ங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படம் "என் காதலி- சீன் போடுறா.'

இந்தப் படத்தில் "அங்காடிதெரு' மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் "ஆடுகளம்' நரேன், மனோபாலா, தியா, தென்னவன், வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி. கோகுல் நடித்துள்ளார்.

23days

அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு- வெங்கட், இசை- அம்ரிஷ், பாடல்கள்- ராம்சேவா, ஏகாதசி, கலை- சோலை அன்பு, நடனம்- சிவாலாரன்ஸ், சாண்டி, ஸ்டன்ட்- மிரட்டல் செல்வா, எடிட்டிங்- மாரிஸ், தயாரிப்பு மேற்பார்வை- தண்டபாணி, மக்கள் தொடர்பு- மௌனம் ரவி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்த "டீக்கடை பெஞ்ச்' படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குநர் ராம்சேவா கூறியதாவது-

""நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழவேண்டும். சந்தோஷமா வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்கவேண்டும். அப்படி ஜாக்கிரதை யாக இல்லாவிட்டால் ஏற்படுகின்ற பிரச்சினைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப் போட்டுவிடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம்தான் இது. இதை காமெடியாக வும் கமர்ஷியலாகவும் சொல்லியிருக் கிறோம். மனோபாலா காமெடியில் கலக்கியிருக்கிறார்.

வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம்.

அதற்கு பக்கபலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட் மற்றும் படக்குழு அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.'' என்றார். படத்தின் ஆடியோ ரிலீஸ் கடந்த வாரம் நடந்தது.