மேஷம்
விரய சனி பலன்கள்

மேஷ ராசியின் 12-ஆமிடமான மீன ராசியில் சனி, வந்து அமர்ந்துள்ளார். இவர் அங்கு பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்கள் வழியே பலன் தருவார்.சனி மீன ராசியிலிருந்து, மேஷ ராசியின் 2-ஆமிடம், 6-ஆமிடம், 9-ஆமிடம் என இந்த ஸ்தானங்களைப் பார்வையிடுவார்.மேஷ ராசியின் செலவு, அலைச்சல் ஸ்தானத்தில் சனி அமர்வு. ஆனால் சனிபகவானின் குணமோ சிக்கனம் மற்றும் மந்தம். மேலும் மேஷ ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பம் ஆகும். சனிப்பெயர்ச்சி ஆனவுடன், சவாடால் பேச்சு குறையும். எவருக்குப் பேச்சு குறையும்?  மணிபர்ஸ் கனம் குறைபவர்களுக்கு பேச்சுக் குறையும். ஆம், சனி உங்களின் 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், பண சுருக்கத்தைத் தருவார். சில கூட்டு குடும்பங்களில் தனிக்குடித்தனம் செய்து, குடும்பத்தைக் குறுக்குவார். அடிக்கடி ஹோட்டல் செல்வது, பியூட்டி பார்லர் செல்வது, சினிமாவுக்குச் செலவழிப்பது, ஆடம்பர... தண்டச் செலவு, விதவிதமான ஆடைகள் வாங்குவது, அடிக்கடி மது குடிப்பது என இவைபோன்ற தண்டச் செலவுகளுக்கு சனி பகவான் வழிவகுத்து விடுவார். சரி, இதற்கு என்ன காரணமெனில், ஒன்று உங்களுக்கு வேலை பிழிந்து எடுத்துவிடும். அதனால் வெட்டியாக சுற்ற நேரமிருக்காது. இன்னொன்று அதிகப்படியான கடனை அடைக்க வேண்டிய நிர்ப்பந்தம். எனவே வந்த காசை கடனுக்கு அடைத்து விடுவீர்கள். உங்களில் பலர், பணியாட்களை நீக்கிவிட்டு அல்லது குறைத்துவிட்டு நீங்களே மாங்கு மாங்கென்று வேலை செய்ய வேண்டியிருக்கும். எனவே இந்த சனிப்பெயர்ச்சி காசு அருமையை சொல்லிக் கொடுக்கும். காசை கரியாக்காமல், பத்திரமாக சேர்க்கும்போது, தர்மம் என்ற ஒன்று செய்யணுமா எனும் பெரிய தத்துவத்தை சனி கிள்ளிவிட்டுச் சொல்-த் கொடுப்பார். தனக்கு போகத்தான் தான தர்மம். நமக்கே குறைவாகத்தான் இருக்கிறது, எங்கே இருந்து தர்மம் எனும் கஞ்ச சிந்தனையை சனி கொடுத்துவிடுவார்.இதனால் மேஷ ராசியார் தர்மம் செய்வது, கோவில் பயணம் என இவற்றை குறைத்துக்கொள்வர். அட, உங்கள் தந்தையை நைஸாக சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவீர்கள். உயர் கல்வி எல்லாம் உள்ளூரில்தான் என கண்டிப்பு காட்டுவீர்கள். யாராவது ஓசியில் வெளியூர் கோவில் கூட்டிக்கொண்டு போய் காட்டுகிறேன் என்றால் நோ சொல்லி விடுவீர்கள். அவ்வளவு சுதாரிப்பாக இருப்பீர்கள்.இந்த சனிப்பெயர்ச்சி, மேஷ ராசியாருக்கு, வேலை அதிகம் கொடுக்குமேயொழிய வேலையைவிட்டு நீக்காது. சிலருக்கு சம்பளத்தை குறைத்துவிடும். சொந்தத் தொழில் செய்வோர் சற்று அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும். அரசியல்வாதிகள் சேவை செய்ய முடியுமேதவிர, பெரிய பதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். கலைஞர்கள் வருமானக் குறைவைக் காண்பர்.யதார்த்த வாழ்வு வாழ்வது எப்படி என சனி சொல்-க் கொடுப்பார். சனீஸ்வர பகவானுக்கு, அபிஷேகப் பொருட்களை வழங்கவும். சிக்கனமாக இருக்கவும். விரயச்சனிக்கு குச்சனூர் சென்று வணங்கவேண்டும்.

Advertisment

ரிஷபம்
லாப சனி பலன்கள்

ரிஷப ராசியினருக்கு, சனி, 11-ஆமிடம் எனும் லாப ஸ்தானத்தில் வந்து அமர்ந்துயுள்ளார். சனி, ரிஷபத்தாருக்கு 9, 10 எனும் அதிர்ஷ்ட தொழில் ஸ்தானாதிபதி. அவர் லாபத்தில் வந்து அமர்வது விசேஷம்தான். அவர் அங்கிருந்து உங்கள் ராசி, 5-ஆமிடம், 8-ஆமிடம் இவற்றை பார்க்கிறார். நீங்கள் சொந்தத் தொழில் செய்தாலும், அரசியல்வாதியாக இருந்தாலும், வணிகராக இருந்தாலும், வியாபாரியாக இருந்தாலும், அதில் நல்ல லாபம் எடுப்பது எப்படி, தொழிலை முன்னேற்றுவது எப்படி, தொழிலை மேல் படிக்கு நகர்த்துவது எப்படி எனும் யோசனை மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். அதனால் உங்களை அழகுபடுத்திக் கொள்ள நேரமே இருக்காது. தோற்றத்தை சீராக வைத்துக்கொள்ளும் சிந்தனையே இராது. மொத்தத்தில் கொஞ்சம் பக்தி, அழுக்கு மூட்டை மாதிரி இருப்பீர்கள். இதற்கு காரணம் சனி உங்கள் ராசியைப் பார்ப்பதுதான். மேலும் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவனம் இருக்காது. உங்கள் வாரிசுகள் படிப்பு, அவர்களின் பழக்க- வழக்கம் இவை பற்றியும் தெரிந்து கொள்ள இயலாமல் போய்விடும்.காதல் விஷயங்கள் முற்றுப்பெறும். பங்குவர்த்தகம் பக்கம் போக இயலாது. இதுவரையில் மந்திரி பதவியில் இருந்தவர்கள், அதை இழக்க நேரிடும். சினிமா கலைஞர்கள் சரிவை சந்திப்பார்கள். இதற்கு உங்கள் புறத்தோற்ற அக்கறையின்மை ஒரு காரணமாகிவிடும். வைதிகர்கள், மாணவர்கள் சற்று மறதிக்கு ஆளாவார்கள்.இந்த சனிப்பெயர்ச்சி, ரிஷபத்தாருக்கு ஆயுள் விருத்தி தரும். இதுவரையில் நோய் வந்து, கவலைப்பட்டவர்கள் இப்போது தேறிவிடலாம். மேலும் உங்களைப் பற்றிய வதந்திகள் மறையும். வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்பாராமல் பூர்வீக நிலத்தின்மூலம் அல்லது வாழ்க்கைத்துணை வழியாகவோ சொத்து கிடைக்கும்.ரிஷப ராசியில் சிலருக்குப் புதிதாக அரசிய-ல் சேரும் ஆசை வரும். அரசிய-ல் சேர்ந்து, நன்றாக உழைக்கவும். அதற்காகப் பதவி கிடைக்கும் என கனவுக்கூட காண வேண்டாம்.செஸ், கேரம் போர்டு போன்ற அறிவு சார்ந்த விளையாட்டு வீரர்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.புதிதாக ஏற்றுமதி- இறக்குமதி வணிகம் தொடங்குபவர்கள், இந்தச் சனிப்பெயர்ச்சி காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சமையல் கலைஞர்கள் பழமையான சமையல் முறைகளின்போது கவனமாக இருக்கவும்.வாழ்வின், தொழி-ன் முன்னேற்றத்தை மட்டுமே சிந்திப்பது எப்படி என இந்த சனி கற்றுக் கொடுப்பார். சனீஸ்வரர் சன்னதிக்கு பிரசாதம் தயாரிக்க உதவியானவற்றைச் செய்து கொடுக்கவும். திருக்கொள்ளிக்காடு சனியை வணங்கவும்.

Advertisment

மிதுனம்
தொழில் சனி பலன்கள்

மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசிக்கு 10-ஆம் இடத்தில், தொழில் ஸ்தானத்தில் வந்து அமர்ந்துள்ளார். மிதுன ராசிக்கு சனி 8, 9-ஆம் அதிபதி. பாதி சுபர் என்று கொள்ளலாம்.இவர் மிதுன ராசியின் 10-ஆமிடத்தில் அமரும்போது, பழைய வணிகப் பங்கு தாரர்களின் திருட்டுத்தனம் புரிந்து வேறு பங்குதாரரை நியமிக்க நேரிடும். வாழ்க்கைத் துணையின் தொழில் நிலை பற்றியும், அவரைப் பற்றியும் தெரிந்துகொள்ள நேரிடும்.வீடு விஷயம் பற்றிய யோசனைகள் நிறைய வரும். இது ஏதெனில், சனி உங்களின் 4-ஆமிடம், 12-ஆமிடத்தையும் பார்ப்பதால் உருவாகும். வீட்டை விற்கலாமா? வீட்டை விற்றுவிட்டு வேறு வீடு வாங்கலாமா? வீட்டில் முதலீடுசெய்வது நல்ல பலன் தருமா? என இவ்வாறாகப் பலவிதமாகப் பலமாக யோசித்துவிட்டு கடைசியில் பழைய வீட்டைவிட்டு நகராமல், ஆணியடித்த மாதிரி உட்கார்ந்து விடுவீர்கள். இது சனி 4-ஆமிடத்தைப் பார்க்கும் பலனாகும். இதுபோல் பள்ளி, வயல், தோட்டம், வாகனம் விஷயத்திலும் நடக்கும். உங்கள் தாயாரை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சி நடக்காது. உங்கள் வாழ்க்கைத் துணையின் தொழில் சற்று டல்லடித்தாலும், ஒண்ணும் பண்ண முடியாது.சரி, நாலு இடம் அலைந்து திரிந்து மேற்கண்ட பிரச்சினைகளைச் சரி பண்ணிவிடலாம் என்றால், அதுவும் நடக்காது. சனி, உங்களின் 12-ஆமிடத்தைப் பார்ப்பதால், அலைச்சவுடன் எல்லாம் சரியாகப் போய்விடுமா, சும்மா இரு என அதட்டிவிடுவார்."சனி பார்த்த இடம் பாழ்' என்பர். எனவே உங்களைப் பயணம் மேற்கொள்ளத் தடை விதித்துவிடுவார். அதேபோல் கொஞ்சம் முதலீடு செய்து ஒருபடி முன்னேறலாம் என்றாலும் இருக்கிறதை வச்சு நல்லதா பண்ணுப்பா என்று இறுக்கிப் பிடித்து விடுவார்.சனி, இருக்குமிடத்தைச் செழிக்கச் செய்வார் என்பர். எனவே, 10-ஆமிடத்தில் அமர்ந்த சனி, தொழில் சிக்கல்களை, சிக்கெடுத்து, அதனை நேர் சீராக்குவார். தொழி-ல், வாழ்க்கைத்துணை, பங்குதாரர், மாமியார் இவர்களின் குறுக்கீடு இல்லாமல் பார்த்துக்கொள்வார்.சனிக்குக் கௌரவம், சுத்தம், அழகு என இதெல்லாம் தெரியாது. எனவே தொழி-ல் நீங்களே ஒற்றையாளாக உழைத்து முன்னேறுவீர்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்கள், "பாரு தொழில் எவ்வளவு நல்லா நடக்குது, இவன் இருக்குற லட்சணத்தைப் பார்'' என ஏகடியம் பேசுவர். மிதுனத்தார் எதற்கும் டோண்ட் கேர்தான்.செலவையெல்லாம் குறைத்து, ஒற்றை ஆளாக உழைத்து, தொழிலை எப்படி மேம்படுத்துவது என இந்தச் சனி உங்களுக்குச் சொல்-த்தரப் போகிறார். சனீஸ்வரர் சன்னதிக்கு, நீர் ஆதாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும். வழுவூர் சனியை வணங்கவும்.

கடகம்
அதிர்ஷ்ட ஸ்தான சனி பலன்கள்

கடக ராசியின் அதிபதி சந்திரன். கடக ராசியின் 9-ஆமிடமான தர்ம, அதிர்ஷ்ட ஸ்தானத்தில் சனி அமர்வு. சனி கடக ராசிக்கு 7, 8-ன் அதிபதி. சனி கடகத்தின் 11, 3, 6-ஆமிடத்தைப் பார்க்கிறார். 11-ஆமிடம் மூத்த சகோதரத் தையும், 3-ஆமிடம் இளைய சகோதரத்தையும் குறிக்கும். எனவே இந்தச் சனிப்பெயர்ச்சி ஆனவுடன், உங்கள் உடன் பிறந்தோரிடம் மனஸ்தாபம் கொள்வதைத் தடுக்க இயலாது. கடக ராசியார், அரசியலில் முதல் பதவி பிடித்துவிட வேண்டும் என பேரவா கொள்வார். பதவி கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பு அருகே வந்து தட்டிப் போய்விடும். சில கடக ராசியார் தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவார்களா எனில், அதுவும் சந்தேகம்தான். காரணம், அவர்களின் தொண்டர்களின் லூசுத்தனமான அழும்பும், மற்றும் இந்த கடக ராசியாரின் சேவைகள் பற்றிய குறைபாடும் ஆகும்.சனி கடக ராசியின் 11, 3-ஆமிடங்களைப் பார்ப்பதால், உங்கள் சிந்தனைகள், யோசனைகள், முயற்சிகள் இவை தவறாக எடுக்கப்படும். எனவே நீங்கள் வாழ்வின் எந்தச் செயலை ஆரம்பித்தாலும் ரொம்ப யோசிக்க வேண்டும்.வீடு விற்க வேண்டும். ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும். புதுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும், ரியல் எஸ்டேட் தரகு வேலை, சமையல் காண்ட்ராக்ட், அப்பார்ட்மெண்ட் தலைவர் பதவி, டிவியில் பங்கேற்பது, கைபேசியில் சமையல் சொல்லித் தருவது என இந்த மாதிரி விஷயங்களில் ரொம்ப யோசித்து முடிவெடுங்கள். கூடியமட்டில் உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது வாழ்க்கைத் துணை பெயரில் ஆரம்பிக்கவும்.இந்த சனிப்பெயர்ச்சியில் வேலை அதிகமாகிவிடும். சனி உங்களின் 6-ஆமிடத்தைப் பார்ப்பதால், உழைப்பு அதிகமாகும். உழைப்பின் அதிரடிப்பு நோய், நொடி இன்றிப் பார்த்துக்கொள்ளும். கடன்கள் அடையும். உங்களின் கடுமையான உழைப்பைக் கண்டு, எதிரிகளும் அஞ்சி ஓடிவிடுவர்.சனி, கடக ராசியின் 9-ஆமிடம் எனும் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இருக்கிறார். இருக்குமிடத்தை வளமாக்குவார். முதலில் நல்ல வேலை கிடைக்கும். திருமணம் நடக்கும். வரும் வரன் நல்ல செல்வாக்காக இருப்பார். புதையல் கிடைக்கும் வாய்ப்புண்டு. உங்கள் இளைய சகோதரர் வெளிநாடு சென்று, அங்கிருந்து உங்களுக்குப் பணம் அனுப்புவார். அல்லது உங்கள் மாமனார்மூலம் ஒரு அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல முதலாளி ஆகிவிடும் வாய்ப்பு தெரிகிறது. மாணவர்களின் உயர் கல்வி பளிச்சிடும். கடக ராசி மாணவர்கள், நல்லதிர்ஷ்டம் பெறுவர்.கடுமையாக உழைத்தால், வாழ்வில் எவ்வளவு அதிர்ஷ்டம் பெறலாம் என சனி சொல்லிக்கொடுக்கப் போகிறார். பழைமையான ஆலயங்களில் உழவாரப்பணி செய்யவும். திருக்கொள்ளிக்காடு சனியை வணங்கவும்.

Advertisment

சிம்மம்
அஷ்டம சனி பலன்கள்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன். சிம்ம ராசியின் 8-ஆமிடத்தில், அதாவது- அஷ்டம ஸ்தானத்தில் வந்து அமர்கிறார். சனி, சிம்ம ராசிக்கு 6, 7-ன் அதிபதி.சனி, 8-ஆமிடத்தில் அமர்ந்து, 10-ஆமிடம், 2-ஆமிடம், 5-ஆமிடம் இவற்றை பார்க்கிறார். சனி உழைப்புக்காரர். எனவே எப்போதும் சனி 6, 10-ஆமிடத்தைப் பார்த்தால் அதைக் கெடுக்க மாட்டார். எனவே தற்போது சிம்ம ராசியின் 10-ஆமிடத்தைப் பார்ப்பதால், உங்களின் தொழில் கெடாது; ஆனால் குறுகும். நீங்கள் ஒப்பந்த தொழில் செய்தால், அதை இன்னொருவருக்கும் பிரித்துக் கொடுத்துவிடுவர்.  அதனால் நீங்கள் பாதி ஒப்பந்தப் பணிதான் செய்வது மாதிரி இருக்கும். இந்த மாதிரி தொழில் நிலையில் நிறுத்தம் வராது. ஆனால் குறுக்க நிலை ஏற்படும். இதனை மனதில் வைத்துக்கொண்டு, அதற்கேற்ற மாதிரி செயல் படுங்கள்.சனி, 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், காசு பணம் குறையும். இது தொழில்நிலை குறைவதால் தன்னிச்சையாக உண்டாவதுதான். வாக்கும் தடுமாறும். சனி பார்வையால், ஒன்று பல்வலி அல்லது நரம்புப் பிரச்சினை, காதுவலி என ஏதோ ஒன்றின் காரணமாகத் தொடர்ந்து பேச இயலாது. எனவே பேச்சினால் சம்பாதிக்கும் சிம்ம ராசியார் வெகு கவனமாக இருக்கவேண்டும்.சனி தொழிலிலும் சுருங்கியாச்சு, காசு பணமும் தட்டுப்பாடு. அப்புறம் குடும்பம் எப்படி உறுதியாக இருக்கும். குடும்பத்தில் சண்டை வருவது தவிர்க்க முடியாதது.சனி 5-ஆமிடத்தைப் பார்ப்பதால் வாரிசு விஷயங்கள் தடுமாறும். கர்ப்பஸ்திரிகள் கவனமாக இருக்கவேண்டும். பிரசவ நேரத்தில், நல்ல மருத்துவரின் கண்காணிப்பு தேவை. காதல் தெரித்து ஓடும். பங்கு வர்த்தகம் பக்கம் வராது. உங்கள் வாரிசுகள் உங்களை எதற்கும் லாயக்கற்றவர் எனத் திட்டுவர். உங்களுக்கும் மூளை சற்று மக்கர் பண்ணும். மந்திரி பதவி ஒரு காலத்தில் இருந்தது என ல்ஹள்ற் ற்ங்ய்ள்ங்-ல் போய்விடும்.சில சிம்ம ராசி சினிமாக் கலைஞர்கள் பேச்சு குறைபாடு ஏற்படுவதால், அவர்களால் நடிக்க இயலாமல் முடங்க நேரிடும். பொது வாகவே சிம்ம ராசியாரின் ஆரோக்கியம் கெடும்; கவனம் தேவை.சனி இருக்குமிடத்தை வளமாக்குவார். சிம்ம ராசிக்கு இருக்குமிடமோ 8-ஆமிடம் எனும் துர்ஸ்தானம். இதில் என்னத்தை வளமாக்குவது. உங்களில் சிலருக்கு செயற்கை கருத்தரிப்புமூலம் வாரிசு உண்டாகும். வாழ்க்கை துணையுடமிருந்து விவாகரத்து கேட்டு, வழக்கு நடந்துகொண்டிருந்தால், அது கிடைத்து விடும்.சிலருக்கு எதிர்பாராத புதையல்போல் பணம் கிடைத்து, அதன்மூலம் கடனை அடைத்து, எதிரிகள் தொல்லையில் இருந்து தப்பிவிடுவீர்கள். இது சிலருக்கு சில வழக்குகளின் தீர்ப்பும் இந்த பெருந்தொகை சிலர் அரசியல்வாதிகள், மறைமுக அரசியலில் ஈடுபட்டு பெரும் நன்மைகள் பெறுவர்.ஆக, இந்த சனி, வாழ்வில் துட்டு என்பது எவ்வளவு முக்கியம், காசு, பேச்சு என இவை இல்லாவிட்டால் குடும்பம், வாரிசு என யாரும் மதிக்க மாட்டார்கள் எனும் பாடத்தை சொல்லிக் கொடுப்பார். பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும். எட்டியத்தளி சனியை வணங்கவும்.

கன்னி 
ஸப்தம சனி பலன்கள்

கன்னி ராசிக்கு சனி 7-ஆமிடம் எனும் ஸப்தம ஸ்தானத்தில் அமர்கிறார். கன்னி ராசியின் அதிபதி புதன். கன்னி ராசிக்கு சனி 5 மற்றும் 6-ன் அதிபதி.கன்னி ராசியின் 9, ராசி, 4-ஆமிடங்களை சனிபகவான் பார்த்து கெடுக்கிறார். கன்னி ராசியின் 9, 4-ஆமிடங்களை அட் எ டைம் பார்ப்பதால், இவர்களின் பெற்றோர்கள் சுதாரிப்பாக இருப்பது நல்லது. ஒன்று அவர்களுக்கு நோய் தாக்கம் ஏற்பட்டு, நீங்கள் மருத்துவமனையும் வீடுமாக அல்லாட நேரிடும். உங்கள் ராசியைப் பார்ப்பதால், சனிபகவான் உங்களையும் விட்டு வைக்கமாட்டார்.இந்த அலைச்சலில் ஒழுங்காகக் கோவில் குளம் போகமுடியாது. இதனால் உங்கள் தன்னம்பிக்கை டேமேஜ் ஆகும். உயர் கல்வி சற்று தகராறு ஆகும். உங்கள் ஆசைகள், திட்டம், உயர்ந்த எண்ணங்கள் இவை கீழிறங்கும். எல்லா பயலும் நல்லா இருக்கான், நான் மட்டும் கஷ்டப்படுகிறேனே எனும் சுய பச்சாதாபம் மிகும். அதற்கு காரணம் சனி, உங்கள் ராசியைப் பார்ப்பதால் மனதை சுருங்கச் செய்கிறார்.வீட்டில் அடிக்கடி தண்ணீர் பிரச்சினை உண்டாகும். அதைக் காரணமாக வைத்து குளிப்பதை நிறுத்திவிடுவீர்கள். வீடு எப்போதும் ஏனோ ஒரு பழுது தரும். வாகனம் மக்கர் ஆகிவிடும். பள்ளி குழந்தைகள் பாடம், பள்ளி, டீச்சர் இவர்களை அடிக்கடி மறந்து, உங்களை எரிச்சல் அடையச் செய்வர்.எண்ணெய் அடிப்படையில் வேலை, தொழில் கொண்டவர்கள் ஒரு மாதிரி முழிக்க நேரிடும். வயல் வைத்திருப்போர் தொடர்ச்சியாக பயிரிட முடியாத நிலை ஏனோ ஏற்படும். பால் கொடுக்கும் பசு அதுபாட்டுக்கு எங்கியாவது போய்விடும். அதைக் கண்டுபிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும், நீங்கள் பிடித்து வைத்த மீன்களை யாராவது வந்து அள்ளிக்கொண்டு போய்விடுவர். நீங்கள் இவ்வளவு நாளும் குடியிருக்கும் பகுதியில், வேண்டாத சூழ்நிலைகளை உணர்வீர்கள். இது கன்னி ராசியின் 4-ஆமிடத்தை சனி பார்க்கும் பலனாகும்.கன்னி ராசியின் 7-ஆமிடத்தில் அமர்ந்த சனி, முதலில் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்துவிடுவார். வரும் வரன், நல்ல தொழிலைக் கையில் வைத்திருப்பார். அல்லது நல்ல வேலையில் இருப்பார். உங்களில் பலர், இதுவரையில் இருந்துவந்த விருப்பத் திருமணத் தடையை உடைத்து, இப்போது வெற்றிகரமாகக் காதல் கல்யாணம் பண்ணிக்கொள்வீர்கள். சில திருமணம் வாகனம்,  வீடு இவற்றைத் தரும். சினிமா கலைஞர்கள் தங்கள் தொழிலில் மேன்மை, பொதுவெளியில் புகழ், இவை காண்பர். சில மந்திரிகள், நிறைய ஆட்கள் பழக்கம் பெறுவர். சில பூர்வீக வழக்குகள் வெற்றி தரும்.இந்த கன்னி சனி, பொதுவெளியில் ஆட்கள் பழக்கம் எவ்வளவு நன்மை தரும்? திருமணம் என்பது எத்தனை வளமாக்கும் என்பதைச் சொல்லித்தரும். திருமணங்களுக்கு உதவவும். சனீஸ்வரர் சன்னதி அர்ச்சகரின் தேவை கேட்டு உதவவும். பொழிச்சலூர் சனீஸ்வரரை வணங்கவும். 

துலாம்
ருண, ரோக, எதிரி சனி பலன்கள்

துலா ராசியின் அதிபதி சுக்கிரன். சனி பகவான், துலா ராசிக்கு 4, 5 எனும் யோகாதிபதி. இந்த கோட்சாரத்தில் அவர் 6-ஆமிடத்தில் மறைந்துள்ளார்.அங்கிருந்து அவர் 8, 12, 3-ஆமிடங்களைப் பார்வை செய்கிறார். "சனி பார்வை கெடுக்கும்'. அவர் இம்முறை துலா ராசியின் துர் ஸ்தானங்களான 8 மற்றும் 12-ஆமிடங்களைப் பார்க்கிறார்.இதனால், துலா ராசியினர் அனுபவித்த வந்த பல துன்பங்கள் நீங்கிவிடும். அனேகரின் கண்ணீர் துடைக்கப்படும். வட்டி போன்றவை அடையும். உங்களைப் பற்றிய அவதூறு பேச்சுகள் ஒழியும்.8-ஆமிடம் குறிக்கும் தீவினைகள், வேண்டாத செயல்கள் இவை சனி பார்வையால் பொசுங்கிவிடும். நீண்டநாள் நோய் பிரச்சினை நீங்கும். சில விபத்துக்கள் தவிர்க்கப்படும். சில பழிச்சொற்களும், கெட்ட பெயரும் அகலும்.அடுத்து அவர் 12-ஆமிடத்தைப் பார்த்து, நிறைய அலைச்சலை மட்டுப்படுத்துவார். நிறைய செலவுகள் கட்டுப்படுத்தப்படும். உங்களில் சிலர் இருக்கிற வேலையை விட்டுவிட்டு, முதல் போட்டு, சொந்த தொழில் ஆரம்பிக்கலாம் என திட்டம் போட்டிருந்தால், சனி அதற்கு ஸ்டாப் போர்டு வைத்துவிடுவார். இருக்கிற வேலையை ஒழுங்காகப் பாரு அது போதும் என்று கூறிவிடுவார்.வெளிநாட்டுப் பயணங்களை ஒத்திப் போடும் நிலை உருவாகும். சிலருக்கு விலங்குகளால் ஏற்படப் போகும் ஆபத்தை தடுத்து விடுவார். தூக்கம் குறையும்.சனி 3-ஆமிடத்தைப் பார்த்து, முதலில் இளைய சகோதரனை விலக்கி வைத்துவிடுவார். அப்புறம் பணியாட்களைத் தள்ளிவைத்து, "இருக்கிற வேலையை எல்லாம் நீயே செய்'' என கட்டளை இடுவார். வீடு, மனை, வாகனம் இவை வாங்க நினைத்தால், அது நடக்காது.தகவல் தொடர்பு, டிவியில் வேலை பார்ப்பவர்கள், அதனை விட்டு விலகும் சூழ்நிலை ஏற்படும். மறதி அதிகமாகும். நீங்கள் ஏதாவது ஒரு ஒப்பந்தம் அல்லது குத்தகை எடுத்திருந்தால், அது சற்று சரிவராது. வேலை, தொழில் என்ற முறையில் கெடுக்க மாட்டார் என்றாலும், தடை, தாமதம் கொடுப்பார்.சனி, துலா ராசியின் 6-ஆமிடத்திலிருந்து அதனை வளமாக்குவார் எனில் முதலில் ஒரு வேலை கொடுத்துவிடுவார். வேலை செய்யும் கம்பெனிகள்மூலம் நீங்கள் வீடு வாங்குவீர்கள். அந்த கம்பெனியின் ஷேர்கள் எனும் பங்குகள் உங்களுக்குக் கிடைக்கும்.வேலை செய்யும் நிறுவனம், போட்டி, பந்தயங்களால் உங்களை ஈடுபடச் செய்யும். பணிபுரியும் இடத்தில் உயர் கல்விக்கு உதவி செய்வர். அல்லது உங்கள் வாரிசுகளின் கல்விச் செலவை அவர்களே ஏற்றுக்கொள்வர். சினிமா கலை சார்ந்த இனங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். வெளிநாட்டுத் தூதரகத்தில் வேலை கிடைக்கப் பெறுவர்.ஆக, துலா ராசியினருக்கு வேலை என்பது எவ்வளவு முக்கியம். அதனால் என்ன பலனும், நன்மையும் கிடைக்கும் என பாடம் சொல்லித் தருவார். சனீஸ்வரர் கோவிலில் வேலை செய்பவருக்கு உதவவும். கயத்தாறு சனீஸ்வரரை வணங்கவும்.

விருச்சிகம்
பூர்வ புண்ணிய சனி பலன்கள்

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். விருச்சிக ராசிக்கு சனி, 3, 4-ன் அதிபதி. இவர் இப்போது உங்களின் 5-ஆமிடம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கு வந்து அமர்ந்துள்ளார்.சனி 5-ஆமிடத்தில் அமர்ந்து, உங்களின் 7, 11, 2-ஆமிடங்களைப் பார்த்துக் கெடுப்பார்.விருச்சிக ராசிக்கு, சனி பார்க்கும் இடமெல்லாம் திருமணம், குடும்பம் சம்பந்தப்பட்டதாகவே உள்ளது. 7-ஆமிடம் திருமணத்திற்குரிய இடம். அதனை பார்ப்பதால், விருச்சிக ராசியாரின் திருமணத்தைத் தாமதப்படுத்துவார். இந்த தாமதத்திற்கான காரணமாக உங்கள் தாயாரும், உங்கள் இளைய சகோதரன் அல்லது வரப்போகும் மாமனாராக இருக்கலாம். இவர்கள் மூவராலும் வேண்டாத விஷயங்கள் பேசப்பட்டு, ஒரு மாதிரியாக திருமண தாமதம் ஆகிவிடும். சனி பார்வை 7-ஆமிடத்திற்கு விழுவதால், வரும் வரன் சற்று மாநிறமாக அல்லது அதற்கும் குறைவான நிறத்துடன் அமைவார். சிலருக்கு தெத்துப்பல் அல்லது ஒன்றரைக்கண் அமையக் கூடும். இதெல்லா வற்றையும் சரி, சரி என்று கூறினால் கல்யாணம். இல்லாவிட்டால் 2 1/2 வருடம் தேவுடு காத்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.சனி, உங்களின் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார். 11-ஆமிடம் அரசியலைக் குறிக்கும். சரிதான். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியோடு, அரசியல் மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு, வீட்டிற்குத் கிளம்ப வேண்டியதுதான். உங்கள் மூத்த சகோதரன் வீண் மனஸ்தாபம் கொள்வார். இந்த காலகட்டத்தில் இவர்கள் சமையல் செய்தால், வாயில் வைக்க வௌங்காது. வந்த மருமகன் இம்சை தருவார். மருமகன்- மருமகளை தேடினால், கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும். இரண்டாம் திருமணம் தடையைச் சந்திக்கும்.சனி 2-ஆமிடத்தைப் பார்ப்பதால், பண வரவு தள்ளாடும். அது சரி, சனி 7-ஆமிடம் எனும் வணிகத்தையும், 11-ஆமிடம் எனும் லாபத்தையும் பார்த்துச் குறுக்கிடும்போது பண வரவு குறைவதில் அதிசயமில்லை. உங்கள் குடும்பத்திலும் ரொம்பப் பொறுமையாக, அனுசரணையாக நடந்து கொள்ளவேண்டும்.சனி இருக்கும் இடத்தைச் வளப்படுத்துவார். சனி, விருச்சிக ராசியின் 5-ஆமிடத்தில் இருப்பதால், வெகுநாளாக வாரிசுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு வாரிசு பாக்கியம் கிடைக்கும். ரொம்ப நாளாக வீடு, மனை விற்கவில்லையென்று கவலைப் பட்டவர்கள். இந்தச் சனிப்பெயர்ச்சியில் அவை விற்றுவிடும். மேலும் சிலர், அந்தப் பணத்தை வைத்து வேறு வீடு, மனை, வயல், தோட்டம், படகு, ஓடம் இவை வாங்க முடியும்.சனி, உங்களை அரசியலில் இருந்து விரட்டி விடுவாரே தவிர, மறைமுக அரசியலில் பின்புறமிருந்து செயல்படமுடியும். ஒரு மந்திரியின் பினாமி அல்லது ஆல் இன் ஆல் அழகுராஜாவாக இருப்பீர்கள். கலைஞர்கள் புதுப்பொலிவு பெறுவர். பங்குவர்த்தகம் வளம் தரும். நீர், கடல் சார்ந்த விளையாட்டு வீரர்கள் நன்மை அடைவர். சனீஸ்வரர் சன்னதிக்கு, அலங்கரிக்க தேவையான இவற்றைக் கேட்டறிந்து வழங்கவும்.அரசியல் அல்லது எந்தத் துறையில் இருந்தும் விலக்கப்பட்டாலும், அதன் பின்புலமாக அமர்ந்து எவ்விதம் செயல்படலாம் என்பதை இந்த சனி உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப் போகிறார். திருக்கொள்ளிக்காடு சனீஸ்வர பகவானை வணங்கலாம்.

தனுசு 
அர்த்தாஷ்டமச் சனி பலன்கள்

தனுசு ராசியின் அதிபதி குரு. சனி தனுசு ராசிக்கு 2, 3-ன் அதிபதி. அவர் தற்போது உங்கள் 4-ஆமிடத்தில் வந்து அமர்ந்துள்ளார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். "அர்த்தம்' என்றால் பாதி, "அஷ்டமம்' என்றால் எட்டு. 4 என்பது 8-ல் பாதி. எனவே அர்த்தாஷ்டமச் சனி எனப்படும்.தனுசு ராசியின் 4-ல் அமர்ந்த சனி அங்கிருந்து 6, 10, ராசி இவற்றை பார்த்து கெடுக்கிறார். இதன்மூலம் உங்கள் வேலை, தொழிலை ஒரு வழியாக்கப் போகிறார் எனத் தெரிகிறது.சனி ஒரு உழைப்புக்காரகர். எனவே தனது காரக வீடுகளான 6, 10-ஆமிடத்தைப் பாழாக்க மாட்டார். ஆனால் குலுக்கிவிடுவார்.நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில், ஆட்குறைப்பு செய்கிறோம் என்கிற பெயரில், நிறைய ஆட்களை வெளியேற்றி விடுவர். ஆனால் உங்களுக்கு, உனக்கு பதவி உயர்வு தரமாட்டோம், சம்பளமும்... கொஞ்சம் குறைத்துவிடுவோம். அல்லது நிறுவனத்தின் வேறு பிரிவுக்குப் போய் வேலை செய்யணும். "சரிண்ணா சொல்லு, இல்லைண்ணா வேலை கிடையாது'' என கண்டிஷன் போடுவார். நீங்கள் கொஞ்சமும் யோசிக்கக் கூடாது, உடனே மண்டையை ஆட்டி, சரியென்று சொல்லிவிட வேண்டும். ஆக, சனி வேலையில் ஒரு இக்கன்னாவைக் கொடுத்தாலும், வேலை போகவில்லையே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்.வீடு வித்த பணத்தை வைத்து கடனை அடைத்து விடுவீர்கள். வேலையில் அலைச்சலும், அதிக உழைப்பும் இருப்பதால், நோய் தொல்லை ஓடிவிடும். நின்று சண்டை போட நேரம் இருக்காது. அதனால் எதிரிகளும் இருக்க மாட்டார்கள்.அடுத்து அவர் 10-ஆமிடம் எனும் தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். சனி பார்வை தொழிலைக் கெடுக்காது. ஆனால், பரபரவென்று தொழில் நடக்காது. அசமந்தமாக, மெதுவாக தொழில் நடக்கும். நீங்கள் எந்த தளத்தில் தொழில் செய்தாலும், "யாவரம் முன்ன மாதிரி இல்லப்பா, ஏதோ கையை கடிக்காமல் ஓடுது' என உச் கொட்டுவீர்கள்.இதனால் உங்கள் மனம் அல்லாடும். மன அல்லாட்டம் கவலை தரும். இந்தக் கவலை முகப் பொலிவை அகற்றிவிடும். அப்பாடா, இப்போது சனி மிக மகிழ்வார். பயலின் ராசியை நாம் பார்த்தும், பயல் சந்தோஷமாக இருந்து முகம் பிரகாசமாக இருக்குமா? யார்கிட்ட சனியா கொக்கா என கொக்கிரிப்பார். சனி உங்கள் ராசியைப் பார்க்கும் பலனிது.சனி இருக்கும் இடத்தை வளப்படுத்துவார். சனி, தனுசு ராசியின் 4-ஆமிடத்தில் அமர்ந்துள்ளார். எனவே வீடு, மனை விஷயத்தில் உங்களுக்கு நல்லது செய்வார். முக்கியமாக ரொம்ப காலமாக விற்க முடியாமல் இருந்த நிலம், மனை, வீடு, தோட்டம் இவை இப்போது விற்றுவிடும். அந்தப் பணத்தை வைத்து வேறு வீடு வாங்குவீர்கள். அது பழைய வீடாக அமையும். இந்த வீடு விற்கும் அலைச்சல் அனுபவமாக மாறும். இந்த அனுபவத்தைக் கொண்டு தெரிந்தவர்களுக்கு உதவுவீர்கள். இந்த உதவி உங்களையும் அறியாமல் ஒரு உப தொழிலாக மாறிவிடும். சனிக்கு உழைப்பவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அவரும் கூடசேர்ந்து இந்த உழைப்பை அதிகப்படுத்துவார்.உங்களுக்குச் சொந்த பிரச்சினையிலிருந்து கற்கும் அனுபவங்கள், எவ்விதம் புது தொழில் தொடங்க முடியும் எனும் பாடத்தை, சொல்லிக் கொடுக்கப் போகிறார். சனீஸ்வரர் சன்னதிக்கு கட்டட பழுது சரி செய்துகொடுங்கள். குச்சனூர் சனியை வணங்கவும்.

மகரம் 
தைரிய வீரிய சனி பலன்கள்

மகர ராசியின் அதிபதி சனி. மகர ராசிக்கு ராசி மற்றும் 2-ஆம் அதிபதி. தற்போதைய கோட்சாரத்தில், இவர் உங்களின் 3-ஆமிடம் எனும் தைரிய ஸ்தானத் திற்கு வந்துள்ளார்.3-ஆமிடத்தில் அமர்ந்த சனி, மகர ராசியின் 5, 9, 12-ஆம் வீடுகளைப் பார்த்து கெடுக்கிறார்.சனி 5-ஆமிடத்தைப் பார்க்க ஆரம்பிக்கும்போதே, மகர ராசியினரின் காதல் முற்றுப்புள்ளி பெற்றுவிடும். "சினிமாவில் நடித்தே தீருவேன்'' என ஒற்றைக்காலில் நிற்கும் பிள்ளைகளை, சனி ஒரு அறை கொடுத்து, ஒழுங்காயிரு என மிரட்டிவிடுவார். சினிமா ஆசை போயே போச்சு கதைதான். ஒரே இடத்தில் அமர்ந்து, பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு, அதில் சீரற்ற நிலை கொடுத்து விடுவார். ஆரோக்கியம் பேண நடைப்பயிற்சி, ஜிம், ஓட்டம் என இவற்றில் ஈடுபட்டவர்களைப் பார்த்து, சனி எரிச்சல் அடைந்து, வீட்டில் இருக்கிற வேலையை ஒழுங்காகச் செய் என்று கூறிவிடுவார். ஃபேஷியல், பெடிக்யூர், ஜாலியாக ஊர் சுற்றுவது என எல்லாத்துக்கும் கட் பண்ணிவிடுவார். விருந்து விழாக்கள் ஏற்பட்டாளர்கள் அதிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை உருவாகும்.சனி, தனுசு ராசியின் 9-ஆமிடத்தைப் பார்க்கிறார். 9-ஆமிடம் என்பது தர்ம ஆன்மிக ஸ்தானம். சனி பார்வை தர்ம சிந்தனையை குறுக்கும்.சனி உங்கள் 12-ஆமிடத்தையும் பார்ப்பதால், ஆன்மிக யாத்திரைகளுக்கு தடை விதித்துவிடுவார். அதுபோல் உயர் கல்வி கற்க வெளிநாடு போகவேண்டும் என திட்டம் உள்ளவர்கள் அதில் தடையைக் காண்பர். பேரன்- பேத்திகளைப் பார்க்க வெளிநாடு செல்லும் கனவு, பிளான் கொண்டவர்கள் அது இயலாமல் போகக்கூடும். குலதெய்வம், இஷ்டதெய்வக் கோவில்களுக்குப் போகும் பயணம் தகராறு அடையும். சில ஆன்மிக வைதீக பெருமக்கள் வெளியூர், வெளிநாடு எனப் பறந்து சேவை ஆற்றுவதற்கு சனி ஏனோ ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிடுவார். ஆக, மகர ராசியின் 5, 9, 12-ஆம் வீடுகளைப் பார்த்து, ஆரோக்கியம், ஆன்மிகம், பயணம் இவற்றை சுருக்கிவிடுவார் எனத் தெரிகிறது.சனி, உங்களின் 3-ஆமிடத்திலிருந்து அதனை வளமாக்குவார். 3-ஆமிடம் என்பது வீர, தைரிய ஸ்தானம். ஏனோ உங்களுக்கு ஒருவித தைரியம், பரபரப்பு மனதில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அதனால் இந்த மன உறுதி, உங்களை ஆட்டைத் தூக்கி குட்டியில் போட வைக்கும். குட்டியைத் தூக்கி ஆட்டில் போட வைக்கும். ஒண்ணு கிடக்க ஒன்னை பண்ணி விடுவீர்கள். நீங்கள்தான் ஆன்மிக பயணம் போக முடியாதே தவிர, பிறரை பயணத்திற்கு அழைத்துச்செல்லும் அமைப்பை ஆரம்பித்து விடுவீர்கள்.சிறு தூரப் பயணங்கள் நன்கு ஆகிவிடும். டி.வி.யில் சேர்ந்து புகழ் பெறுவீர்கள். கைபேசிமூலம் உயர் கல்விக்கும் டியூசன் எடுக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்களில் சிலர் செய்தி பத்திரிகையில், பகுதி நேர நிருபராக பணியாற்ற ஆரம்பித்து விடுவீர்கள்.ரொம்ப அலையாமல், இருந்த இடத்திலிருந்தே உழைத்து சம்பாதிப்பது எப்படி எனும் பாடத்தை சனி சொல்லிக் கொடுக்கப் போகிறார். சனீஸ்வரர் சன்னதிக்கு ஒலி, ஒளி வசதி செய்து கொடுங்கள்.மகர ராசிக்கு ஏழரைச்சனி முடிந்துவிட்டதால், திருநள்ளாறு சென்று ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு வாருங்கள்.

கும்பம்

தன ஸ்தான சனி பலன்கள்

கும்ப ராசியின் அதிபதி சனி. கும்ப ராசிக்கு சனி 12 மற்றும் ராசி அதிபதி. இப்போது இந்த சனி தன, வாக்கு என 2-ஆம் ஸ்தானத்தில் வந்து அமர்ந்துள்ளார்.சனி, கும்ப ராசியின் 2-ஆமிடத்தில் அமர்ந்து, உங்களின் 4, 8, 11 -ஆமிடங்களை பாழ் செய்கிறார்.கும்ப ராசியின் 4-ஆமிடத்தை சனி பார்ப்பதால், கும்ப ராசி குழந்தைகளின் படிப்பு ரொம்ப சுமாராகிவிடும், பாஸாவதே பெரிய விஷயமாகிவிடும். வீட்டில் அடிக்கடி பழுது பார்க்கும் செலவுகள் வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். வயலில் விளைச்சல் சுணங்கும். தோட்டப் பயிர்களில் கவனம் தேவை. பால் பண்ணை வைத்திருப்பவர்கள், பால் விற்பனை நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். திரையரங்கு உரிமையாளர்கள், உணவு விடுதி வைத்திருப்போர் இவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வீடு, விடுதிகள், கல்யாண மண்டபங்கள் இவற்றில் உள் அலங்காரம் செய்யும் இண்டீரியர் டெக்கரேஷன் மனிதர்கள் வேலையில் எந்தக் குறையும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.சனி கும்ப ராசியின் 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால், நிறைய துன்பங்கள், உடல்நலக் குறைவு, மனக்கஷ்டம் இவை மறையும். சனி ஆயுள்காரகர். அவர் ஆயுள் ஸ்தானமான 8-ஆமிடத்தைப் பார்ப்பதால், ஆயுள் விருத்தி கொடுப்பார்.சனி கும்ப ராசியின் 11-ஆமிடத்தைப் பார்ப்பதால், அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்வு பாழாகும். தேர்தலில் நின்றால் தோல்வி அடைந்துவிடுவர். மூத்த சகோதரனின் நிலை கவனிக்கப்பட வேண்டும். சமையலைத் தொழிலாகக் கொண்டவர்கள், வேறு ஒருவர் பெயரில் சமையல் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் பகுதி, அபார்ட்மெண்ட் என எந்தத் தேர்தலில் நின்றாலும் வெற்றிபெற இயலாது. 11-ஆமிடம் என்னும் ஆசைகள் நிறைவேறும் இடத்தை சனி பார்ப்பதால், நீங்கள் என்ன நினைத்தாலும், ஆசைப்பட்டாலும் அனைத்தும் புஸ்வானமாகிவிடும்.சனி இருக்குமிடத்தை வளமாக்குவார். சனி கும்ப ராசியின் 2-ஆமிடத்தில் வந்து அமர்ந்துள்ளார். எனவே தன்னம்பிக்கையாக செல்வவளம் பெருகும். நீங்கள் எப்போதோ செய்து, மறந்துபோன முதலீட்டு பணம் இப்போது வந்துசேரும். பூர்வீக சொத்துகள்மூலமும் பணம் வர வாய்ப்புண்டு. சிலரின் குடும்பத்தில் இன்ஷியூரன்ஸ் மூலம் பணம் கிடைத்தபிறகும் வாயும், கையும் சும்மா இருக்குமா வண்டை வண்டையாகப் பேசுவீர்கள், யாரையும் மதிக்கவும் மாட்டீர்கள். நிறையப் பணம் வந்தாலும் அதனை சேமிக்க மாட்டீர்கள், தாம் பூம் என செலவு பண்ணிவிடுவீர்கள். எல்லாம் ஒரு பெருமைக்குத்தான். வேறென்ன?பணம் வரும் வாய்ப்புக்களைப் பற்றியும், குடும்பத்தின் அவசியம் பற்றியும், சனி உங்களுக்கு பாடம் எடுக்கப் போகிறார். சனீஸ்வர சன்னதிக்குத் குருக்களுக்கு தாராளமாகக் காணிக்கை செலுத்தவும். ஏழரைச்சனி நடப்பு. ஆதலால் திருநள்ளாறு சென்று வணங்கவும்.

மீனம் 

ஜென்மச் சனி பலன்கள் 

மீன ராசி அதிபதி குரு. மீன ராசிக்கு சனி 11, 12-ஆம் அதிபதி. அவர் தற்போது உங்கள் ராசியில் வந்து, ஜென்மச்சனியாக அமர்ந்திருப்பார். ஏழரைச்சனியில் ஏற்கெனவே 2 1/12 வருடம் விரயச் சனியாகவும், இந்த நடப்பு 2 1/2 வருடம் ஜென்மச் சனியாகவும், அடுத்த 2 1/12  வருடம் பாதச் சனியாகவும் செல்வார்.சனி, உங்கள் மீன ராசியிலிருந்து 3, 7, 10-ஆமிடங் களைப் பார்க்கிறார். 3-ஆமிடம் தைரியஸ்தானம். அதனைப் பார்த்த சனி, மீன ராசியினரை ஏனோ ஒருமாதிரி கோழையாக்கிவிடுவார். வேறு சிலருக்கு, எவனாவது குருவி லேகியம் வித்தால், வாங்கி சாப்பிடலாமா என்கிற ஸ்டேஜுக்கு நிலைமை வந்துவிடும். இதனால் மனைவி முறைத்து வெறுத்துவிடுவாள். சனிக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிற விதத்தில், 3, 7-ஆமிடத்தை கெடுத்த புண்ணியம் கட்டிக்கொள்வார். இளைய சகோதரன் மற்றும் மாமனாருடன் மன வேற்றுமை ஏற்படும். இதன் நடுவில் உங்கள் மாமியாரும் உங்களைத் திட்ட ஆரம்பித்து விடுவாள்.சனி, 3-ஆமிடத்தைப் பார்ப்பதால், வீடு விற்கும் விஷயம் சொதப்பிவிடும். அதனால் வீடு, மனை, வயல் விற்பனை விஷயத்தில் இருந்து ஒதுங்கி இருக்கவும்.குத்தகை, ஒப்பந்தம் எடுத்து வியாபாரம், சொந்தத் தொழில் செய்ய வேண்டாம். இப்போது எப்படி தொழில், வணிகம் போகிறதோ அதை அப்படியே மெயின்டென் பண்ணுங்கள்.சனி, 7, 10-ஆமிடங்களைப் பார்ப்பதால் தொழில், வியாபாரம் கெடாமல் இருந்தாலே பெரிய விஷயம். சற்று மந்தமாகப் போனாலும், முன்னேறுகிறேன் பேர்வழி என எதையாவது செய்து தொலைக்காதீர்கள். உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா என்று போய்விடும். சனி, தொழில் ஸ்தானங்களைப் பார்ப்பதால், அதனை கெடுக்க மாட்டாரேயொழிய, விறுவிறுப்பாக, பரபரப்பாக செயல்பட விடமாட்டார். இதனை நன்கு புரிந்துகொள்ளுங்கள். ஏதோ இந்த மட்டும் தொழில் நடக்கிறதே என திருப்திபட்டுக் கொள்ளவேண்டும்.சனி ராசியில் இருப்பதால், அதனை கெடுக்க மாட்டார். சனி ஒரு ஸ்திர, இரும்பு, வலிமை காரகர். எனவே எந்த துன்பம் வந்தாலும், அதனை எதிர்த்து வலிமையுடன் போராடுவீர்கள். நேர்கொண்டு நின்று சமாளித்துவிடுவீர்கள். ஜென்மச்சனி நிறைய துன்பங்கள் கொடுத்தாலும், அதனை சரிபண்ணி மீண்டும் வருவீர்கள். எல்லாரும் சனியைக் கண்டு அஞ்சுவார்கள். ஆனால் அப்படியல்ல. அவர் ஒரு நேர்மையான உழைப்புக்காரர். அதனால் நீங்கள் தர்மமாக உழைத்தால், உங்களுக்கு வரும் துன்பங்களை அவரே புறந்தள்ளி விடுவார். நேர்மையாக உழைப்பவர்களை சனிபகவான் ஒருபோதும் கைவிடமாட்டார். மீன ராசியினருக்கு, ஜென்மச் சனியாகி எந்த துன்பம் வந்தாலும், அதனை நியாய, நேர்மையுடன் போரிட்டு வெல்வது எப்படி எனச் சொல்லிக் கொடுக்கப் போகிறார். சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் விளக் கேற்றி வணங்கவும். சேந்தமங்கலம் சனியை வணங்கவும்.