Advertisment

ஆத்தாடி ஆத்தோவ் நடிகைகள்!

/idhalgal/cinikkuttu/aadhaad-aathov-actresses

aac

ஸ்கார்லெட் ஜான்சன்

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை களின் இந்த ஆண்டுக் கான லிஸ்டை வெளியிட்டி ருக்கிறது "ஃபோர்ப்ஸ்' நிறுவனம். அதில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சக்கைப்போடு போட்ட "அவெஞ்சர் தி எண்ட் கேம்' படத்தில் ப்ளாக் விடோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜான்ஸன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். சென்ற ஆண்டும் இதே இடத்திலிருந்த ஸ்கார்லெட்டின் தற்போதைய சம்பளம் 56 மில்லியன் அமெரிக்க டாலராம்! நம்ம ரூபாய்க்கு 398 கோடியே 60 லட்சம். அதுபோக, அடுத்ததாக மார்வெல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும், "தி ப்ளாக் விடோ' என்ற சூப்பர் ஹீரோயின் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

Advertisment

இந்தப் படத்திற்காகவும் லம்ப்பாக ஒரு அமவுண்ட் ஸ்கார்லெட்டுக்கு சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தின் தாறுமாறான போஸ்டர் வெளியாகிவுள்ள நிலையில், வசூல்ரீதியில் ஜொலிக்குமா என்ற கேள்வி இப்போது வலம்வருகிறது. காரணம், "தி எண்ட் கேம்' படத் தின் கதைப்படி, உலகைக் காப்ப தற்காக ப்ளாக் விடோ கதாபாத்தி ரத்தில் நடித்த

aac

ஸ்கார்லெட் ஜான்சன்

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை களின் இந்த ஆண்டுக் கான லிஸ்டை வெளியிட்டி ருக்கிறது "ஃபோர்ப்ஸ்' நிறுவனம். அதில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் சக்கைப்போடு போட்ட "அவெஞ்சர் தி எண்ட் கேம்' படத்தில் ப்ளாக் விடோ என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜான்ஸன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். சென்ற ஆண்டும் இதே இடத்திலிருந்த ஸ்கார்லெட்டின் தற்போதைய சம்பளம் 56 மில்லியன் அமெரிக்க டாலராம்! நம்ம ரூபாய்க்கு 398 கோடியே 60 லட்சம். அதுபோக, அடுத்ததாக மார்வெல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும், "தி ப்ளாக் விடோ' என்ற சூப்பர் ஹீரோயின் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

Advertisment

இந்தப் படத்திற்காகவும் லம்ப்பாக ஒரு அமவுண்ட் ஸ்கார்லெட்டுக்கு சம்பளமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தின் தாறுமாறான போஸ்டர் வெளியாகிவுள்ள நிலையில், வசூல்ரீதியில் ஜொலிக்குமா என்ற கேள்வி இப்போது வலம்வருகிறது. காரணம், "தி எண்ட் கேம்' படத் தின் கதைப்படி, உலகைக் காப்ப தற்காக ப்ளாக் விடோ கதாபாத்தி ரத்தில் நடித்த ஸ்கார்லெட் இறந்துபோவதாகக் காட்டப் பட்டது. அப்படியெனில், இறந்துபோன ஒரு கதா பாத்திரத்துக்கு எதற்காக ஒரு தனிப்படம் என்பதுதான் ரசிகர்கள் எழுப்பும் பிரதான கேள்வி. ஆனால், இதையெல் லாம் சட்டை செய்யாமல், தனது வருங்கால கணவர் காலின் ஜாஸ்ட் உடன் வெக்கேஷனில் பிஸியாகிவிட்டார் ஸ்கார்லெட்

Advertisment

ss

சோஃபியா வெர்கரா

"ஃபோர்ப்ஸ்' வெளியிட்டிருக்கும், ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் இரண்டாம் இடத்தைப் பிடிப்ப வர் சோஃபியா வெர்கரா. 47 வயதைக் கடந்தாலும் சோஃபியா இன்னமும் இளமையாகவே இருக்கிறார். "தி மாடர்ன் ஃபேமிலி' என்ற தொடரின்மூலமாகவே சோஃபியா லைம்லைட்டிற்கு வந்தார். கொல்ம்பியா கடற் கரையில் காலார நடந்துசென்ற சோஃபியாவை ஒரு போட்டோ கிராஃபர் படம் பிடித்தார். அந்தப் படங்கள் சீக்கிரமே பிரபலமாகிவிட, சோஃபியாவை உலகம் ரசிக்கும் மாடலாக்கி, அழகு பார்த்திருக்கின்றன பல நிறுவனங்கள். வாய்ப்பில்லாத காலத்தில், சோஃபியா வேறொரு பெயரில் அந்தமாதிரி படங்களில் நடித்த தாகவும் சில தகவல்கள் சொல்கின்றன. சில ஆண்டு களுக்குமுன்னர் தனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த லோயிப் என்பவருடன் சோஃபியா வாழ்ந்துவந்தார். அப்போது சேகரிக்கப்பட்ட கருமுட்டை பாதுகாப்பு தொடர்பாக இன்னமும் கோர்ட் படிகளில் ஏறி இறங்குகிறார் சோஃபி. தற்போது ஜோ மாக்னீலோ என்பவரைத் திருமணம் செய்துகொண்டு குஷியாக வாழும் சோஃபியாவின் சம்பளம் 44.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாம்! நம்ம ரூபாய்க்கு 313 கோடியே 90 லட்சம்.

aa

ரீஸ் விதர்ஸ்பூன்

ஹாலிவுட் கதாநாயகி களின் "ஃபோர்ப்ஸ்' சம்பளப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் ரீஸ் விதர்ஸ்பூன். இவர் மற்ற கதாநாயகிகளிலிருந்து மாறுபட்டவர். சினிமாத்துறையில் நுழைந்த காலகட்டத்தில் இருந்தே, பெண்ணியம் குறித்து ஆழமாக விவாதித்து வருகிறார். ஹாலிவுட்டில் பெண்ணியக் கருத்துகளைப் பேச பல நடிகைகள் இருந்தாலும், தனது முன்னெடுப்புகளின்மூலம் அந்தக் கருத்துகளுக்கு நியாயம் கற்பித்தவர் ரீஸ். குறிப்பாக, தயாரிப்புத் துறையில் தனியே பல சாதனைகளை ரீஸ் நிகழ்த்தி இருக்கிறார். புதுமைகளை விரும்பும் ரீஸ், தொடர்ந்து தனது வீலாக் பக்கத்தில் பல புதிய தகவல்களைப் பகிர்ந்துவருகி றார். குறிப்பாக, குழந்தைகள் பராமரிப்புக்காக அவர் வெளியிடும் வீடியோக்கள் வைரல் லிஸ்டில் டாப்பில் இருக்கின்றன. இதற்காகவே ரீஸை, ""சூப்பர் மாம்'' என்று வர்ணிக்கின்றனர் இணையவாசிகள். #Ask Her More movement என்கிற ஹாலிவுட் பெண்கள் பாதுகாப்புக்கான ஒரு முன்னெடுப்பை எடுத்தவர்களுள் ரீஸ் அதிமுக்கியமான நபர். இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரரான ரீஸ் விதர்ஸ்பூன், தன் வயதால் அழகு பாதிக்கப்படுவது பற்றியெல்லாம் கவலை இல்லை என்றும், அதுதான் தன்னை அழகாக உணரச் செய் கிறது என்றும் சமீபத்தில் பேசி யிருக்கிறார். அவரது சம்பளம் 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள். நம்ம ரூபாய்க்கு 249 கோடியே 12 லட்சம்.

aa

நிக்கோல் கிட்மேன்

ஹாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயின் கள் லிஸ்டில் 34 மில்லியன் (நம்ம ரூபாய்க்கு 242 கோடி!) அமெரிக்க டாலர்களுடன் நான்காம் இடம் பிடித்திருக் கும் நிக்கோல் கிட்மேன் வேறு யாருமில்ல... "ஹாலிவுட் சூப்பர் மேன்' என வர்ணிக்கப்படும் டாம் க்ரூஸின் முன்னாள் மனைவிதான். 52 வயதான நிக்கோல் கீத் அர்பன் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். டாம் க்ரூஸ் உடன் தனக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளைத் தன்னுடன் வளர்த்துவரும் நிக்கோல், கீத் அர்பனின் இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். இந்நிலையில், நிக்கோல் மூன்றாவது (ஐந்து) குழந்தைக்கு அம்மா ஆகப்போகிறார் என்னும் வதந்தி வைரலாகியுள்ளன. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்தார் நிக்கோல் கிட்மேன். தன் வீட்டின் பால்கனியில் நிற்கும் நிக்கோல், வெள்ளை நிறத்தில் தொளதொளவென்று இருக்கும் ஆடையொன்றை அணிந்திருக்கிறார். அதுவும் கர்ப்ப காலங்களில் பெண்கள் நிற்பதுபோல கைகளை இடுப்பில் வைத்திருப்பது, ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்டது. ரசிகர்கள் பலரும் நிக்கோலுக்கு வாழ்த்துச் சொல்லவே தொடங்கிவிட்டார்கள். சில மாதங்களுக்குமுன்னர் நிக்கோல் தனது மூன்றா வது குழந்தைக்கு திட்ட மிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. நிக்கோலின் உறவினர் வட்டமே இந்த செய்தியை வியந்து பார்க்கி றது. இந்த வயசில் எப்படி வலிகளைத் தாங்கிக்கொள்ளப் போகிறார் என்பதுதான் வியப்புக்குக் காரணமாம். "ஆத்தாடி ஆத்தோவ் இம்புட்டுப் பெரிய சம்பளமா...!' என நம்ம ஊரு நடிகைகளை வாய்பிளக்க வைக்கிறார்கள் ஹாலிவுட் நடிகைகள்.

-மூன்கிங்

cini081019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe