குருநாத் சலசானி தயாரித்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது "18-5-2009.'
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eelam.jpg)
சுபாஷ் சந்திரபோஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். எழுத்து, இயக்கம்: கு. கணேசன். இவர் ஏற்கெனவே தமிழ் ஈழம் பற்றி "போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படத்தை இயக்கியவர். இசை: இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு: பார்த்திபன், சுப்பிரமணியன், கலை இயக்கம்: ப
குருநாத் சலசானி தயாரித்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது "18-5-2009.'
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eelam.jpg)
சுபாஷ் சந்திரபோஸ், பிரபாகரன். நாகிநீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடிக்கிறார்கள். எழுத்து, இயக்கம்: கு. கணேசன். இவர் ஏற்கெனவே தமிழ் ஈழம் பற்றி "போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படத்தை இயக்கியவர். இசை: இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு: பார்த்திபன், சுப்பிரமணியன், கலை இயக்கம்: பிரவீண், பாடல்கள்: மு. மேத்தா, பழனிபாரதி, நா. முத்துக்குமார், ஒலிக்கலவை: யுவராஜ். 2008-ஆம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை, 18-5-2009 வரை நீடித்தது. சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது. .
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eelam1.jpg)
தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக் காக அப்பாவிப் பெண்களைக் கூட வெறி பிடித்தமாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம். நீதி கேட்டுக் கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின்
காற்றுவெளிகளில் கரைந்துவிட்டது! தமிழின வரலாற்றில் ரத்தக் கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்து விடாமல், ரத்த மும் சதையுமாகச் சித்தரித்திருக்கிறது "18-5-2009.' அந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர். மரணத்தைத் தழுவும் நிலையிலும் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. தமிழினத் தைத் தலைநிமிரச் செய்கிற அந்த வீர வரலாற்றை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது "18-5-2009.' 18-5-2009 தமிழரின் குருதியால் எழுதப்பட்டிருக்கும் துயர வரலாறு. தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை வலுப்படுத்துகிற வரலாறு. இதுவரை தமிழ்த்திரை மொழியில் எழுதப்படாத வரலாறு. படம் வருகிற 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us