யுக யோகம்
இரண்டு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இந்த யோகத்தில் பிறந்தவர்கள் எப்போதும் ஆழ்ந்த சிந்தனையிலேயே இருப்பார்கள். நல்லது- கெட்டது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்வார்கள். சில நேரங்களில் தாங்கள் நினைத்தது எதையாவது செய்து மாட்டிக் கொள்வார்கள்.
சூல யோகம்
மூன்று பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் கலகக்காரர்களாக இருப்பார்கள். அனைவரையும் மனம் நோகும்படி கூர்மையான வார்த்தைகளால் பேசுவார்கள். அதனால் எல்லோரும் அவர்களை முள் மனம் கொண்டவர்கள் என்று நினைப்பார்கள்.
கேதார யோகம்
ஒரு ஜாதகத்தில் நான்கு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் நன்கு பழகுவார்கள். மிகவும் கவனமானவர்களாக இருப்பார்கள். பலருக்கும் நன்மைகள் செய்வார்கள். தனக்கு யாராவது நல்லது செய்தால், செய்தவர்களைப் பாராட்டுவார்கள்.
பாச யோகம்
ஒரு ஜாதகத்தில் ஐந்து பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆணவ குணம் இருக்கும். வீண் பேச்சு இருக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பார்கள்.
தாமினி யோகம்
ஒரு ஜாதகத்தில் ஆறு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இதில் பிறப்பவர்கள் படித்தவர்களாக இருப்பார்கள். நல்ல மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். கோப குணம் இருக்கும்.
வீணை யோகம்
ஒரு ஜாதகத்தில் ஏழு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில் பிறப்பவர்கள் சந்தோஷமாக வாழ்வார்கள். விருப்பப்படும் பொருட்களை வாங்கி அனுபவிப்பார்கள்.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/yogam-2025-12-12-18-33-15.jpg)