Advertisment
/idhalgal/cinikkuttu/2o-review

"ரஜினி சார் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை'' என்றார் ஷங்கர். ""இந்தியாவின் ஸ்பீல்பெர்க் ஷங்கர் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை'' என்றார் ரஜினி. ""நீங்கள் நடிக்கவில்லையென்றால் இந்தப் படமே எடுக்கப் போவதில்லை'' என ரஜினியிடம் சொன்னார் தயாரிப்பாளர் சுபாஸ்கரன். இந்த மூவரும் சொன்னதன் பிரம்ம்ம்மாமாமாண்ட... பிரதிபலிப்புதான் "2.ஒ.'

Advertisment

அளவுக்கதிமாக நிறுவப்படும் செல்ஃபோன் டவர்களின் ரேடியேஷனால் சிட்டுக்குருவி இனமே அழிந்துவருவதை எண்ணி கவலைப்படும் சமூக ஆர்வலர் பட்சிராஜன், பறவை இனத்தைக் காப்பாத்துங்க எ

"ரஜினி சார் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை'' என்றார் ஷங்கர். ""இந்தியாவின் ஸ்பீல்பெர்க் ஷங்கர் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை'' என்றார் ரஜினி. ""நீங்கள் நடிக்கவில்லையென்றால் இந்தப் படமே எடுக்கப் போவதில்லை'' என ரஜினியிடம் சொன்னார் தயாரிப்பாளர் சுபாஸ்கரன். இந்த மூவரும் சொன்னதன் பிரம்ம்ம்மாமாமாண்ட... பிரதிபலிப்புதான் "2.ஒ.'

Advertisment

அளவுக்கதிமாக நிறுவப்படும் செல்ஃபோன் டவர்களின் ரேடியேஷனால் சிட்டுக்குருவி இனமே அழிந்துவருவதை எண்ணி கவலைப்படும் சமூக ஆர்வலர் பட்சிராஜன், பறவை இனத்தைக் காப்பாத்துங்க என அமைச்சரிடம் முறையிடுகிறார்.

Advertisment

2.0

""அவனவன் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டிருக்கான். சிட்டுக்குருவியா முக்கியம்? போய்யா வேலையப் பாத்துக் கிட்டு'' என அவமானப் படுத்துகிறார் அமைச்சர்.

அதன்பின் கோர்ட்டுக்குப் போகிறார். அங்கே அவரின் நியாயம் மறுக்கப்படுகிறது.

இதனால் மனம் நொந்த பட்சிராஜன், செல்ஃபோன் டவரிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இறந்த சிட்டுக் குருவிகளின் ஆன்மா அவரின் உடலுக்குள் புகுந்துவிடுவதால், நாட்டில் செல்ஃபோன்களெல்லாம் மாயமாகிறது. யார் இந்த வேலையைப் பார்ப்பது என தலையைப் பிய்த்துக் கொள்ளும் அரசாங்கம், டாக்டர் வசீகரன் (ரஜினி) உதவியை நாடுகிறது.

மூல வேரைக் கண்டு பிடிக்கும் ரஜினியும், அவருக்கு அனைத்து வகைகளிலும் உதவியாக இருக்கும் ரோபா வான எமி ஜாக்சனும் சிட்டி (எந்திரன்-1)-யை மறுபடியும் உருவாக்கி பட்சிராஜனை அழிக்கிறார்கள். இந்த பூமியில் எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு தகுதி இருக்கிறது என்பதோடு படம் முடிகிறது.

akshayபடத்தின் முதல் சீனிலிருந்தே தனது பிரம்மாண்ட வித்தையைக் காட்ட ஆரம்பிக்கும் டைரக்டர் ஷங்கர், படம் முடியும்வரை பட்டையைக் கிளப்பியிருக்கிறார். அதிலும் 3-டி வெர்ஷனில் பார்க்கப் பார்க்க பரவசம்தான். டாக்டர் வசீகரனைவிட, 2.ஒ சிட்டியாக வரும் ரஜினிதான் செம மாஸ் & கிளாஸ். ""பட்சி ஒன்னோட ஆட்டம் குளோஸ்'' என நாக்கை ஒருபக்கமாக வெளியில் நீட்டி ரஜினி பேசும்போது, காது ஜவ்வைக் கிழிக்கிறது விசில். படத்தில் ரஜினிக்கு ஜோடி என யாருமே இல்லையே என்பது படம் முடிந்த பின்தான் பார்வை யாளனுக்கு தெரிகிறது.

படத்தின் மற்றொரு பெரிய ஹீரோ அக்ஷய் குமார்தான். மனுஷன் என்னமா பெர்ஃபாமென்ஸ் பண்ணிருக் காரு! ஒரிஜினல் முகத்தைக் காட்டாமலேயே வில்லத்தனத் தில் வெளுத்துக் கட்டியிருக்கார் அக்ஷய்குமார். க்ளைமாக்ஸில் ரஜினியும் அக்ஷய்குமாரும் மோதும் சீன் இருக்கே மிரட்டலோ மிரட்டல்!

""அவ்வளவு பெரிய நாடு அமெரிக்கா, அங்கேயே நாலு நெட் ஒர்க்தான் இருக்கு. உலகத்துலேயே அதிகமா செல்ஃபோன் பயன்படுத்துற சீனாவுல மூணு நெட் ஒர்க் தான். ஆனா இந்தியாவுல பத்துக்கும் மேல நெட் ஒர்க் இருக்கு'' ஷங்கர் பிராண்ட் பொலிடிக்கல் டயலாக்கு (வசனம் ஜெயமோகன்)ம் இருக்கு. ஷங்கரின் கடின உழைப்புக்கு ஈடு கொடுத்து உழைத்திருக்கிறார் கேமரா மேன் நிரவ்ஷா. பின்னணி இசையால் மிரட்டுகிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

"2.ஒ' இந்திய சினிமாவில் முக்கியமான சினிமா.

cine111218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe