கார்த்தி நடித்த "மெட்ராஸ்' என்ற படத்தின்மூலம் சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்பறிவ். அதனையடுத்து இதுவரை 95-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றி யிருக்கிறார்கள். அண்மையில் வெளியான "கே ஜி எஃப்' படத்தில் இவர்களது உழைப்பை பாராட்டாதவர்களே இல்லை.

Advertisment

anbarivuஇந்தப் படத்தின்மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றிருக்கும் இவர்கள் என்ன சொல்ல வர்றாங்கன்னா...

""கே ஜி எஃப்' படத்தின் கதையை இயக்குநர் எங்களிடம் விவரித்த போது, வித்தியாசமான கதைக்களம் எங்களைக் கவர்ந்தது. அதன்பிறகு தயாரிப்பாளர், ஹீரோ யஷ் சார், இயக்குநர் பிரசாந்த் நீல், கேமராமேன் புவன் என அனைவரும் அளித்த ஒத்துழைப்பால்தான் இந்த வெற்றியை எட்டமுடிந்தது. இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காகக் கிட்டத்தட்ட முப்பத்தைந்து நாள்முதல் நாற்பது நாள்வரை படப்பிடிப்பு நடைபெற்றது.

ஆக்ஷன் காட்சிகள் வரும்போது இயக்குநர் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்ததால் எங்களின் பொறுப்பு மேலும் கூடியது.

Advertisment

சென்னையில் ஆக்ஷன் அகாடமி ஒன்றைத் தொடங்கவிருக்கிறோம். இங்கு வந்து ஆக்ஷனுக்காக உருவாக்கிய சண்டைக் காட்சிகளை ஒத்திகை பார்க்க லாம். இதன்மூலம் படப்பிடிப்பின்போது ஏற்படும் காலவிரயம் தவிர்க்கப்படும். முன்கூட்டியே திட்டமிட்டு சண்டைக் காட்சிகளை அமைப்பதால், அதனை புதுமையாகவும் செயல்படுத்துவதற்கு உதவும்.

இங்கு ஒத்திகை மட்டுமில்லாமல் ஆக்ஷன் காட்சியில் எப்படி நடிக்கலாம் என்ற தொழில்நுட்பத்தையும் கற்பிக்க விருக்கிறோம். அத்துடன் பாதுகாப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பது எப்படி என்பதையும் சொல்லிக் கொடுக்க விருக்கிறோம்'' என்கிறார்கள் உற்சாகமாக.