இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன. அறிவியல் முதல் ஆன்மிகம் வரையிலுள்ள அவற்றைப்பற்றி அவ்வப்போது நாம் அறிகின்றபோது ஆச்சரியம் மேவும். அதுபோன்ற விஷயங்களில் முதன்மையாக இருப்பது கோயில்கள் மற்றும் அவை கட்டப்பட்ட விதமாகும். நமது முன்னோர்கள் கோயில்களை நிர்மாணிக்க பல்வேறு காரண காரிய விதிமுறைகளை மனதில்கொண்டு செயல்பட்டதை இன்றைய காலகட்டத்தில் உணரும்விதமாக பல உதாரணங்கள் கூறலாம். குறிப்பாக கோவில்களை அமைக்க பூகோள முக்கியத்துவம் பெற்ற இடங்களையே தேர்வுசெய்தனர். அத்தகைய இடங்களின் முக்கியத்துவம் மற்றும் மறைபொருளாக உள்ள ஆன்மிக உள்ளர்த்தங்களை அறிந்துக்கொள்ளும் அனைவரும் வியப்படைவர். அந்தக் காலத்தில் ஜி.பி.எஸ். போன்ற புவியியல் சார்ந்த உணரும் கருவிகள் அல்லது இதரவகையான தொழில்நுட்பக் கருவிகள் இல்லாத நிலையில் பஞ்சபூத தலங்கள் எனப்படும் ஐந்து கோயில்களும் ஒரே தீர்க்கரேகையில் அமைக்கப்பட்டிருப்பது ஆச்சரியமான செய்திதானே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில்கள் ஒரே தீர்க்க ரேகையின் கீழ் கட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை எவராலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது இப்படி அமைந்த கோவில்கள் எட்டு. கேதார்நாத் கேதார்நாதர் கோவில் (79.06 டிகிரி), உஜ்ஜையினி (காலேஷ்வரம்) காலேஷ்வர முக்தீஸ்வர சுவாமிகோயில் (79.90 டிகிரி), காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில் (79.69 டிகிரி), திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் (78.60 டிகிரி), திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் (79.06 டிகிரி), சிதம்பரம் நடராசர்கோயில் (79.69 டிகிரி), காளகஸ்தி காளத்திநாதர் கோயில் (79.69 டிகிரி), இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவில் (79.31 டிகிரி) ஆகியவைகளாகும். இந்த எட்டு ஆலயங்களில் சிதம்பரம் இடம் பெற்றிருப்பது சிறப்புக்குரிய செய்தியாகும்.
மூன்றுவகை மண்டபங்கள் கொண்ட கோவில்
நடராஜர் கோயிலில் பல மண்டபங்கள் இருந்தபோதிலும் அனைவரும் பார்க்க விரும்புவது ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜசபையாகும். ஆயிரம் தூண்களைக் கொண்டிருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது. பலரும் இந்த செய்தியை அறிந்திருப்பர். ஆனால் அறியாத ஒரு செய்தி ஆயிரங்கால் மண்டபம்போல நூற்றுக்கால் மண்டபம் மற்றும் ஒற்றைக்கால் மண்டபம் இருப்பதுதான். ஆயிரங்கால் மண்டபத்திற்கு நேர் மேற்கில் சிவகங்கை தீர்த்த குளத்தின் மேற்கு கரையில் அம்பாள் கோயிலுக்கு செல்லும் வழியில் ஒற்றைக்கால் மற்றும் நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ளது.
அர்த்தசாம பூஜைக்கு பிரிசித்தி பெற்ற கோவில்
நடராஜர் கோயிலில் காலையில் மூன்று கால பூசைகளும் மாலையில் மூன்றுகால பூசைகளும் என தினசரி ஆறுகால பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காலை சாந்தி (மணி 8.30-9.00), இரண்டாம்காலம் (மணி 10.00 -11.00), உச்சிகாலம் (மணி 12.00 -12.30) சாயரட்சை (மணி 6.00-7.00) இரண்டாம் மறுகாலம் (8.00-8.30) அர்த்தசாமம் (10.00-10.30) என்பவைகளே அவைகள். இவைதவிர அதிகாலை நடராஜரின் பாதுகையை (குஞ்சிதபாதம்) பள்ளியறையிலிருந்து வெளியே எடுத்துவரும்போது திருவனந்தல் அல்லது பால்நைவேத்தியம் என்னும் பூஜையும் ஒவ்வொரு நாளும் நடத்தப்பெறுகின்றது. ஒவ்
இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன. அறிவியல் முதல் ஆன்மிகம் வரையிலுள்ள அவற்றைப்பற்றி அவ்வப்போது நாம் அறிகின்றபோது ஆச்சரியம் மேவும். அதுபோன்ற விஷயங்களில் முதன்மையாக இருப்பது கோயில்கள் மற்றும் அவை கட்டப்பட்ட விதமாகும். நமது முன்னோர்கள் கோயில்களை நிர்மாணிக்க பல்வேறு காரண காரிய விதிமுறைகளை மனதில்கொண்டு செயல்பட்டதை இன்றைய காலகட்டத்தில் உணரும்விதமாக பல உதாரணங்கள் கூறலாம். குறிப்பாக கோவில்களை அமைக்க பூகோள முக்கியத்துவம் பெற்ற இடங்களையே தேர்வுசெய்தனர். அத்தகைய இடங்களின் முக்கியத்துவம் மற்றும் மறைபொருளாக உள்ள ஆன்மிக உள்ளர்த்தங்களை அறிந்துக்கொள்ளும் அனைவரும் வியப்படைவர். அந்தக் காலத்தில் ஜி.பி.எஸ். போன்ற புவியியல் சார்ந்த உணரும் கருவிகள் அல்லது இதரவகையான தொழில்நுட்பக் கருவிகள் இல்லாத நிலையில் பஞ்சபூத தலங்கள் எனப்படும் ஐந்து கோயில்களும் ஒரே தீர்க்கரேகையில் அமைக்கப்பட்டிருப்பது ஆச்சரியமான செய்திதானே. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில்கள் ஒரே தீர்க்க ரேகையின் கீழ் கட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை எவராலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது இப்படி அமைந்த கோவில்கள் எட்டு. கேதார்நாத் கேதார்நாதர் கோவில் (79.06 டிகிரி), உஜ்ஜையினி (காலேஷ்வரம்) காலேஷ்வர முக்தீஸ்வர சுவாமிகோயில் (79.90 டிகிரி), காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோவில் (79.69 டிகிரி), திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில் (78.60 டிகிரி), திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் (79.06 டிகிரி), சிதம்பரம் நடராசர்கோயில் (79.69 டிகிரி), காளகஸ்தி காளத்திநாதர் கோயில் (79.69 டிகிரி), இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவில் (79.31 டிகிரி) ஆகியவைகளாகும். இந்த எட்டு ஆலயங்களில் சிதம்பரம் இடம் பெற்றிருப்பது சிறப்புக்குரிய செய்தியாகும்.
மூன்றுவகை மண்டபங்கள் கொண்ட கோவில்
நடராஜர் கோயிலில் பல மண்டபங்கள் இருந்தபோதிலும் அனைவரும் பார்க்க விரும்புவது ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் ராஜசபையாகும். ஆயிரம் தூண்களைக் கொண்டிருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டுள்ளது. பலரும் இந்த செய்தியை அறிந்திருப்பர். ஆனால் அறியாத ஒரு செய்தி ஆயிரங்கால் மண்டபம்போல நூற்றுக்கால் மண்டபம் மற்றும் ஒற்றைக்கால் மண்டபம் இருப்பதுதான். ஆயிரங்கால் மண்டபத்திற்கு நேர் மேற்கில் சிவகங்கை தீர்த்த குளத்தின் மேற்கு கரையில் அம்பாள் கோயிலுக்கு செல்லும் வழியில் ஒற்றைக்கால் மற்றும் நூற்றுக்கால் மண்டபம் அமைந்துள்ளது.
அர்த்தசாம பூஜைக்கு பிரிசித்தி பெற்ற கோவில்
நடராஜர் கோயிலில் காலையில் மூன்று கால பூசைகளும் மாலையில் மூன்றுகால பூசைகளும் என தினசரி ஆறுகால பூசைகள் நடத்தப்பெறுகின்றன. காலை சாந்தி (மணி 8.30-9.00), இரண்டாம்காலம் (மணி 10.00 -11.00), உச்சிகாலம் (மணி 12.00 -12.30) சாயரட்சை (மணி 6.00-7.00) இரண்டாம் மறுகாலம் (8.00-8.30) அர்த்தசாமம் (10.00-10.30) என்பவைகளே அவைகள். இவைதவிர அதிகாலை நடராஜரின் பாதுகையை (குஞ்சிதபாதம்) பள்ளியறையிலிருந்து வெளியே எடுத்துவரும்போது திருவனந்தல் அல்லது பால்நைவேத்தியம் என்னும் பூஜையும் ஒவ்வொரு நாளும் நடத்தப்பெறுகின்றது. ஒவ்வொரு பூஜையின்போதும் அவைகளுக்குரிய நடைமுறைகள் விடாமல் கடைபிடிக்கப்படுகின்றன. அனைத்து சிவாலயங்களிலுமுள்ள சிவமூர்த்தங்கள் அர்த்தசாம பூசைக்குப்பின் இக்கோவிலுக்கு வந்து உறைவதான புராண வரலாற்றின் அடிப்படையில் இவ்வாலய அர்த்தசாம பூசை இரவு பத்துமணிக்குத் தொடங்குகிறது. நடராஜரின் பாதுகையை வெள்ளிப்பல்லக்கில் ஏற்றி பள்ளியறையில் கொண்டுபோய் வைத்து அங்கும் நைவேத்தியம் வைத்து தூபதீபாரதனை காட்டி நடை சாத்தப்படுகிறது. அதன்பின்னர் சண்டேசுவரர், பைரவர், அர்த்தசாம அழகர் ஆகியோருக்கு நைவேத்தியம் செய்து தீபாரதனை காட்டப்படுகிறது. இதுவே அர்த்தசாம பூசையாகும். இது தொன்றுதொட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்தப்படுகின்றது. பாதுகை தினசரி பூசையில் கனகபையிலிருந்து எடுத்துச்சென்று கொடிமரம் பலிபீடத்தைச்சுற்றி பள்ளி யறைக்கு எடுத்துச் செல்லப்படும். வெள்ளிக்கிழமைதோறும் மங்கலவாத்தியங்கள் திருச்சின்னங்கள் முழங்க பிரகாரத்தில் வலமாக வந்து ஒவ்வொரு இடத்திலும் கட்டளைதாரர் மண்டகப்படி ஏற்கப் பட்டு பின்னர் பள்ளியறைக்குக் எடுத்துச் செல்லப்படும். ஆடி மற்றும் தை வெள்ளிக் கிழமைகளில் இது வழக்கத்தைவிட கூடுதல் விசேஷமாக நடத்தப்பெறுகின்றது. அர்த்தசாம பூஜையின்போது அனைத்து சிவகலைகளும் இவ்வாலயத்தில் ஒடுங்குவதான நம்பிக்கையில் அனைத்து சிவாலய இறைவனை தரிசித்த பேற்றினைப் பெறலாம் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து இப்பூஜையில் பங்கேற்கின்றனர்.
பொற்கூரை வேயப்பட்ட ஒரே கோவில்
நடராஜரின்மீது அதீத ஈடுபாடுகொண்ட சிங்கவர்மன் என்னும் இரண்யவர்மன் பெரும்பொருள் செலவிட்டு கி.பி. 648-ல் திருமூலநாதர் கோயிலைக்கட்டி பிற திருப்பணிகளையும் செய்தான். பொற்சபை எனப்படும் சிற்சபைக்கு முதலில் சிங்கவர்மனே பொற்கூரை வேய்ந்ததாக கோவில்புராணம் கூறுகின்றது. இவனுக்குப் பிறகு இரண்டாம் குலோத்துங்கன் எனப்படும் அநபாயச்சோழன் 21,600 பொன்னாலான ஓடுகளைக்கொண்டு கூரை வேய்ந்தான் என்ற மற்றொரு குறிப்பும் காணப்படுகின்றது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாள் விடும் மூச்சின் எண்ணிக்கையாகும். இந்த ஓடுகளைத் தாங்கி நிற்கும் 64 கைமரங்களும் 64 கலைகளை குறிப்பதாகும். இந்த ஓடுகளைப் பொருத்த பயன்படுத்தப்பட்டுள்ள 72,000 ஆணிகள் மனிதனுடைய சுவாச சஞ்சார ஆதாரமான நாடிகளின் எண்ணிக்கையை உணர்த்துகின்றன. இதன் கீழுள்ள ஐந்து தூண்களும் ஐம்பொறிகளையும், இரண்டு பிரம்ம பீடத்திலும் இடம்பெற்றுள்ள பத்து தூண்களில் கீழே உள்ள ஆறு தூண்கள் ஆறு சாத்திரங் களையும், மேலே உள்ள நான்கு தூண்கள் நான்கு வேதங்களையும் குறிக்கின்றன. இவ்வாறு தத்துவார்த்தத்தோடு அமைந்த பிரணவபீடங்களில் சதாசிவபீடத்தில் முறையே ரகசியமும், நடராஜப்பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் எழுந்தருளியுள்ளனர்.
இதன் மேலேயுள்ள ஒன்பது கலசங்களும் மனித உடலில் உள்ள ஒன்பது துவாரங்களாகும். காலக்கணக்கின்படி பஞ்சகோசங்களால் வகுக்கப்பட்ட ஐந்து பிரகாரங்களைக் கடந்து உடல் உயிர்கொண்ட ஸ்ரீநடராஜமூர்த்தியை தரிசிக்க மீண்டும் பிறப் பில்லாத நிலையை எய்தலாம் என்பதே இதன்பொருள். மனிதனது இதயத்தில் இருக்கின்ற இறைவனே இப்பொன்னம்பலத்திலும் இருக்கின்றான் என்பதை மனித உடல்போலவே அம்பலமும் அமைக்கப்பட்டுள்ளது. மனிதனுடைய இதயம் உடம்பின் நடுவே இல்லாமல் இடப்புறத்தே தள்ளியிருப்பதுபோல கர்ப்பகிருகம் திருக்கோயிலின் மத்தியில் இல்லாமல் சற்று தள்ளியே அமைந்திருக்கிறது. கனகசபையில் உள்ள பதினெட்டு தூண்கள் பதினெட்டு புராணங்களையும், தொன்னுற்றாறு பலகணிகள் தொண்ணுற்றாறு தத்துவங்களையும், ஐந்து வெள்ளிப்படிகள் சிவாயநம என்னும் ஐந்தெழுத்தையும் குறிக்கின்றன. மனித இதயத்திற்கு இரத்தம் நேரில் செல்லாமல் பக்கங்களிருந்து செல்வதுபோல இத்திருக்கோவின் உள்ளே செல்ல நேராக வழியில்லாமல் இருபக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்ச பிராகாரங்கள் மற்றும் பஞ்ச சபைகளைக் கொண்ட கோவில்
மனித உடற்கூறு உடல், மூச்சு, உணர்வு, புத்தி, இதயத்துடிப்பு ஆகிய ஐந்து கோசங்களாக பகுக்கப்பட்டிருப்பதுபோல நடராஜர் ஆலயமும் ஐந்து பிரகாரங்களைக் கொண்டுள்ளது. அவைகள் முறையே அன்னமயகோசம் (தேரோடும் நான்கு பெரும்வீதிகள்), பிராணமயசோசம் (மதிற்சுவரை ஒட்டியபிரகாரம்), மனோமயகோசம் (கோவிலின் வெளிப்பிரகாரம்), விஞ்ஞானமயகோசம் (உட்பிரகாரம்), அனந்தமயகோசம் (பொன்னம்பல பிரகாரம்) என்பவைகளாகும். உலகத்தின் இருதய ஸ்தானம் சிதம்பரம், அதற்கான துடிப்பே ஆனந்தநடனம். ஆனந்தமய கோசத்தில்தான் நடராஜர் நடனமாடும் சிற்சபை அமைந்துள்ளது.
ஐந்து பிரகாரங்களைக் கொண்டிருப்பதுபோல ஐந்து சபைகளையும் கொண்டுள்ளது. சிற்சபை, கனகசபை, தேவசபை, நிருத்தசபை, ராஜசபை என்பவைகளே அவைகள். நடராஜப் பெருமான் நடனம்புரியம் இடமே சிற்சபை வடமொழியில் இது தப்ரசபா என்றழைக்கப்படுகிறது. சிற்சபைக்கு முதலில் இரண்யவர்மனும் இவனுக்குப்பிறகு இரண்டாம் குலோத்துங்கன் எனப்படும் அநபாயசோழனும் பொற்கூரை வேய்ந்ததாக கோயில்புராணம் கூறுகின்றது. சிற்சபைக்குள் செல்ல ஐந்து படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் பஞ்சாக்ஷரபடிகள் எனப்படுகிறது. கனகசபை எனப்படும் பொன்னம்பலம் சிற்றம்பலத்துக்கு முன்புள்ளது. இங்குவைத்தே பெருமானுக்கு அவ்வப்போது அபிஷேகங்களும் நாள்தோறும் ரத்தினசபாபதி என்னும் ஸ்படிகலிங்கத்திற்கு ஆறுகால பூஜைகளும் இரண்டாங்காலத்தில் அபிஷேக வழிபாடுகளும் நடத்தப் பெறுகின்றன. இப்பொன்னம்பல முகட்டை ஆதித்தகரிகாலன் மாசற்ற பொன்னால் வேய்ந்தான் என சேக்கிழார் இடங்கழிநாயனார் புராணத்தில் குறிப்பிடுகின்றார். மற்றொரு தகவலாக மண-கூத்தனான காளிங்கராயன் என்பவன் பொன்னால் வேய்ந்ததாக கோயில் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றது. தேவசபை எனப்படும் பேரம்பலத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி யுள்ளனர். இப் பேரம் பலத்தை மண- கூத்தனான காளிங்கராயன் செம்பால் வேய்ந்ததாக கோவில் கல்வெட்டில் காணக் கிடைக்கின்றது. இதன்மீது பொன் வேய்ந்தவன் குலோத்துங்க சோழனாவான்.
நிருத்தசபை எனப்படுவது நடராஜப் பெருமானின் கொடிக்கம்பத்துக்கு தென்பால் உள்ளது. சிவன் நிருத்தத் தாண்டவம் ஆடிய இடம் ஊர்த்துவ தாண்டவராக காட்சியருளும் இந்தசபை ஆறடி உயரத்தில் அழகிய சிற்பவேலைப்பாடுகள் கொண்ட 56 தூண்களுடன் விளங்குகின்றது. இத்தூண் களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் கலைநயம் மிக்கவை. தேர்வடிவில் யானைகள் இழுத்துச் செல்வதைப் போல அமைக்கப்பட்டுள்ளது. ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபம் மூன்றாவது பிராகாரத்தில் சிவகங்கை குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் ரத உற்சவத்தை முடித்த பின்னர் நடராஜப் பெருமான் இரவில் இந்த மணிமண்டபத்தில் எழுந்தருளி பத்தாம்நாள் அதிகாலை அபிஷேகம் முடித்துக் கொண்டு பிற்பகலில் பல்லாயிர கணக்கான பக்தர்களுக்கு திருக்காட்சியளித்து பெருமான் முன்னாலும் பெருமாட்டி பின்னாலும் மாறிமாறி திருநடனம் புரிந்தவாறு சிற்றம் பலத்துக்கு எழுந்தருளும் திருக்காட்சியே அனுக்கிரக தரிசன விழாவின் முத்தாய்ப் பாகும். சேக்கிழார் தனது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணத்தை இங்கு வைத்தே அரங்கேற்றம் செய்தார். ராஜசபையான ஆயிரங்கால் மண்டபத்தில் மன்னர்களும் சிற்றரசர்கள் பலரும் முடிசூட்டிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தனர்.
அம்பலம் எனப்படும் கேரளக் கோவில்களின் முன்மாதிரிக் கோவில் கேரளாவிலுள்ள பெரும்பாலான கோயில்கள் மரத்தாலானவை. குறிப்பாக கோயில் விமானம் மரப்பலகை களால் வேயப் பட்டிருக்கும். அம்பலம் என அழைக்கப்படும் இவ்வாலயங்களுக்கு மூலாதாரமாக இருப்பது சிதம்பரத்தில் நடராஜர் அமர்ந்து அருள்பாலிக்கும் பொன்னம்பலமாகும். தமிழக சிவாலயங் களிலுள்ள நடராஜர் சன்னதிகளின் விமானம் சிற்சபை வடிவிலேயே கட்டப்பட்டிருப்பதுபோல கேரளாவிலுள்ள கோவில்களின் அனைத்து சன்னதிகளின் விமானமும் சிற்சபையை ஒத்தே இருக்கும். இதை வைத்துப் பார்க்கும்போது சிதம்பரம் நடராஜர் கோவிலே கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரி கோயில் என்று உறுதியாகக் கூறலாம்.
மும்மூர்த்திகளும் வீற்றிருந்து
அருள்பாலிக்கும் தலம்
ஒரே இடத்தில் நின்று சிவன்- விஷ்ணு இருவரையும் தரிசிக்கும் வகையில் இருவரின் திருச்சந்நதிகளும் அருகருகே அமையப்பெற்ற ஒரேத்தலம் சிதம்பரம் மட்டுமே. சைவத்தின் கடவுளான தில்லை நடராஜப் பெருமானும், வைணவத்தின் கடவுளான தில்லை கோவிந்தராஜப் பெருமாளும் அருகருகே உள்ளனர். நடராஜப் பெருமான் பொன்னம்பலத்திலிருந்து
அருள்பாலிப்பதுபோல கோவிந்தராஜப் பெருமாள் தெற்றியம்பலத்திலிருந்து அருள்பாலிக்கிறார். பெருமாள் அனந்தசயனம் கொண்டுள்ள இடம் நந்திவர்மபல்லவனால் கட்டப்பட்ட திருமாளிகையாகும். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இது தில்லை திருச்சித்திரகூடம் என்றழைக்கப்படுகிறது. நடராஜரின் பொன்னம்பல சுற்றில் கிழக்கில் சண்டேஸ்வர நாயனாருடன் சேர்ந்து பிரம்மா அருள்பாலிக்கின்றார்.
திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட கோவில்
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார் உட்பட இருபத்தேழு பேர் இறைவனை போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்பே திருமுறைகளாகும். இது பன்னிரண்டு தொகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு தலைமுறை தலைமுறையாக பாடப்பெற்றும், போற்றி பாதுகாக்கப்பட்டும் வருகிறது. இதில் மூவர் பாடிய தேவார ஓலைச்சுவடிகளை தில்லைவாழ் அந்தணர்களிடம் கொடுத்து தாங்கள் திரும்பவந்து கேட்கும்போது தரவேண்டும் என்றுகூறி மூவரும் தலயாத்திரை மேற்கொண்டனர். அளப்பரிய கருத்துக்களஞ்சியமான அந்த ஓலைச்சுவடிகள் கரையானுக்கு இரையாகிக் கொண்டிருப்பதை அறிந்த திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார்நம்பி என்னும் வினாயகபக்தர் மாமன்னன் ராஜராஜசோழனிடம் தெரிவிக்க மன்னன் தில்லைவாழ் அந்தணர்களைச் சந்தித்து அந்த ஓலைச்சுவடிகளை கேட்டான். ஓலைச்சுவடிகளை கொடுத்துச் சென்ற அடியவர்கள் வந்தாலொழிய தரஇயலாது என்று தெரிவிக்க, மூவரும் மீளமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டதால் சிலையுருவில் அவர்களது திருமேனியை எடுத்துச் சென்று ஓலைச்சுவடிகளைக் கேட்டான். தீக்ஷிதர்கள் இசைவு தெரிவித்தும் ஓலைச்சுவடுகள் இருக்குமிடத்தை எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இறுதியில் நம்பியாண்டார் நம்பிகள் தனக்குக் காட்சியளித்த பொல்லாப்பிள்ளையாரிடம் ஓலைச்சுவடிகள் இருக்குமிடத்தை காட்டுமாறு மானசீகமாக வேண்டினார். வினாயகர் திருக்கோயிலில் பிரசன்னமாகி திருமுறைகள் இருக்குமிடத்தைக் காட்டியருளினார். ஆலயத்தின் மேற்கு வாயில் வழியாக தரிசனத்துக்கு வருபவர்கள் திருமுறைகள் காட்டிய இந்த வினாயகப் பெருமானை தரிசிக்கலாம். செல்லரித்தது போக கைப்பெற்றப்பட்ட ஓலைச்சுவடிகளில் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்கள் 384., திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் 312, சுந்தரமூர்த்திசுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் 100 என மொத்தம் 716 திருப்பதிகங்களாகும்.
மோட்சதீபம் ஏற்றப்படும் கோவில்
இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய புண்ணிய நதிகளில் அஸ்தியை கரைப்பதும், ஒரு குறிப்பிட்டநாளில் அவர் நினைவாக காரியம் நடத்தி புரோகிதருக்கு தானம் வழங்குவதும், சிரராத்தம் செய்து ஏழை எளியோருக்கு உணவிடுவதும், ஆலயத்திற்குச் சென்று இறந்தவர் ஆன்மா சாந்தியடைய விளக்கேற்றி வழிபடுவதும் இந்துக்களின் வாழ்வியல் நடைமுறைகளாகும். பண்டைய மன்னர்கள் இறந்தவர்களின் நினைவாக நந்தா விளக்கேற்றுவதை கடைபிடித்ததை கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மோட்சதீபம் ஏற்ற பெரும்பாலானோர் உள்ளுர் கோயிலுக்குச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் மோட்சதீபம் ஏற்றுவதற்கான ஒரேகோயில் சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவிலாகும். ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஐந்து லிங்கங்களில் முக்தி லிங்கத்தை கேதார்நாத்திலும், வரமளிக்கும் லிங்கத்தை பசுபதிநாத்திலும், மோட்சலிங்கத்தை சிதம்பரத்திலும், போகலிங்கத்தை சிருங்கேரியிலும், யோக லிங்கத்தை காஞ்சியிலும் பிரதிஷ்டை செய்ததாக பிரம்மாண்ட புராணத்திலுள்ள மார்க்கண்டேய சம்ஹிதையில் ரகசியமாக கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சிதம்பரம் கோயிலே மோட்சதீபம் ஏற்றுவதற்குரிய கோயிலாகும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்களும் நான்கு பொழுதுகளைக் குறிப்பதாகும். நான்கு கோபுரங்களும் ஏழுநிலைகளைக் கொண்டவை. இந்த ஏழு நிலைகளும் ஏழுநாட்களை (ஒருவாரம்) குறிப்பதாகும். ஒவ்வொரு கோபுரத்திற்கும் 13 என்ற எண்ணிக்கை வீதம் நான்கு கோபுரங்களிலுள்ள 52 கலசங்களும் 52 வாரங்களை (ஒரு வருடம்) குறிப்பதாகும். இந்த நான்கு கோபுரங்களில் ஏற்றப்படும் 365 விளக்குகள் 365 நாட்களைக் குறிப்பதாகும். 52 கலசங்கள்கொண்ட இந்த கோபுரங்களில் 365 விளக்குகளையும் ஒருநாளில் ஏற்றும்போது இறந்தவரின் நினைவாக ஓராண்டு விளக்கேற்றிய பலனைப்பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாலயத்தில் மோட்சதீபம் ஏற்றுவது அனுதினமும் நடைபெறுகின்றது.
மன்னர்கள் தொடங்கிவைத்த இந்த நடைமுறை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.