1980-களில் இராம நாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படை யில் "தொரட்டி' தமிழ் திரைப் படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.

Advertisment

இயற்கை விவசாயத்திற்கு இன்றியமையாத, கிடை போடும் கீதாரிகளின் வாழ்க்கைப் பின்னணியில் அமைந்துள்ள இந்த கதையை முற்றிலும் புதிய வர்கள் இணைந்து உருவாக்கி யிருக்கிறார்கள்.

Advertisment

awards

அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேசத் திரைப் பட விழாவில் நடந்த திரையி டல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத இராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வு களை, கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழுந்துநின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை "தொரட்டி'-யின் ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதருக்கு அளித்தனர்.

செக்கோஸ்லோவாகியாவில் நடந்த டதஆஏமஊ மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக் கான விருது "தொரட்டி' கதையின் நாயக னான ஷமன் மித்ருவுக்கு வழங்கப்பட்டது.

மேலும் பல திரைப்பட விழாக்களில் கலந்துகொள்ள உள்ள இப்படத்தினை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் வாங்கி வெளியிடுகிறது.