ரா சினிமாஸ் காவ்யா வேணுகோபால் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில், வீரா - மாளவிகா இணைந்து 100%நடிக்கும் படம் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.' நகைச்சுவைப் படமான இதில் பசுபதி, ரோபோ சங்கர், ஷாரா, "நான் கடவுள்' ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

Advertisment

இப்படம் குறித்து இயக்குநர் அவினாஷ் ராஜேந்திரன், ""பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இப்படம், விலாநோகச் சிரிக்கவைக்கும் காட்சிகள் நிரம்பியது. பல்வேறு பாத்திரங்களை மையப்படுத்தி சுற்றி வரும் இப்படம், நகைச்சுவை மூலம் அவர்கள் எவ்வாறு ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கின்றனர் என்பதை சுவைபடச் சொல்லும்.

நூறு சதவிகிதம் நகைச்சுவைக்கு உறுதியளிக்கும் இப்படத்தில் சில விசேஷங்களும் உண்டு.

குறிப்பாக, பசுபதி சாரைப் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், அவர் எந்த வகை யான வேடம் என்றாலும், மிகப்பிரம்மாதமாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்வார். வீராவைப் பொருத்தவரை இந்தப் படத்துக்குப்பிறகு அவரது பாணியே மாறிவிடும் என்றார்.''