Advertisment

3 டைரக்டர்ஸ்... 3 மேட்டர்ஸ்! மன்னிப்புக் கேட்ட சமுத்திரக்கனி!

/idhalgal/cinikkuttu/3-directors-3-matters-apologist-forgiveness

சிகுமார்-அஞ்சலி ஜோடிபோடும் "நாடோடிகள்-2' படத்தின் ஷூட்டிங், சிவகங்கை மாவட்டம் வெள்ளளூரில் நடந்துவருகிறது. கார்களில் தொங்கியபடி, ஆஆஆ... ஊஊஊ... என ஆவேசமாக கத்தியபடி ரவுண்ட் வரும் சீன்களில் நடிப்

சிகுமார்-அஞ்சலி ஜோடிபோடும் "நாடோடிகள்-2' படத்தின் ஷூட்டிங், சிவகங்கை மாவட்டம் வெள்ளளூரில் நடந்துவருகிறது. கார்களில் தொங்கியபடி, ஆஆஆ... ஊஊஊ... என ஆவேசமாக கத்தியபடி ரவுண்ட் வரும் சீன்களில் நடிப்பதற்காக மதுரையிலிருந்து 50 இளைஞர்களை வரவழைத்திருந்தார் துணை நடிகர்கள் ஏஜெண்ட். மற்ற காட்சிகளை பிஸியாக ஷூட் பண்ணிக் கொண்டிருந்தார் டைரக்டர் சமுத்திரக்கனி.

Advertisment

3director

காலையிலிருந்து சும்மாவே உட்கார்ந்திருந்த ஐம்பதுபேருக்கும் சும்மா இருக்க முடியவில்லை. வெள்ளளூர் வாசிகளை நக்கல் பண்ணுவதும் சீனில் காண்பிக்க வேண்டிய ஆஆஆ... ஊஊஊ... ஆக்ரோஷத்தை கிராமத்து இளைஞர்களிடம் காட்டியதுமாக இருந்ததால், ஊரே ஒன்றுகூடி 50 பேர்மீதும் ஆவேசமாக பாயத் தயாரானார்கள். நிலவரம் கலவரமாகிவிடுமோ என பயந்த டைரக்டர் சமுத்திரக்கனி, ""அந்தப் பசங்க எல்லாம் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்தவர்கள்.

அவர்கள் பண்ணிய தப்புக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன், விஷயத்தை பெருசு படுத்தாதீங்க'' என சமாதானப்படுத்தியிருக்கிறார்.

அந்த 50 இளைஞர்களும் துணை நடிகர்கள் ஏஜெண்டை முறைத்துவிட்டுக் கிளம்பிவிட்டனர்.

Advertisment
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe