Advertisment
/idhalgal/cinikkuttu/20-days

ஜித்தின் "சிட்டிசன்' படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து காமெடி வேடங் களில் நடித்துவரும் "சிட்டிசன்' மணி, இதுவரை சுமார் 150-க் கும் மேற்பட்ட படங்களில் நடித் திருப்பதோடு, அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் உள்ளிட

ஜித்தின் "சிட்டிசன்' படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து காமெடி வேடங் களில் நடித்துவரும் "சிட்டிசன்' மணி, இதுவரை சுமார் 150-க் கும் மேற்பட்ட படங்களில் நடித் திருப்பதோடு, அஜித், விஜய், ரஜினி, சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக் களின் படங்களில் நடித்து வருபவர். வடிவேலு வுடன் இணைந்து பல படங்களில் காமெடி யில் கலக்கியவர், தற்போது "பெருநாளி' இயக்குநராக அவதாரமெடுத்திருக்கிறார்.

Advertisment

2

கடந்த மாதத்தின் தொடக்கத்தில் தனது படக்குழுவினருடன் நாகர்கோவிலில் முகா மிட்டவர், தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முழுப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் "சிட்டிசன்' மணி.

""தாய்மாமன்- மருமகள் சென்டிமென்ட்தான் படம். காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்து விதமான அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் படமாக இருக்கும்.

சுமார் 30 ஆண்டுகளாக சினிமாவில் பல துறைகளில் பணியாற்றியிருக்கிறேன். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்து, சரியான முறையில் திட்டமிட்டு இப்படத்தை குறுகிய காலத்தில் முடித்திருக்கிறேன்.'' என்றார் டைரக்டர் "சிட்டிசன்'மணி.

படத்தின் ஹீரோயின் மதுனிக்கா கொடுத்த ஒத்துழைப்பும் படப்பிடிப்பு விரைவாக முடிய ஒரு காரணமாம்.

Advertisment
cine300419
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe