இளம் இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த "உறியடி' திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் வந்திருந்தாலும், தமிழ்சினிமாவில் பெரும் அதிர் வலைகளைக் கிளப்பியது. "உறியடி'-யில் பேசிய சாதி அரசியலை இன்னும் வலிமையாகப் பேச உள்ளது "உறியடி-2.' சூர்யா தயாரித்துள்ள இப்படத்தை எழுதி, இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், "உறியடி', "உறியடி-2' எடுப்பதற் கான காரணம் என்ன? என்பதற்கு...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/uriyadi_0.jpg)
""இப்போதுள்ள சமூகத்திற்கு சாதிப் பிரிவினைதான் பெரும் பிரச்சினை. அதுதான் "உறியடி', "உறியடி-2' வருவதற்கான காரணம்"" என்கிற விஜய்குமார். மேலும் படம் பற்றி கூறும்போது, ""எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்பப் பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறதுதான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யல. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விஷயம் சினிமா. "Of all the arts, for us cinema is the most important'-னு லெனின் சொல்லியிருக்கார். "கலைகளில் சினிமாதான் பெருசு'ன்னு ஒரு கலைஞன் சொல்லியிருந்தா, அது தற்பெருமைன்னு சொல்லலாம். ஆனா இதைச் சொன்னவர் மாபெரும் புரட்சியாளர். சரி தவற்றைத் தாண்டி, எனக்கு எது சரியோ அதை நான் சினிமா மூலமா பண்ண நினைக்கிறேன். அதே சமயம் எனக்குள்ளே இருக்கிற படைப் பாளியைத் திருப்திப் படுத்தணும்'' என்றார்.
இந்தப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவித மாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் நடித்திருக்கிறார்கள். கூடவே யூ டியூப் மூலம் பலருக்கும் பரிட்சயமான "மெட்ராஸ் சென்ட்ரல்' சுதாகர் நடித்திருக் கிறார். "உறியடி'-யில் பணிபுரிந்த டெக்னிக்கல் டீம் இதிலும் ஒன்றிணைந் துள்ளது. "அசுரவதம்', "96' படங்களின் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/uriyadi-t.jpg)