புதைபடிவங்கள் பூமியின் கடந்த காலத்தைக் காண்பதற்கான சாளரங்கள். புவியின் மேற்பரப்பின் மீது கட்டுமானங்களை எழுப்பிய பிறகு புதைந்தவை மறைந்தவைகளாகி விடுகின்றன. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள கிராண்ட் கேன்யானின் பள்ளத்தாக்குகள் ஒன்றின்மீது ஒன்றாகப் படிந்த புவியின் அடுக்குகளை வெகு ஆழம் வரை வெளிப்படுத்துகின்றன. திறந்த புத்தகங்களாக இருக்கும் இப்புவியின் அடுக்கினை ஆராய்ந்து அவை உருவான காலங்களை யும் அக்காலங்களில் வாழ்ந்த உயிரினங் களையும் ஆய்வில் தெரிவிக்கிறார்கள்.
சுமார் 270 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான காலங்களில் அங்கு கடல் இருந்ததற்கு அடையாளங்களாக, தற்பொழுது புவியின் அடுக்கில் புதைபடிவங்களாக இருக்கின்ற உயிரிகளின் எச்சங்கள் சாட்சியாகின்றன. 285 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஃபெர்ன்கள், தாவரங்கள், பூச்சிகள் போன்றவற்றை அதற்கும் கீழான அடுக்குகள் வெளிப்படுத்துகின்றன. அதேபோல 340 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த பெருங்கடலில் ட்ரைலோபைட் எனப்படுகின்ற உயிர்களையும் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த கடலுக்கடியில் ஊர்ந்து செல்கின்ற உயிர்களையும் 1255 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உயிர்களை அதற்கும் கீழான அடுத் தடுத்த பாறை அடுக்குகள் வெளிப்படுத்துவதை ஆய்வுசெய்து பதிய வைத்திருக்கிறார்கள்.
ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த புதைபடிவங்களில் ஸ்ட்ரோமாட்டோலைட் எனப்படுகின்ற சூரிய ஒளியின் முன்னிலையில் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்ற உயிர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஆழமற்ற நீர் இருந்ததற்கான சாட்சிகளாக இவற்றைக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள ஷார்க் பே (நட்ஹழ்ந் க்ஷஹஹ்) மற்றும் ஒரு சில இடங்களில் சூரிய ஒளி ஊடுருவி ஒளிச்சேர்க்கை நடத்துகின்ற நிலையில், ஆழமற்ற நீரில் இவ்வுயிரிகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியானது கண்டங்களாகப் பிரிந்திருக்கிறது. வட அமெரிக்கக் கண்டத்தில் கடலின் எல்லையாக இருந்த கிராண்ட் கேன்யான், 1000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த கடல் நீரோட்டங்கள் மற்றும் அலைகளை வகைப்படுத்த உதவுகிறது. இன்றைய கிராண்ட் கேன்யான் உருவாகியிருப
புதைபடிவங்கள் பூமியின் கடந்த காலத்தைக் காண்பதற்கான சாளரங்கள். புவியின் மேற்பரப்பின் மீது கட்டுமானங்களை எழுப்பிய பிறகு புதைந்தவை மறைந்தவைகளாகி விடுகின்றன. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலுள்ள கிராண்ட் கேன்யானின் பள்ளத்தாக்குகள் ஒன்றின்மீது ஒன்றாகப் படிந்த புவியின் அடுக்குகளை வெகு ஆழம் வரை வெளிப்படுத்துகின்றன. திறந்த புத்தகங்களாக இருக்கும் இப்புவியின் அடுக்கினை ஆராய்ந்து அவை உருவான காலங்களை யும் அக்காலங்களில் வாழ்ந்த உயிரினங் களையும் ஆய்வில் தெரிவிக்கிறார்கள்.
சுமார் 270 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான காலங்களில் அங்கு கடல் இருந்ததற்கு அடையாளங்களாக, தற்பொழுது புவியின் அடுக்கில் புதைபடிவங்களாக இருக்கின்ற உயிரிகளின் எச்சங்கள் சாட்சியாகின்றன. 285 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஃபெர்ன்கள், தாவரங்கள், பூச்சிகள் போன்றவற்றை அதற்கும் கீழான அடுக்குகள் வெளிப்படுத்துகின்றன. அதேபோல 340 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த பெருங்கடலில் ட்ரைலோபைட் எனப்படுகின்ற உயிர்களையும் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த கடலுக்கடியில் ஊர்ந்து செல்கின்ற உயிர்களையும் 1255 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த உயிர்களை அதற்கும் கீழான அடுத் தடுத்த பாறை அடுக்குகள் வெளிப்படுத்துவதை ஆய்வுசெய்து பதிய வைத்திருக்கிறார்கள்.
ஆயிரம் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த புதைபடிவங்களில் ஸ்ட்ரோமாட்டோலைட் எனப்படுகின்ற சூரிய ஒளியின் முன்னிலையில் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்ற உயிர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஆழமற்ற நீர் இருந்ததற்கான சாட்சிகளாக இவற்றைக் கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் உள்ள ஷார்க் பே (நட்ஹழ்ந் க்ஷஹஹ்) மற்றும் ஒரு சில இடங்களில் சூரிய ஒளி ஊடுருவி ஒளிச்சேர்க்கை நடத்துகின்ற நிலையில், ஆழமற்ற நீரில் இவ்வுயிரிகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு புவியானது கண்டங்களாகப் பிரிந்திருக்கிறது. வட அமெரிக்கக் கண்டத்தில் கடலின் எல்லையாக இருந்த கிராண்ட் கேன்யான், 1000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்த கடல் நீரோட்டங்கள் மற்றும் அலைகளை வகைப்படுத்த உதவுகிறது. இன்றைய கிராண்ட் கேன்யான் உருவாகியிருப்பதன் முதல் புள்ளியாக 1840 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலைகள் வெடித்து, பூமியின் உள்ளிருந்த மேக்மா வெளிப்பட்டு, கனிமங்கள் சிதறி, பாறை அடுக்குகள் உருவாகியிருக்கின்றன. அவை மலையாக நின்று அழுத்தத்திற்கு உட்பட்டு, 1400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிராண்ட் கேன்யானின் அடித்தளப் பாறைகள் உருவாகியிருக்கின்றன. இப்பாறைகள் கண்டங்கள் உருவான செயல்முறைகளையும் விளக்குகின்றன.
1500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தனித்துவமான ட்ரைலோபைட் எனும் உயிரினங்கள் நீரிலிருந்து உணவுத் துகள்களை வடிகட்டி உண்பவை. அவை சுவாசிப்பதற்கு சல்லடை போன்ற உறுப்பு இருந்திருக்கிறது.
இவற்றோடு கடல் பாசிகள், ஃபெர்ன்கள் போன்றவையும் புதைபடிவங்களாகக் கிடைத்ததை ஆராய்ந்து அவ்விடத்தில் கடல் இருந்ததை உறுதிசெய்திருக்கிறார்கள். பிறகு உருவான காலநிலை மாற்றத்தால் கடல் நீர் உள்வாங்கி நிலப்பரப்பு வெளிப்பட்டு அங்கு பழமையான தாவரங்களும், பூச்சிகள், ஊர்வன போன்ற உயிரிகளும் செழித்து உருவாகி வளர்ந்திருக்கின்றன. இவை வளர்வதற்குத் தேவையான நீரை அங்கு உருவான ஆறுகளும் அருவிகளும் அளித்திருக்கின்றன. 340 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்கக் கண்டமானது, கண்டக் குவியிலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்ததாக ஆய்வில் தெரிவிக்கிறார்கள்.
பேலியோசோயிக் (ல்ஹப்ங்ர்ள்ர்ண்ஸ்ரீ) காலத்தின் முடிவில் 4000 அடி தடிமன் வரை வண்டல் படிந்து பாறைகளின் பரந்துபட்ட வெளியாக மாறியிருக்கிறது. கடல் பின்வாங்கிய பிறகு, காற்றாலும் பெய்யும் மழையாலும் அரிப்புக்குள்ளான கிராண்ட் கேன்யான், கடல் திரும்பியதும், சூடான வெப்ப மண்டல நீரானது இப்பகுதி முழுவதும் பரவியிருக் கிறது. காட்டிலாய்டுகள், பிராச்சியோபைட்டுகள், கிரினாய்டுகள், பவளப்பாறைகள், கவசமுள்ள மீன்கள் உள்ளிட்ட விலங்குகள் வெதுவெதுப்பான நீரில் வாழ்ந்து வந்திருக்கின்றன. ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் சூடான ஆழமற்ற நீரில் செழித்து வளர்ந்ததற்கான சாட்சிகளாக புதைபடிவங்களாக அங்கிருந்த எலும்புத் துண்டுகள் அறிவிக்கின்றன. சிவப்பு நிறத்திலான சேறும் மணலும் கடலோர சூழல்களில் இருந்திருக்கின்றன. கரியமலையில் பனி உருகுவதால் உருவான கொலராடோ நதி, இப்பகுதிக்கு நவீனப் போக்கை அளிக்கும்படியாக, ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தின் அரிப்பு பெரிய அளவில் தொடங்கியிருக்கிறது. கலிஃபோர்னியாவின் வளைகுடாப் பகுதியிலுள்ள ஆற்றின் டெல்டாவிற்குச் சென்றடைந்து கொலராடோ நதி நிறைவடைகிறது. அவை பாயும் வழியெங்குமுள்ள நிலத்திலும் இறுதியாகக் கலந்துவிடும் கடலிலும் சுற்றுச்சூழல் அமைப்பு களை வளர்த்தெடுக்கின்றன.
பனி உருகுவதால் ஓடும் ஆறுகளும் எரிமலை வெடிப்புகளும் பூகம்பங்களும் பள்ளத்தாக்கின் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. குளிர்காலத்தில் ஏற்படும் புயல்கள் பள்ளத்தாக்கை பனியால் மூடுகின்றன. குளிர்ந்த இரவுகளில் உறைபனி நீர் பாறைகளின் இடுக்குகளில் தங்கி விரிவடைந்து அழுத்தம் ஏற்பட்டு பாறைகள் துண்டிக்கப் படுகின்றன. இது மட்டுமல்லாமல் வட அமெரிக்கக் கண்டமானது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முதல் மூன்று அங்குலம் தொலைவு வரை மேற்கு நோக்கி நகருகிறது. கடந்த ஐந்து மில்லியன் ஆண்டுகளாக கொலராடோ நதியால் செதுக்கப்பட்டு இன்றைய தோற்றத்தைக் கொண்டிருக்கும் கிராண்ட் கேன்யான், இன்று இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இவ்விடம் பூமியின் 1840 மில்லியன் ஆண்டுகால வரலாற்றை அம்பலப் படுத்துகிறது. கி.பி. 1800-ஆம் ஆண்டுகளில் ஆராய்ந்த புவியியலாளர்கள் அறிந்ததைவிட இன்று உள்ளவர் கள் அதிகமாக அறிந்திருக்கிறார்கள்.
புவியின் சக்தி இன்றும் இந்த நிலப்பரப்பை தீவிரமாக செதுக்கி வருகிறது. கொலராடோ நதியின் ஓட்டத்தோடு வருகின்ற வண்டல்கள் ஆற்றின் டெல்டா பகுதியில் தொடர்ந்து படிந்து வருகின்றது. சேறும் சகதியுமாக மூடுகின்ற இப்பகுதி கடலிலுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஊட்டமளிக்கிறது. அதிக வெப்ப அழுத்தத்தின் காரணமாக படிந்த வண்டல்கள், பாறைப் படிவுகளின் அடுக்குகளாக இணைகின்றன. இவற்றின் மீதான அரிப்பும் அதனைத் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தச் சுழற்சி இவ்வாறாக இன்றும் நடைபெறுகிறது. இன்றும் செயலிலுள்ள எரிமலைக் களமாக கிராண்ட் கேன்யான் இருப்பதால், எப்பொழுது வேண்டுமானாலும் லாவா குழம்புகள் கிராண்ட் கேன்யான் மீது மீண்டும் பாயலாம். பல மில்லியன் ஆண்டுகளாக உருவாகிய இப்பகுதியில் மனிதர்கள் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் இங்கு தங்கியிருக்கி றார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் இப்பகுதியின் வெப்பநிலை அதிகரித்திருக்கிறது. இன்னும் எதிர்காலத்தில் எப்படியிருக்கப் போகிறதென்பது கேள்வியாக இருக்கிறது. பூமி பொதுவாக குளிராக இருக்கவேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
மென்மையான அடுக்குகள் விரைவில் அரிக்கப்படுகின்ற நிலையில் காலப்போக்கில் சுண்ணாம்புக் கற்களையும் இறந்த உயிர்களின் ஓடுகளையும் படிவுகளாகக் கொண்ட கடினமான பாறைகள் மட்டும் நிலையாக நிற்கின்றன. பாதுகாப்பற்ற மென்மையான பாறைகள் கடினப் பாறையின் கீழ் அடுக்குகளை வெளிப்படுத்தும் விதமாக விரைவில் அரிக்கப்பட்டு பள்ளத்தாக்கு மேலும் அகலமாக வளர்கிறது. இவ்வாறு அரிக்கப்பட்ட துகள்கள், வண்டல்கள், மணல்கள், கூழாங்கற்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று மோதி அரைக்கப்படுகின்றன. இவை நீரோட்டத்தோடு பயணம் செய்து இறுதியில் கலிபோர்னியாவின் வளைகுடாவிற்குச் சென்று சேர்கிறது.
ஸ்பானிய மிஷனரியைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ கார்செஸ் என்பவர் 1776-ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆய்வுசெய்து அதன் சிவப்பு நிறத்தால் ஈர்க்கப்பட்டு இந்த நதிக்கு ரியோ கொலோன்டோ என்று பெயரிட்டிருக்கிறார்.
அதுவே இப்பொழுது கொலராடோ நதி (ஈர்ப்ர்ழ்ஹக்ர் தண்ஸ்ங்ழ்) என்று அழைக்கப்படுகிறது. கிளென் கேன்யான் அணை (ஏப்ங்ய் ஸ்ரீஹய்ஹ்ர்ய் க்ஹம்) கட்டுவதற்கு முன்பு கொலராடோ நதி சுதந்திரமாக ஓடிக்கொண்டிருந்தது. பாவல் ஏரியின் (டர்ஜ்ங்ப்ப் ப்ஹந்ங்) அடிப்பகுதியில் வண்டல் படிவுகள் தொடர்ந்து ஏற்பட்டன. இப்பொழுது ஏரியின் நீர்மட்டமும் குறைந்துவிட்டது.
பிரைட் ஏஞ்சல் கேன்யானைப் ( இழ்ண்க்ங் ஆய்ஞ்ங்ப் ஈஹய்ஹ்ர்ய்) பார்க்கும்பொழுது, கொலராடோ நதியைப் போலவே துணை நதிகளும் பள்ளத்தாக்குகளை எளிதாகவும் ஆழமாகவும் செதுக்கியிருப்பதை அறியமுடிகிறது. பாலைவனத்தில் ஒரு நதி இல்லாமல் பெரிய பள்ளத்தாக்குகள் இல்லை. கிராண்ட் கேன்யானை செதுக்கிய கொலராடோ நதி அதன் உச்சியிலிருந்து சுமார் 5,000 அடி வரையுள்ள பாறைகளை ஏற்கனவே அரித்து, டைனோசர்கள் வாழ்ந்த காலம் உட்பட 270 மில்லியன் ஆண்டுகளுக்கு உட்பட்ட வரலாறுகளை அழித்துவிட்டன. பேலியோசோயிக் (ல்ஹப்ங்ர்ள்ர்ண்ஸ்ரீ) பாறைகள் நேரடியாக அடித்தளப் பாறைகளில் தங்கியிருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக இருக்கவேண்டிய 1150 மில்லியன் ஆண்டுகளின் அடையாளங்கள் காணாமல் போன இடைவெளியைக் குறிக்கிறது. புவியியலாளர்கள் இந்த இடைவெளியை மிகப்பெரிய இணக்கமின்மையாகக் கருதுகிறார்கள். அடையாளமற்ற இந்தக் காலம் ஐஸ் ஏஜ் (ஒஸ்ரீங் ஆஞ்ங்) என்று சொல்லப்படுகின்ற பனிக்காலமாக இருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது.
இந்த பேலியோசோயிக் பாறைகளும் புதைபடிவங்களும் அவை உருவான பழங்கால சூழல்களின் சாட்சியங்களைப் பாதுகாக்கின்றன.
சுறாக்கள் ஸ்க்விட் போன்ற நாட்டிலாய்டுகள் நீந்திய ஆழமற்ற வெப்பமண்டல கடலின் அடிப்பகுதியில் மென்மையான சேற்றிலிருந்து கைபாப் சுண்ணாம்புக் கற்கள் உருவாக்கியிருக்கின்றன. பழங்கால ஊர்வன, சிலந்திகள், தேள்கள், ஹெர்மிட் ஷெல்கள், ஃபெர்ன்கள் ஆகியவை வாழ்ந்த அடையாளங்களை பழமையான கூம்புகளின் புதைபடிவங்கள் காட்டுகின்றன. கடலோர ஈர நிலம், நதி முடிவடையும் டெல்டா சூழலின் மணல், வண்டல் மற்றும் மண் படிவுகளில் இவை வளர்ந்திருக்கின்றன. இப்படியாக இவற்றின் மீதான ஆய்வு இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
இப்பகுதி பாதுகாக்கப்படுவதற்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட சுரங்கங்களிலிருந்து பெறப்பட்ட தனிமங்களைக் கொண்டு செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட பாதைகள் இன்று சுற்றுலாவினருக்கான பாதைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. வடக்கு விளிம்பு குறிப்பிட்ட பருவ காலத்திற்கு மட்டுமே சுற்றுலாவினருக்காக திறந்துவிடப்படுகிறது. ஆனால் தெற்கு விளிம்பு ஆண்டு முழுவதும் அனுமதிக்கப்படுவதால் அப்பகுதியே சுற்றுலாவினரால் அதிகபட்சமாக கவரப்படுகிறது. அதன் மேற்கும் கிழக்குமாக அமைந்த பாதையில் மேற்கு எல்லையில் உள்ள பகுதியான ஹெர்மிட் ரெஸ்ட்டிலிருந்து கிழக்கு எல்லையில் அமைக்கப்பட்டுள்ள காவற்கோபுரம் வரை நாங்கள் பயணம் செய்தோம்.
ஹெர்மிட் ரெஸ்ட் பகுதியில் இரவு வானை ரசிப்பதற்காக அங்கு தங்கலாம். மேற்கு எல்லையில் உள்ள காவற்கோபுரத்தின் உட்புற படிக்கட்டுகளின் வழியாகச் சென்று உச்சியில் ஏறி நின்றால் கிராண்ட் கேன்யானின் முடிவுப் பகுதியான பாலைவனக் காட்சிகளை பகல் நேரத்தில் கண்டுகளிக்கலாம். ஒரு நாள் சுற்றுலாப் பயணமாக மேற்கொண்ட நாங்கள் அங்கிருந்த செய்திகளை சேகரித்துக் கொண்டு வந்தோம். விருப்பமும் வாய்ப்பும் இருப்பவர்கள் அதனை ஒரு வாரமாகவோ அல்லது ஒரு மாத காலமாகவோ நீடித்தவாறு இயற்கையோடு உரையாடிவிட்டு வருவதற்கேற்ற இடமாக இந்தப் பேரதிசயம் திகழ்கிறது.