Advertisment
/idhalgal/cinikkuttu/2323

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதைசொல்லும் படமாக "2323' உருவாகிறது.

Advertisment

கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்குமுன்பு "தமிழனானேன்' என்ற படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையானவர் மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றிபெறுவது என்பதைக் காட்சிப் படுத்தியிருந்தார்.

இந்த "2323' படத்தைப் பற்றி இயக்க

மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதைசொல்லும் படமாக "2323' உருவாகிறது.

Advertisment

கதை, திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்குமுன்பு "தமிழனானேன்' என்ற படத்தை எடுத்திருந்தார். அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையானவர் மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றிபெறுவது என்பதைக் காட்சிப் படுத்தியிருந்தார்.

இந்த "2323' படத்தைப் பற்றி இயக்குநர் பேசும்போது, ""இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கி றேன். இப்படம் 2020-ல் முதல் பாகத் தில் தொடங்கி, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும்.

இப்போது முதல் பாகத்தை உருவாக்கிவருகிறேன். இந்த 2020-ல் தொடங்கும் கதையை இப்போது உருவாக்கிவருகிறேன்.

Advertisment

2323

நம் கண்ணுக்குத் தெரியாத பூதாகர மான பிரச்சினையாக உருவாகி வருகிறது குடிநீர்ப் பஞ்சம். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர்ப் பற்றாக்குறையால் நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதன் எதிர்கால விஸ்வரூபத்தை நினைத்தால் பீதி ஏற்படுத்தும்.

இது வருங்காலத்தில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் இந்தத் தண்ணீருக்காக நடக்கும் அரசியலை யும் திரைமறைவு வணிகத் திட்டங்களையும் சுயநல வியாபாரங்களையும் நினைத்தாலே இப்போதே அச்சம் தருகிறது. அவற்றைத் தோண்டினால் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகும்.

இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையை மையமாக வைத்துத்தான் இந்த முதல் பாகத்தை எடுத்து வருகிறேன். "வெதர் கண்ட்ரோல்' எனப்படும் காலநிலையைக் கையில் எடுத்து அதைக் கட்டுப்படுத்துகிறான் வில்லன். மக்கள் வாழும் சூழ்நிலையையே கட்டுப்படுத்தும் அளவுக்கு அவன் வளர்கிறான். அவனை எப்படிக் கதாநாயகன் முறியடிக்கிறான் என்பதுதான் கதை.

இருபதே நாட்களில் இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இப்போது மெருகேற்றும் பணிகளில், தொழில்நுட்பப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இப்படத்தில் நாயகனாக நான் நடித்திருக்கி றேன். நாயகிகளாக சாத்விகா, கிரிஸ்டல் என இருவர் நடித்திருக்கிறார்கள். சாத்விகா கன்னடத்தில் இரு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து இருக்கிறார். கிறிஸ்டல் பம்பாயில் பிறந்த வர். நியூயார்க்கில் வசிக்கிறார். அவர் ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் இந்தியில் இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார்'' என்கிறார்.

"வெற்றித் தமிழ் உருவாக்கம்' நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை மசனையன் மகேந்திர குமார் தயாரித்திருக்கிறார்.

cini180220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe