Advertisment
/idhalgal/cinikkuttu/96-review

பொதுவாக சினிமா விமர்சனம் என்பது அந்த சினிமா ரிலீசுக்குப் பின்புதான் வரும். ஆனால் "96' படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபாலும் ஹீரோ விஜய் சேதுபதியும் போட்ட பக்கா ப்ளானால் அக். 04-ஆம் தேதி "96' ரிலீசுக்கு இரு நாட்களுக்கு முன்பே விமர்சனங்கள் வெளியாகி படத்தின்மீது எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

Advertisment

அக். 01-ஆம் தேதி பி

பொதுவாக சினிமா விமர்சனம் என்பது அந்த சினிமா ரிலீசுக்குப் பின்புதான் வரும். ஆனால் "96' படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபாலும் ஹீரோ விஜய் சேதுபதியும் போட்ட பக்கா ப்ளானால் அக். 04-ஆம் தேதி "96' ரிலீசுக்கு இரு நாட்களுக்கு முன்பே விமர்சனங்கள் வெளியாகி படத்தின்மீது எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

Advertisment

அக். 01-ஆம் தேதி பிரஸ் ஷோ போட்டு முடித்ததுமே, ""டியர் ஃப்ரண்ட்ஸ் "96'’ உங்களுக்கு 100% பிடித்திருக்கும். எனவே உங்களது விமர்சனங்களை எழுத ஆரம்பிக்கலாம்'' என படத்தின் பி.ஆர்.ஓ. மௌனம்ரவி வாட்ஸ்-அப் தகவல் தட்டிவிட்டதுமே விமர்சனங்கள் வந்து விழுக ஆரம்பித்தன.

Advertisment

96

1996-ஆம் ஆண்டு படித்த பள்ளி மாணவர்கள், 20 ஆண்டுகள் கழித்து சந்திக்கிறார்கள். பள்ளிப் பருவத்தில் காதலித்து, சூழ்நிலைகளால் பிரிந்த ராம்- ஜானு ஆகியோரும் அந்த சந்திப்பில் இருக்கிறார்கள். இருவரின் வாழ்க்கையும் வெவ்வேறு திசைகளில் போனபின் நடக்கும் அந்த சந்திப்பில், இருவரும் பேசி சிரித்து கண்ணீர் வடித்துக் கழியும் அந்த ஒரு இரவுதான் படம்.

ராம் கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. தாதா, குடிகாரன், ரவுடி கேரக்டர்களில் வெளுத்துக்கட்டிய விஜய் சேதுபதி, இந்தக் காதலன் கேரக்டரிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் மனுஷன். அதற்கடுத்ததாக படத்தின் ஜீவனான கதாபாத்திரம் ஜானுவாக வரும் த்ரிஷா. தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் எப்படி இருந்தாரோ, அதைவிட அழகாகவே இருக்கிறார் த்ரிஷா.

காதலிலின் கொண்டாட்டத்தையும் வலியையும் மிகச் சரியாக இணைத்திருக்கும் டைரக்டர் சி. பிரேம்குமார் மீது சபாஷ் மழையையே பொழியவைக்கலாம். டைரக்டருக்குப் பக்கபலமாக இருந்து பிரமாதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் மகேந்திரன் ஜெயராஜ், சண்முகசுந்தரம்.

"96'- காதலில் விழாத வர்களையும் காதல் கைகூடாதவர்களையும் நிச்சயம் வசீகரிக்கும்; ஏங்க வைக்கும்.

cine161018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe