எப்போதுமே நிலைத்து நிற்கும் ஞானத்தின் அதிபதியும் தாய்வழிச் சொத்துக்கு சொந்தக்காரரும் அதர்வண வேதத்தின் ஆலமரம் போன்றவரான கேதுபகவான், ராகுவை போன்ற சாயாகிரகம் என்றா லும் பலன்களை மிக வேகமாகவும் கொடூரமாகவும் கொடுப்பவர். இப்படிப்பட்டவர் சுப கிரகமான குரு மகா தசையில் தன் புக்தியில் குருபகவானோடு இணைந்து எப்படி செயல்படுவார் என்பதை ஆய்வு செய்வோம்.
மேஷம்
மேஷத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படச் செய்ய நவீன திட்டம் ஒன்றில் பளிச்சிடும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களது உதவி இப்போது தேவைப்படும். அரசு பணியாளர்கள் உத்தியோகத்தில் முழு கவனம் வேண்டும். சிறு சிறு பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும். மங்கையரால் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படும். செலவின் கட்டுக்கடங்காது. கலைதுறையின் பல வழிகளில் இடையூறுகளை சமாளிக்கவேண்டும். சுற்றுவட்டாரத்தில் உதவி கிடைக்காது.இந்தகால நேரங்களில் (கேட்ஸ் ஐ) வைடூரிய மோதிர அணியுங்கள். விநாயகப் பெருமானை செந்தாமரை பூவை சமர்பித்து குறைகளை கூறி வணங்கவும்.
ரிஷபம்
ரிஷபத்தில் தாய்வழி சொந்தத்தில் இருந்துவந்த நீண்டநாள் பகை இப்போது முடிவுக்கு வரும். வெளிநாடு, வெளியூர் செய்திகள் ஆனந்தமடையச் செய்யும். பழக்கமில்லலா பலர்
எப்போதுமே நிலைத்து நிற்கும் ஞானத்தின் அதிபதியும் தாய்வழிச் சொத்துக்கு சொந்தக்காரரும் அதர்வண வேதத்தின் ஆலமரம் போன்றவரான கேதுபகவான், ராகுவை போன்ற சாயாகிரகம் என்றா லும் பலன்களை மிக வேகமாகவும் கொடூரமாகவும் கொடுப்பவர். இப்படிப்பட்டவர் சுப கிரகமான குரு மகா தசையில் தன் புக்தியில் குருபகவானோடு இணைந்து எப்படி செயல்படுவார் என்பதை ஆய்வு செய்வோம்.
மேஷம்
மேஷத்தில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படச் செய்ய நவீன திட்டம் ஒன்றில் பளிச்சிடும். உடன்பிறந்த ஒருவருக்கு உங்களது உதவி இப்போது தேவைப்படும். அரசு பணியாளர்கள் உத்தியோகத்தில் முழு கவனம் வேண்டும். சிறு சிறு பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுக்கும். மங்கையரால் எதிர்பார்த்த நன்மை கிடைக்காது. குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்படும். செலவின் கட்டுக்கடங்காது. கலைதுறையின் பல வழிகளில் இடையூறுகளை சமாளிக்கவேண்டும். சுற்றுவட்டாரத்தில் உதவி கிடைக்காது.இந்தகால நேரங்களில் (கேட்ஸ் ஐ) வைடூரிய மோதிர அணியுங்கள். விநாயகப் பெருமானை செந்தாமரை பூவை சமர்பித்து குறைகளை கூறி வணங்கவும்.
ரிஷபம்
ரிஷபத்தில் தாய்வழி சொந்தத்தில் இருந்துவந்த நீண்டநாள் பகை இப்போது முடிவுக்கு வரும். வெளிநாடு, வெளியூர் செய்திகள் ஆனந்தமடையச் செய்யும். பழக்கமில்லலா பலர் வேண்டிய உதவி பெறுவார்கள். உங்களிடமிருந்து. குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விஷ சந்துக்களால் வேதனை வரும். கலை துறையினருக்கு பல சந்தர்ப்பம் உங்களை புகழடையச் செய்யும். வியாபாரத்தை அதிகரிக்கச் செய்யலாம். மாணவ செல்வங்கள் விரும்பும் பாடத்தில் முதல் நபராக திகழலாம்.
மிதுனம்
விவசாயத்தில் தன்னிறைவு துறை சார்ந்த நஞ்சை, புஞ்சை, தோட்டம் எஸ்டேட், மின்துறை, இராணுவம், பாதுகாப்பு கெமிக்கல் இத்துறையில் இருப்போருக்கு எதிர்பாரா நற்செய்தி, முன்னேற்றம் இவற்றை எதிர்பார்க்கலாம். கடன்கள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். உடல் உபாதை இருக்கும் என்றாலும் அவை சோர்வை தராது. சொந்த பந்தம் உறவை அதிகரிக்கச் செய்யும். பொருளாதாரம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கச் செய்யும். ஆடம்பரப் பொருட்கள் வீடு தேடிவரும்.
கடகம்
உடன்பிறந்த உறவுகளால் ஒன்றன், பின் ஒன்றாக பல தொல்லைகள் அணிவகுக்கும். எழுத்தாளர்கள் பலரால் ஏமாற்றப்படலாம். கூட்டுத்தொழில் வேண்டாம். ஏமாற்றமடையச் செய்யும். சுண்டுவிரலை அடுத்த புதன் மேட்டில் கரும்புள்ளி உதயமானால் பிறரிடம் வயதான காலத்தில் ஏமாற நேரிடும். புதிய ஒப்பந்தங்கள் இப்போதைக்கு வேண்டாம். தந்தை- மகன் கூட்டு வியாபாரம், லாபம் தராது. இல்லறத்தில் இனிமை காண இயலாது. நெருங்கிய நண்பர்களால் ஏமாற்றபடலாம். வெள்ளி பிரஸ்லெட் அணியவும்.
சிம்மம்
தன்னம்பிக்கையோடு எந்த காரியத்தில் ஈடுபடலாம். வெற்றியும் எதிர்பார்க்கலாம். எதிர்பாராத நன்மை தெரியவரும். அரசு பணியார்கள் வீண் வம்பை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை வரும். உஷார். கணவன்- மனைவி உறவில் எந்த குறையும் இல்லை. கடன் தொல்லை கணிசமாக குறையும். வீடு, மனை, தோப்பு, அசையா சொத்தில் கணிசமாக லாபம் வரும். நண்பர்களிடம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். யாவரும் உங்கள் வார்த்தைக்கு அடிபணிந்து நடப்பார்கள். சுற்றத் தாரிடம் நன்மதிப்பை பெறலாம். மொத்தத்தில் கெடுதல் இல்லா பலன்.
கன்னி
அரசியலில் ஈடுபாடுடையோர் அட்ட காசமான திருப்பங்களை எதிர்பார்க்கலாம். புகழ், பெருமை, கௌரவம் தடையின்றி வரும். இருக்கும் கடன் தொல்லை படிப்படியாக விடை கொடுக்கும். சுற்றமும் நட்பும் பேராதரவு தருவார்கள். வாகன பயணத்தில் கவனச் சிதறல் கூடாது. வெளியூர், வெளிநாடு செல்லும் பயணம் மன நிறைவைத்தரும். செவ்வாய்தோறும் முருகப்பெருமானை வணங்கவேண்டும். வீட்டில் வடமேற்கு மூலை பிரகாசமாக இருக்கவேண்டும். முதல் பிரசவ பெண்கள் அங்கே தங்குவது நல்லது. வாஸ்து ரீதியாகவும் நல்லவை நடக்கும்.
துலாம்
காலம் சென்ற, பாட்டன், முப்பாட்டன் சொத்து இருந்தால் வந்துவிடும். கையில் கீழ் செவ்வாய் மேட்டில் ரேகை உதயமாகி சனி மேட்டை அடைந்திருக்கும். திருமண வயதில் இருப்போர் தடைப்பட்ட திருமணம் கைகூடும். இளம் காதலர்கள் வேகமாக செயல்படக்கூடாது. ஜாதகத்தில் சந்திரனோடு கேது காணப்பட்டால் தடைகள் வரும். கன்னி வினாயகரை வணங்கவேண்டும். குழந்தைகளால் குடும்ப கௌரவம் பெருகும். கலை துறையினர், இரும்பு வியாபாரம், கல்வி நிறுவனம் நடத்து வோர் புதிதாக விரிவாக்கம் செய்யலாம்.
விருச்சிகம்
கணவன்- மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செயல்பட வேண்டும். தேவையற்ற விவகாரங்களில் தலையீடு கூடாது. மனச்சோர்வு ஏற்படலாம். திடீர் வரவை எதிர்பார்த்து முதலீடு வேண்டாம். சில பொருட்கள் காணாமல் திருட்டு போகலாம். எதிலும் விழிப்புணர்ச்சியுடன் செயல்படவும். ஆண்கள்- பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை வேண்டும். அசையா சொத்து வரும்.
தனுசு
பணபுழக்கம் திருப்தியை தராது. எல்லா காரியங்களிலும் ஒரு தடைபின் தொடரும். இதனால் மன உளைச்சல் வரும். முத்து அல்லது ஒப்பல் மோதிரம் அணியவும். கணவன்- மனைவியிடையே மன பேதம் ஏற்படலாம். காலபைரவரை வணங்கவும். ஒரு சுபகாரியம் காரணமின்றி தடைப்படும். உயர் அதிகாரிகளால் நற்செய்தியை எதிர்பார்க்கலாம். புனித ஸ்தலம் போகலாம். அருளாசி பெறலாம். விவசாயத்தில் நல்ல மகசூலை எதிர்பார்க்கலாம். வலது கையில் வெள்ளி பிராஸ்லட் அணிதல் நல்லது.
மகரம்
பெரும் பணக்காரராக பவனி வரலாம். ஆடம்பர பொருள்மீது மோகம் இருந்தால் பெரும் முயற்சியால்தான் கிடைக்கப்பெறும். உடல் சார்ந்த கவலை மறையும். இது ஒரு இனிமையான காலம். மூத்தோர் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். சேமிப்பு அதிகமாகும். குழந்தைகளின் கல்வி மற்றும் சுபநிகழ்ச்சிக்கா வேண்டிய பணம் தடையின்றி வரும். கல்வியில் தடையிருந்தால் அடியோடு மறையும். நாராயணனை வணங்கவும்.
கும்பம்
குடும்பத்தில் அன்யோன்யம் நிலைக்கும். வேலையாட்களால் இருந்த மன போராட்டம் நிம்மதியைத் தரும். தடைப்பட்ட நேர்த்தி கடன் மங்கள கரமாக நிறைவேறும். எதிர்பாரா உதவிக்கு பஞ்சம் இருக்காது. வெளிநாடு செல்ல நல்ல சந்தர்ப்பம் வரும். பலருக்கு அரசாங்க விருதுகள், பாராட்டு மனம் மகிழச்செய்யும். சுயதொழில் முன்னேற்றம் நிச்சயம். ஸ்பெகுலேசன் துறையிலும் வெற்றியை எதிர்பார்க்கலாம்.
மீனம்
மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். சிறுசிறு முட்டுக்கட்டைகள் வரலாம். உறவினர்கள் உதவி தாராளமாக எதிர்பார்க்கலாம். கண் உபாதை வந்து மறையும். பணவரவு சீராகவே இருக்கும். வாழ்க்கை தரம் உயரும் அரசு பணியாளர்கள் கடின உழைப்பை செய்யவேண்டிய கட்டாயம் வரும். நண்பர்களால் சட்டசிக்கல் ஏற்பட்டு கோர்ட், வழக்கு என சிக்கல் வரலாம். இந்த கால அளவில் புது ஒப்பந்தம் வேண்டாம்.
செல்: 93801 73464