காலங்களை கடந்து பயணம் செய்துகொண்டிருக்கும் மனித இனம் பல வல்லமைகளை தன்னிடத்தே பெற்றிருந்தாலும், சில வஸ்துக்களின்மூலம் அவற்றை அடையும் வழியும் இணைத்தே வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றது. 

Advertisment

அவற்றில் குலதெய்வ கயிறு கட்டிக்கொள்வது, சில ஆலய விபூதி குங்குமம், எலுமிச்சம் பழம், தாயத்து ஆகியவற்றை தற்காலிக சிறிய வெற்றிக்கு பயன்படுத்தி வருவது வழக்கம். அதிலும் ரசமணி, மை, போன்றவையும் கையாளப்படுகின்றது.

Advertisment

அதோடு மட்டும் அல்லாமல் அதிர்ஷ்ட கற்களும் இவற்றுக்கு துணை புரிகின்றது. 

அதிர்ஷ்ட கல் என்றதும் ஏதோ ஒரு ராசிக்கு அல்லது நட்சத்திரத்திற்கு ஒவ்வொன்று சொல்லுவார்கள் என்கின்ற எண்ணம் அரவே வரவேண்டாம். பொதுவாகவே பல நேரம் உழைப்பை மேற்கொண்டாலும் சிலரின் வாழ்க்கையில் வெற்றி அமைவது கிடையாது. நூற்றுக்கணக்கான கடைகள் வரிசையாக உள்ள இடத்தில் ஒருசில கடைகளில் மட்டும் நல்ல வியாபாரம் நடப்பது எதனால்? ஆயிரம் நடிகர்களும், பாடகர்களும், இருந்தாலும் சிலர் மட்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்கான காரணம் என்ன?

 பல பிராண்ட் துணிகளோ அல்லது பொருட்களோ இருந்தாலும், சில பெயர்கள் மட்டும் வெற்றி பெறுவதற்கான காரணம் என்ன? இவையனைத்துமே ஜனவசியம் என்கின்ற ஒரே சொல்லில் அடைத்து விட முடியும். 

Advertisment

ஏதோ ஒருவகையில் ஒருசிலருக்கு மட்டும் இந்த ஜனவசிய அமைப்பு இயல்பிலேயே பிறப்பு ஜாதகத்தில் அமைந்து விடுகின்றது.

 பல பேருக்கு அந்த சூழல் கை கொடுப்பதில்லை, ஜனவசியம் இருப்பவர் களுக்கு மட்டுமே பணமும், தொழிலும், வசியமாகும் என்பது உறுதி. 

ஒரு 40 வருடங்களுக்குமுன்பு அதிர்ஷ்ட கற்களின் ஆளுமை இல்லாத காலங்களில் ஒருசிலர் மட்டும் கைகளில் பவள மோதிரம் போட்டிருப்பதை நினைவுபடுத்தி பாருங்கள். அவர்களின் வாழ்க்கையும், வளமும், ஆளுமையும் எவ்வாறு இருந்தது என்பது நமக்கு நினைவுக்கு வரும். 

பெண்கள் தங்களின் மாங்கல்யத்தோடு 11 பவய மணிகளை இணைத்து கட்டும் வழக்கம் இருந்துவந்தது, அப்படி இந்த பவளங் களைத் தாலிக் கொடி யோடு இணைத்து போடும் பெண்களின் குடும்பத்தின் சூழல் மிகச் சிறப்பாக இருந்துவந்தது நம்மால் கண்டிருக்க முடியும்.

மேலும் கணவரின் வளர்ச்சியில் இந்த பவளம் ஒரு பெரும் பங்கை வசிக்கின்றது. 

விளையாட்டாக கேட்பதுபோல் வாழ்வில் இருக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரு மருந்து, ஒரே மருந்து என்பதைபோல் இந்தப் பவளம் பல பிரச்சினைகளைத் தீர்த்து வாழ்வில் வசந்தத்தை கொடுக்கின்றது. 

இன்றைய சூழலில் இந்த பவளத்தை எவ்வாறு மோதிரமாக பயன்படுத்த முடியும் என்பதை காணலாம். பாதிக்குப் பாதி என்கின்ற கணக்கில் உதாரணமாக நான்கு கிராம் மோதிரம் என்றால் 2 கிராம் வெள்ளியும் 2 கிராம் தங்கமும் சேர்த்து இந்த மோதிரத்தை செய்ய வேண்டும். இதில் பதிக்கப்படும் பவளம் உங்கள் மனம் தீர்மானிக்கும் எடையில் இருக்கலாம். இதை மோதிரமாக செய்து வலது கை ஆட்காட்டி விரலில் அணிந்துகொண்டால் ஜனவசியமாவது உறுதி. 

எந்தநாளில் இந்த மோதிரத்தை செய்யவேண்டும் என்றால் உங்களின் ஜாதகரீதியாக தாரா பலனுள்ள நாளில் செய்வது சிறப்பு. அமாவாசையோ அல்லது அஷ்டமி நவமியோ, கரிநாளோ, உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கும் நாட்களிலோ, நிச்சயமாக செய்யக்கூடாது. அப்படி செய்யப்பட்ட மோதிரத்தை உங்களின் பூஜையறையில் வைத்து 33 முறை கந்த குரு கவசம் ஒலிக்கவிட்டு பின்பு ஒரு நல்ல நாளில் உங்களின் விரல்களில் அணிந்துகொண்டால் உங்களின் வாழ்க்கையில் ஜனவசியம் உங்களை மிகப்பெரிய ஆசனத்தில் அமர வைத்து அழகு பார்க்கும் என்பது உறுதி.

இந்த மோதிரத்தை உங்களின் குருவாக நீங்கள் பூஜிக்கப்படும் ஒருவரோ அல்லது உங்கள் குடும்பத்தில் பெரியவர்களோ உங்களின் விரல்களில் அணிந்துவிடுவது சிறப்பிலும் சிறப்பை அளிக்கும். 

செல்: 80563 79988