Advertisment

பாலமுருகன் பதில்கள் 04.07.2025

Q&A

எனக்கு உடல்நிலை சரியாக இல்லை, எப்பொழுது சரியாகும்? ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்?-சக்திவேல், சிங்காநல்லூர்.

Advertisment

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு சனி உச்சம் பெற்றிருந்தாலும் வக்ரகதியில் இருப்பதால் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். ரிஷப லக்னத் திற்கு 3, 8-ஆம் இடங்கள் மாரக ஸ்தானமாகும். மாரக ஸ்தானமான 8-ஆம் வீட்டில் இருக்கக்கூடிய ராகுவுடைய தசையில் மற்றொரு மாரக ஸ்தானமான 3-ஆம் வீட்டில், 8-ஆம் அதிபதி குரு இருப்பது அதிலும் குறிப்பாக ராகு தசையில் குரு புக்தி நடப்பது சாதகமற்ற அமைப்பாகும். ராகுவுக்கு 8-ல் அமையப்பெற்ற குரு புக்தி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, இயற்கை உணவுகளாக  சாப்பிடுவது நல்லது. வரும் 6-11-2025-ல் குரு புக்தி முடிந்து சனி புக்தி வந்தால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

Advertisment

எப்பொழுது அரசு வேலை கிடைக்கும்? திருமணம் எப்போது நடைபெறும்?-பழனிக்குமார், இராமநாதபுரம்.

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ல் சூரியன் அமைந்து திக்பலம் பெற்று, சூரியனை 4-ல் இருக்கக்கூடிய சந்திரன் பார்ப்பதும் 2-ல் இருக்கக்கூடிய குரு பார்ப்பதும் அற்புதமான அமைப்பு ஆகும். ஜீவனக்காரகன் சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஆரம்பத்தில் சில தடைக்குப் பிறகு அனுகூலங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தற்போது ராகு தசையில் புதன் புக்தி உங்களுக்கு நடக்கிறது. புதன் புக்தி 1-9-2026 முடிய நடக்கிறது. கேது நட்சத்திரத்தில் அமையப்பெற்ற புதன் புக்தி நடப்பதும் அடுத்து கேது புக்தி நடக்க இருப்பதும் அவ்வளவு சாதகமான அமைப்பு அல்ல. 2027 செப்டம்பருக்கு பிறகு ராகு தசையில் சுக்கிர புக்தி நடக்கின்றபொழுது அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய இடங்களில் ஒரு நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகங்கள் உண்டு. வேலைவாய்ப்பு ரீதியாக ராகு தசையைவிட அடுத்து வரக்கூடிய குருமகா தசையில் ஒரு கௌரவமான நிலையினை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

நான் சில நாட்களாக மூச்சுதிணறல் மற்றும் வாயு தொல்லையால் அவதிபட்டுக் கொண்டிருக்கின்றேன். இந்த நோய் எப்பொழுது சரியாகும் என்று கூறுங்கள்? -அண்ணாதுரை, ஈரோடு.

மக நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது குரு தசையில் 12-ல் உள்ள சனி புக்தி 20-9-2027 முடிய நடக்கி றது. விருச்சிக லக்னத்திற்கு சனி 3-ஆம் அதிபதி என்ற காரணத்தினால் ஒருசில ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகிறது. சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு அஷ்டமச் சனி நடப்பதும் ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதும், அஷ்டமச் சனி நடப்பதும் 3-ஆம் அதிபதி புக்தி நடப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். இயற்கை உணவுகளாக சாப்பிடுவது நல்லது. ராகு- கேது பெயர்ச்சிக்கு பிறகு 2026 டிசம்பருக்கு பிறகு ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. சனி புக்தி நடப்பதால் பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நல்லது.

bala040725
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe