சென்னை அலுவலகத்திற்கு இரண்டு தம்பதியினர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர்.
அவர்களை அமரவைத்து "என்ன காரியம் பற்றி பலனறிய வந்தீர்கள்'' என்றேன்.
அவர்களுள் ஒருவர், "என்னுடன் வந்துள்ள இவர்கள் எனது தங்கையும், அவர் கணவரும். உறவு விட்டு போகக் கூடாதென்றும், சொத்துகளும் எங்கள் குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டுமென்று நினைத்து, எனது தங்கை மகளை, எனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று இந்த குழந்தைகள் பிறந்தபோதே, பேசி வாக்கு நிச்சயித்துக் கொண்டோம்.
எனது தங்கை மகளும், என் மகனும் ஒருவரையொருவர் விரும்பிப் பாசமாகப் பழகி வருகின்றார்கள். இப்போது திருமணம் செய்து விடலாம் என்று செயல்படத் தொடங்கும்போது, புதுக்குழப்பம் ஒன்று உருவாகிவிட்டது. மிகப்பெரிய ஜோதிடர் ஒருவரிடம் சென்று, இருவரின் ஜாதகங்களைக் கொடுத்து, நல்ல முகூர்த்தநாள் குறித்துத் தருமாறு கேட்டோம்.
ஜோதிடரும் இருவரின் ஜாதகங்களைப் பார்த்துவிட்டு, பத்துப் பொருத்தங்களும், ஜாதகப் பொருத்தமு
சென்னை அலுவலகத்திற்கு இரண்டு தம்பதியினர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர்.
அவர்களை அமரவைத்து "என்ன காரியம் பற்றி பலனறிய வந்தீர்கள்'' என்றேன்.
அவர்களுள் ஒருவர், "என்னுடன் வந்துள்ள இவர்கள் எனது தங்கையும், அவர் கணவரும். உறவு விட்டு போகக் கூடாதென்றும், சொத்துகளும் எங்கள் குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டுமென்று நினைத்து, எனது தங்கை மகளை, எனது மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டுமென்று இந்த குழந்தைகள் பிறந்தபோதே, பேசி வாக்கு நிச்சயித்துக் கொண்டோம்.
எனது தங்கை மகளும், என் மகனும் ஒருவரையொருவர் விரும்பிப் பாசமாகப் பழகி வருகின்றார்கள். இப்போது திருமணம் செய்து விடலாம் என்று செயல்படத் தொடங்கும்போது, புதுக்குழப்பம் ஒன்று உருவாகிவிட்டது. மிகப்பெரிய ஜோதிடர் ஒருவரிடம் சென்று, இருவரின் ஜாதகங்களைக் கொடுத்து, நல்ல முகூர்த்தநாள் குறித்துத் தருமாறு கேட்டோம்.
ஜோதிடரும் இருவரின் ஜாதகங்களைப் பார்த்துவிட்டு, பத்துப் பொருத்தங்களும், ஜாதகப் பொருத்தமும் சரியில்லை, அத னால் திருமணம் செய்யக்கூடாது என்று கூறிவிட்டார். ஏதாவது பரிகாரங்கள் இருந்தால் கூறுங்கள் என்றோம். இந்த தோஷத்திற்கு பரிகாரம் ஏதுமில்லை என்று கூறிவிட்டார். அதைக்கேட்ட எங்களுக்கு மனமே சரியில்லாமல் போய்விட்டது.
இன்னும் சில ஜோதிடர்களிடம் சென்று பார்த்தோம், அவர்களில் ஒருவர் ஜாதகப் பொருத்தம் உள்ளது. ஆனால் பத்துப் பொருத்தம் இல்லை; நான்கு பொருத்தம்தான் உள்ளது என்றார். மற்றொருவர் திருமணம் செய்தால், புத்திர பாக்கியம் இராது என்றார். இன்னொரு ஜோதிடர் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும், பிரிவு உண்டாகும் என்று கூறிவிட்டார்.
திருமணம் செய்ய முடியாமல் காலம் கடந்துகொண்டே போகின்றது. எனது நண்பர் ஒருவர் உங்களைப் பற்றிக் கூறி, நாடியில் பார்த்தால் இதற்கு சரியான பலன் தெரியும் என்று கூறினார்.
அதனால்தான் உங்களை தேடிவந்தோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இந்த இருவருக்கும் திருமணம் செய்யலாம். இப்போது நான் கூறப்போவது எல்லாம், உங்கள் இரண்டு குடும்பங்களின் வம்ச முன்னோர்கள் கால வாழ்வில் நடந்துள்ளதா? கேள் என்று கூறிவிட்டு, அகத்தியன் யான் கூறுவதுபோல் நடந்திருந்தால், இவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் செய்யலாம். நடக்கவில்லையென்றால் திருமணம் செய்யவேண்டாம் என்றவர், இரண்டு குடும்பங்களின் பாட்டனார், முப்பாட்டனார் என வம்ச முன்னோர்கள் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கூறினார்.
அகத்தியர் கூறியதைக்கேட்ட அவர்கள் ஐயா, "நீங்கள் கூறியதில் ஒருசில நிகழ்வுகள் பற்றி விவரம் தெரியவில்லை. ஆனால் 75 சதவிகிதம் ஜீவநாடியில் அகத்தியர் கூறியபடியே நடந்துள்ளது என கூறினார். அந்த மகனைப் பெற்ற தாய், இருவருக்கும் திருமணம் செய்துவைத்தால், புத்திர தோஷம் ஏற்பட்டு, குழந்தை பிறக்காது என்றும், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் கூறினார்கள். அந்தமாதிரி எதுவும் நடந்து விடுமா'' என்றார்.
மகளே, இந்த பூமியில் ஒரு குழந்தையோ அல்லது விலங்குகள், பறவைகள், ஈ, எறும்பு, புழு, பூச்சி என அனைத்து உயிரினங்களும், பிறப்பதற்கும், பிறக்காமல் போவதற்கும், கடவுளோ, கிரகங்களோ வேறு சக்திகளோ காரணமில்லை. ஆணும், பெண்ணும் உறவு கொண்டு இணைந்தால்தான் குழந்தை பிறக்கும்.
அதேபோன்று ஒவ்வொரு உயிரினத்திலும், ஆண் இனம், பெண் இனம் இணைந்தால்தான் அந்த உயிரினம் பிறந்து தழைக்கும். ஆண் இனம், பெண் இனம் இணையாமல் இந்த பூமியில் எந்த உயிரும் தோன்றாது. ஒரு தாவர செடிகூட அந்தச் செடியின் விதை பூமியில் விழுந்தால் முளைக்கும், மற்றொரு செடி வளரும்.
எந்த மண்ணிலும், நல்ல விதையை விதைத் தால், அந்த மண் அந்த விதையை வளரச் செய்துவிடும். அதேபோன்றுதான் பூமியில் பிறந்து, பூப்பெய்திய எந்தப் பெண்ணும் மலடியில்லை. ஆணின் விந்தனுவில் குறைபாடு இருந்தால்தான் குழந்தை பிறக்காது. குழந்தை பிறக்காததற்கு பெண் காரணமில்லை; ஆண்தான் காரணம்.
இந்த பூமியில் குழந்தை பிறப்பிற்கும், ஒரு உயிரினம் பிறப்பதற்கும் கடவுளோ, கிரகமோ, மற்ற சக்திகளோ காரணம் இல்லை. இது போன்று ஏராளமான, பொய்யான பலன்கள் கூறப்பட்டு வருகின்றது.
உங்கள் குழந்தைகள் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறப்பார்கள். முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறக்கும். இவர்களுக்கு முகூர்த்தநாள், நேரம், பிரம்ம முகூர்த்தம், வளர்பிறை, தேய்பிறை, நட்சத்திரம் என எதுவும் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டாம். நான் கூறும்நாளில் திருமணம் செய்துவைத்து, தம்பதியரை உறவு கொள்ளச்சொல். அடுத்த பத்தாவது மாதம், பேத்தி பிறந்து உங்கள் கைகளில் தவழும் என கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் வாக்கினால், எங்கள் மனக் கவலையும், குழப்பமும் தீர்ந்தது.
இன்றைய நாளில் ஜோதிடர்கள் அவரவர் படித்து தெரிந்துகொண்டபடி பலன் கூறுகின்றார்கள். பலனும் பலவிதமாக உள்ளது. அவரவர்க்கு தெரிந்த பலனைக் கூறி, அவரவர் மனதில் தோன்றியதை பரிகாரமாகக் கூறுகின்றார்கள்.
மனக் குழப்பத்துடன் வந்தவர்கள், மனநிறைவுடன் என்னிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.
செல்: 99441 13267