சங்கிய உடை, கலைந்த கேசம், முகத்தில் சோகம், உடலில் தளர்ச்சி, பிரம்மை பிடித்தது போன்ற தோற்றம் கொண்ட ஒரு தம்பதியினர். 

Advertisment

ஜீவநாடியில் பலன்கேட்க வந்து, சிறிது நேரம் எதுவும் பேசாமலேயே அமர்ந்திருந்தனர். 

Advertisment

அவர்களைப் பார்த்து "என்ன காரியம் பற்றி பலன் கேட்க வந்தீர்கள்'' என்று கேட்டேன்.

ஐயா, "நாங்கள் எதைச் சொல்வது, பலன் கேட்க வந்த காரணத்தை எப்படி சொல்வது? அந்த மனநிலையில் இல்லையென்று மெல்லிய குரலில் கூறினார்.

Advertisment

இவர்கள் ஏதோவொரு துக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொண்ட நான் அகத்தியரை வணங்கி, ஜீவநாடி ஓலை யைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்.

ஓலையில் அகத்தியர் பலன் கூறத் தொடங்கினார். இவர்களுக்கு பிறந்த இரண்டு மகன்களும் இந்த பிறவியில் மட்டும் மகன்கள் அல்ல. இவர்களின் முன்பிறவிகளிலும், மகன்களாகப் பிறந்து வாழ்ந்தவர்கள்தான். முற் பிறவியில் பெரிய மகன், பெற்றவர்களுக்கு தான் பட்ட கடனை இப்பிறவியில் இவர்களுக் குத் தீர்க்கப் பிறந்தவன்.  இளைய மகனுக்கு முற்பிறவியில் இவர்கள் பட்ட கடனை இப்பிறவியில் இவர்களிடம் இருந்து, திரும்பபெற பிறந்தவன். முன் பிறவியில் இளைய மகனுக்கு பட்ட கடனை தீர்த்து முடித்தார்கள். தனது முற்பிறவி கடனை திரும்பப் பெற்றவுடன் அவன் வந்த வேலை முடிந்தது, கடனும் தீர்ந்தது, ஆயுளும் முடிந்தது, மரணம் அடைந்தான் என்றார்.

அகத்தியர் கூறியது எங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றார்.  இத்தம்பதியினர், முற்பிறவிகளில், இரண்டு மகன்களை பெற்றனர். 

இவர்களில் மூத்த மகன் தங்களுடனேயே வைத்து, பாசம் ஊட்டி வளர்த்துக் காப்பாற்றினார்கள்.  ஆனால் இளைய மகனை இவர்களே புறக்கணித்ததுபோல், தங்கள் உறவினர் ஒருவருக்கு வளர்க்க கொடுத்துவிட்டார்கள். 

அந்த மகனும் அடுத்தவர் பராமரிப்பு பாதுகாப்பில்  வளர்ந்தான்.  இவர்கள் பெற்ற மகனுக்கு தாய்- தந்தை செய்யவேண்டிய எதையும் செய்யவில்லை. இளைய மகன் தாய்- தந்தை அன்பு, ஆதரவு இல்லாமல், பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டதால், அவன் பித்ரு சோகத்தை அனுபவித்து வாழ்ந்தான்.

முற்பிறவிகளில், இவர்களால் புறக்கணிக்கப்பட்ட இளைய மகன், இந்த பிறவியிலும் இவர்களுக்கு மகனாகப் பிறந்தான்.  இவர்களும் அவனுக்கு செய்யவேண்டியதையெல்லாம் குறைவின்றி செய்து வளர்த்தனர். முற்பிறவியில் மகனுக்கு செய்யாததையெல்லாம் செய்தனர். 

பூர்வ ஜென்ம கடன் தீர்ந்தது.  பெற்றவர்கள் உறவும், பிறந்த வீடும் அன்னியமானது, அவன் வீட்டில் இறக்காமல் வெளியில் சென்று இறந்தான்‌.  மகன் ஆயுள் முடிந்துதான் இறந்தானே தவிர, வேறு எந்த சக்தியாலும் இவனுக்கு மரணம் உண்டாகவில்லை.

பூர்வ ஜென்மத்தில், பெற்றவர்களைப் பிரிந்து தாய்- தந்தை பாசம் வேண்டி, பித்ரு சோகத்துடன் வாழ்ந்தான். இந்த பிறவியில் அந்த வினைப் பலனாக இவர்கள் வாழவேண்டிய மகனை இழந்து, அவனை நினைத்து புத்திர சோகத்தில் வாழவேண்டும் என்பதும் வினையால் உண்டான விதிப்படிதான் அமைந்தது.

இவர்களின் இரண்டு மகன்களும் இரட்டைக் குழந்தைகள். ஒரே நட்சத்திரம், ராசி, லக்னம், தசை, புக்தி, ஒரே ஜாதகம், பலனும் ஒன்று போல்தான் நடக்கும் என்று ஜோதிடர்கள் கூறியதால், ஜாதகப்படி மூத்த மகனுக்கும் இதுபோன்று நடந்துவிடுமோ என்ற பயத்துடன் என்னிடம் கேட்கின்றான். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்காது. மூத்த மகனின் மரணம், ஆயுள் முடிவு, வேறு நிலை, அதையும் கூறுகின்றேன். அறிந்து வாழச்சொல்.

முற்பிறவியில் பெரிய மகனை இவர்கள் தங்களுடன் வைத்து, பாசத்துடன் வளர்த்து, அவனுக்குத் திருமணம் செய்துவைத்து தங்கள் சொத்துகளையும் கொடுத்தனர். பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய அனைத்தையும் செய்தனர்.  இதனால் இந்த பிறவியில் அவன் பித்ரு கடன் பெற்றவன்.  அதனால் இந்த பிறவியில் தாய்- தந்தையை காப்பாற்றி முற்பிறவியில் உண்டான பித்ரு கடனை தீர்த்து முடிக்கப்பிறந்தவன். பூர்வ ஜென்மத்தில் பெற்றவர்களுக்கு பட்ட கடனை தீர்த்து முடிக்கும்வரை அவனுக்கு மரணம் இல்லை. மூத்த மகன் நீண்ட ஆயுளுடன் வாழவும் ஒருவழி கூறுகின்றேன். இவர்கள் அதை கடைபிடித்து வாழ்ந்துவர வேண்டும். இதுதான் பரிகாரம்.

மூத்த மகன் சம்பாதித்து தரும் பணத்தை, சொத்தை இவர்கள் வாங்கக்கூடாது. இவர்களிடம் உள்ளதைக்கொண்டே இவர்கள் ஆயுள்வரை உண்டு, உடுத்தி வாழவேண்டும். மூத்த மகனிடம் இருந்து பணம், பொருள், உதவிபெற்று இவர்கள் வாழ்ந்தால் அவன் பித்ரு கடன் கொஞ்சம், கொஞ்சமாக தீரும்.  பெற்றவர்களுக்கு பட்ட கடன் தீர்ந்தால், அவன் ஆயுள் முடியும். இவர்கள் மகனுடன் சேர்ந்துவாழாமல் அவனைப் பிரிந்து தனியாக வாழவேண்டும். 

அவன் தன் மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசிக்கவேண்டும்.  

இறந்துபோன மகனைப் பற்றிய நினைவு, சோகத்தை விடுத்து இருக்கும் மகன் நீண்ட ஆயுளுடன் வாழ நான் கூறியதைக் கடைபிடித்து வாழ்ந்து வரச்சொல், நன்மையே நடக்கும் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

 இளைய மகன் இறப்பிற்கும் மூத்தமகன் நீண்டஆயுளுடன் வாழ காரண காரியத்தை அறிந்துகொண்டேன். அவர் கூறிய அனைத்தையும் கடைபிடித்து வாழ்கின்றோம். மனதில், சோகம், குழப்பத்துடன் வந்தவர்கள் தெளிவுபெற்று என்னிடம் விடை பெற்றுச் சென்றார்கள்.

இந்த பூமியில் பிறப்பவர்கள், ஒரு காரணத்தினால், அதற்குரிய காரியத்தை செய்து முடிக்கவே பிறக்கின்றார்கள். முற்பிறவி கர்ம வினை, ஊழ்வினை தீர்ந்து காரியம் முடிந்ததும் மரணம் அடைகின்றார்கள்  கிரகங்கள், கடவுள், ஜோதிடம், பரிகாரங்களால் பிறப்பையும், இறப்பையும் உண்டாக்கமுடியாது, வாழ்வில் நன்மை.  தீமைகளையும், உயர்வையும், வாழ்வையும் உண்டாக்கமுடியாது.  அவரவர் முற்பிறவி ஊழ்வினைப் பதிவுகளே அனைத்தையும் தீர்மானிக்கும், செயல்படுத்தி அனுபவிக்க செய்யும். அகத்தியர் ஜீவநாடியில், ஜோதிடர்கள் கூறுவதுபோன்று, அறிவுரை கூறமாட்டார். பாவ-சாபம் நிவர்த்தியாக வழிமுறைகளை கூறுவார் என்பதை நானும் புரிந்துகொண்டேன்.

செல்: 99441 13267