்', "ஜிகர்தண்டா', "தெறி', "தர்மதுரை', "கடைக்குட்டி சிங்கம்' மற்றும் சமீபத்தில் வெளியான "சில்லுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராகவும், "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', "ஒரு கனவு போல' படங்களில் ஹீரோவாகவும் தனக்கென ஒரு பாதையில் வளர்ந்துவரும் இளம் நடிகர் சௌந்தரராஜா, முதன்முறையாக முழுநீள ஆக்ஷனில் களம் இறங்கியிருக்குறார்.

aa

"காபி' என்னும் படத்தின்மூலம் ஆக்ஷன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சௌந்தரராஜா, சண்டைக் காட்சிகளுக்காக சிறப் புப் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். படத்தின் ஹீரோயினான இனியாவுக்கு இணை யான கேரக்டராம் சௌந்தர்ராஜாவுக்கு. இப்படத்தை அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத் தின் சார்பாக சாரதி மற்றும் சதீஷ் இத்திரைப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

மேலும், நடிகர் சௌந்தரராஜா ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் வளர்ந்துவரும் "தளபதி 63'-ல், இளைய தளபதி விஜயுடன் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துக்கொண்டிருக் கிறார்.